அன்பின் வாசலே - ரமலான் நோன்பு

ஜூன் 14, 2016

காலம் எல்லாவற்றையும் அழகாக நகர்த்திக்கொண்டே சென்றுக் கொண்டிருக்கிறது. இயற்கை என்னும் இறைவனின் பணியாளன் அதை சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிறான். சூரியன் வளர்ந்து மறைகிறது. நிலவு தேய்ந்து வளர்கிறது. வானம் காய்ந்து பொழிகிறது. மின்னல் மண்ணை துளைக்கிறது. இது இயற்கையின் மேலோட்டமான பூவுலக சஞ்ஜாரம். சல்லடையாய் சரிந்துகிடக்கும் பாலை நில மணலில், சாய்ந்து வளைந்திருக்கும் நீல வானத்தில்,  பிறை தென்பட்டுவிட்டது. இஸ்லாமிய தோழர்கள் நோன்பு திறக்க தயாராகிவிட்டனர். இது இறை அச்சத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாம். முதலில் இயற்கையில் தொடங்கியவன் பின்னர் இஸ்லாம், இறைவன் என்று எழுதுகிறானே என நீங்கள் நினைக்கலாம். மார்க்கங்கள் அனைத்தும் மகத்துவமானவர்களை சுமந்து கொண்டிருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த மகத்துவ தத்துவம் தான் இன்றளவும் மனித சமூகத்தின் அஸ்திவாரமாக இருக்கிறது. இயற்கையையும் இஸ்லாமையும் இறைவனையும் முக்கிய தரவுகளாக, சங்கிலித் தொடராக, முன்னிறுத்தி பார்க்க வேண்டும் என்ற நோக்கில் பயணப்படுகிறது இந்தக் கட்டுரை.
வழிபாடு, பிரார்த்தனை, தொழுகை ஆகிய இந்த மூன்று சொற்கள் அடியொற்றி மரபாய் நம் சமூகத்தில் புரையோடி இருப்பவை. இதன் பொருளை தனித்தனியாக நாம் பகுத்தாலும் வெவ்வேறாய் பிரித்தாலும் இந்த சொற்களில் ஒளிந்து கிடப்பது இறைவனின் நினைவு. இதையே இஸ்லாம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. எங்கேயோ படித்த நபிகள்நாயாகதின் உரையாடல் எனக்கு நினைவுக்கு வருகிறது. உணவு பொருட்களை வீணடிப்பதும் தெருவில் கொட்டுவதும் இறவனுக்கு கோபம் உண்டாக்கும்  செயலாகும்.  இதனால் வீட்டில் ‘பராகத்’ என்று சொல்லப்படும் அபிவிருக்தி இல்லாமல் போய்விடும் என்றும், உணவு உண்கையில் உணவு கீழே சிந்துக்கூடும் அவ்வாறு சிந்தும் உணவை எடுத்து உண்பது இறைவனுக்கு உகந்த செயல் எனவும் குறிப்பிடுகிறார் நபிகள் நாயகம். இதை இறை அச்சத்தின் வெளிப்படாகவே நான் கருதுகிறேன் . நாகூர் ஹனீபா என்ற இஸ்லாமிய பாடகர் இருந்தார். அவரின் பாடல்கள் பெருவாரியான மக்களை மார்கம் கடந்தும் கவர்ந்திருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் பாடலில் தேடும் நேயர், நெஞ்சங்களில் குடி இருப்பவன், தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன், வாடும் இதயம் மலர்வதற்க்கு வழிவகுப்பவன், வாஞ்சையோடு யாவருக்கும் துணைநிற்பவன், என்று வரும் வரிகள் அதி அற்புதம் நிறைந்தவையாக இருந்தாலும் அது மார்கம் சாராமல் மனிதம் சார்ந்தது பொதுவெளியில் இறைத் தன்மையை, தொழுகையின் தேவையை, புனித மெக்கா நகரின் அழைப்பை நினைவுபடுத்துகிறது.

அஞ்சுவது அடிபணிவது இறைவனுக்கே என்னும் இஸ்லாமின் கோட்பாடு வள்ளுவனுடன் சில நேரங்களில் ஒத்துப்போகிறது. அது எவ்வாறு என்பவர்களுக்கு இதோ விளக்கம் வள்ளுவன் சொல்கிறான்.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து

தன்னை கண்டு வியப்பது சிறுமை எனவும் தன்னை கண்டு பணிவது பெருமை எனவும் வள்ளுவர் கூறுகிறார். இஸ்லாமும் அஞ்சுவது அதாவது பணிவது என்பது இறைவனாகிய எல்லாவித பெருமைக்குறியவனை மட்டுமே என்று குறிப்பிடுகிறது.

வயது முதிர்ந்த காலத்தில் சாக்ரடீஸ் ஏதென்ஸ் நகர மக்களை பார்த்துக் கேட்டுக்கொண்டான். ஓ ஏதென்ஸ் நகர மக்களே ! என்னை அறிவாளி என்று அழைக்காதீர்கள், நான் இளைஞனாக இருந்தபோது எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணிகொண்டிருந்தேன்.

வயது அதிகமாக அதிகமாக நான் கற்றதெல்லாம் ஒன்றுமே இல்லை எனவும்,  இன்னும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது எனவும், பணிவோடுச் சொன்னான். அப்போதிலிருந்து ஒட்டுமொத்த ஏதென்ஸ் நகரமே அவனை ஞானி என்று அழைத்தது.

இது தான் இறை அழைத்தலின், இறை அச்சத்தின் வெளிப்பாடு. இதை இஸ்லாமும் வலியுறுத்தி வருகிறது. பிறையில் தொடங்கிய நோன்பு பிறையில் பெருவிழா ரமலானாக நிறைவடைய இருக்கிறது. உலகம் நலன் பெற, நாம் யாவரும் சகோதர பாங்கோடு  மார்கம் மாறுபட்டிருந்தாலும் இயல்பில் நாம் மனிதர்கள் என்கிற அடிப்படையில் மகிழச்சியை மட்டுமே உலத்தில் விதைத்து, மகத்துவம் கண்டு, வல்லான் வழி காண ஈத் பெருவிழாவின் முன்னோட்ட நகர்வுகளை என் சிற்றறிவிற்க்கு எட்டிய அளவில் பகிர்ந்து கொண்டேன். உங்கள் கருத்துக்களையும் அறிய வேண்டும் என்கிற ஆவலோடு இருக்கிறேன். நன்றி !

வெற்றி

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

மணி [robowhiterose@gmail.com]

வாழ்த்துகள் இஸ்லாமிய சகோதர்கள் உண்மையான பக்தி நோன்பிற்க்கு இனணயில்லை

சமீபத்திய கட்டுரை
Health or Appearance : Should one be fat at all ?
கலை விழா 2017
Who Killed Anitha
யார் இந்த திருமுருகன் காந்தி ?
Piyush Manush Speaks about Kathiramangalam Issue | Radio Veritas Tamil
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter