ஆதார் எண் மூலம் மின்னணு பணப்பரிமாற்றம்... மத்திய அரசின் மொபைல் அப்ளிகேசன்

டிசம்பர் 26, 2016

ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை அரசு ஊக்குவித்து வரும் நிலையில், டெபிட், கிரெடிட் கார்டுகள், செல்ஃபோன் ஆகியவை ஏதுமின்றி பணப் பரிவர்த்தனை செய்வதற்கான செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.

 

அதன்படி, வணிகர்களிடம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திலான செல்ஃபோன் இருக்க வேண்டும். அதில் Adhaar Payment APP என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. வாடிக்கையாளர் தனது ஆதார் எண்ணை ஒருமுறை வணிகரின் செல்ஃபோனில் இந்தச் செயலியில் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, அந்த வணிகரிடம் பொருள் அல்லது சேவையை வாடிக்கையாளர் பெறும்போது, அதற்கான தொகைக்கு வணிகரின் செல்ஃபோனில் ஆதார் செயலியைத் திறந்து, தனது கைவிரல் ரேகையைப் பதிவிட்டால் போதும். அவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து வணிகருக்குச் சேர வேண்டிய தொகையை பரிமாற்றம் செய்து விடலாம். ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைரேகை மூலம் இந்த பணப் பரிவர்த்தனை நடைபெறும் என்பதால், மோசடி நடைபெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

 

ஆதார் பேமென்ட் ஆப் என்ற செயலி மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்கவும், சேவைகளைப் பெறவும் வாடிக்கையாளரிடம் செல்ஃபோன்கூட தேவையில்லை. டெபிட், கிரெடிட் கார்டு, ரொக்கம் ஏதும் தேவையில்லை என்று அடையாள அட்டை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 40 கோடி இந்தியர்களின் ஆதார் எண், அவர்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பரிவர்த்தனை எளிது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வங்கிக் கணக்குள்ள மேலும் 40 கோடி பேரை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்போது ரொக்கத்துக்கு மாற்றாக கருதப்படும் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் POS கருவிகளின் தேவை பெருமளவு குறைந்து விடும் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

Mylalipattabi [Mylaipattabi@gmail.com]

Goodnews very useful thanki rva

சமீபத்திய கட்டுரை
மக்களை குருக்கள்மயமாக்க வேண்டாம் – திருத்தந்தை
திருப்பலியின்போது, நிழலுலக தேவாலயத்தில் கால்துறை ரோந்து
21 ஆம் நூற்றாண்டு மறைச்சாட்சிகளை கௌரவப்படுத்திய கத்தோலிக்க மற்றும் காப்டிக் திருத்தந்தையர்கள்
கடவுளின் பெயரால் நடைபெறும் வன்முறையை தடுக்கவும் - திருத்தந்தை கோரிக்கை
அமைதியின் செய்தியோடு எகிப்து சென்றடைந்த திருத்தந்தை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter