நீரின்றி அமையாது உலகு (தண்ணீர் சேமிப்பு)

ஜூலை 27, 2016

தண்ணீர்

நீரின்றி அமையாது உலகு என திருக்குறள் நீரின் மேன்மை தன்மையை தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதம் அமைந்திருக்கிறது.

தற்போதைய சூழலில் நம்முடைய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் என்பது சில இடங்களில் தலைவிரித்தாட தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்வளத்தை நாம் எவ்வாறு அதிகரித்து கொள்வது உரிய மழை பெய்யும் தருணத்தில் நாம் அந்த மழைநீரை முறையாக சேமிப்பதன் மூலமும் அணைகளில் நீரை தேக்கிவைத்து கொள்வதன் மூலமும் நீர்வளத்தேவைகளில் தன்னிறைவு பெற முடியும்.

கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்ததில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நீர்வரத்து அளவிற்கு அதிகமாக நமக்கு இருந்தாலும் அதை தேக்கி வைத்து பராமரிக்க போதுமான நீர்தேக்கங்களும் அணைகட்டுகளும் இல்லாமல் போன காரணத்தால் பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து விட்டது.

அடுத்த ஓரிரு மாதங்கள் கழித்து இயற்கை முற்றிலும் கடும் வெப்பம் நிலவும் வகையில் அமைந்திருந்தது. இத்தகைய பருவநிலை மாற்றத்தால் நம்முடைய நீர்வள தேவையில் தண்ணிறைவை பெற முடியாமல் போனது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் . மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீர்வளத்தை தக்கவைத்து கொள்ளும் தன்மை மரங்களுக்கு உண்டு.

இன்று இயற்கை சூழலை விட்டு சற்றே நகர்ந்து நகரமய சிந்தனைக்குள் ஆட்பட தொடங்கிவிட்டோம் . உலகலாவிய மக்கள் தொகையை ஒப்பிடும்போது இந்திய மக்கள் தொகை பதினாறு சதவிகிதம் ஆனால் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. இப்படியே நாம் நீர்வளத்தின் மீது அக்கறை கொள்ளாமல் இருந்தால் நிலத்தடி நீரை நாம் முற்றிலுமாக் இழக்கும் நிலை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. நிலத்தடி நீர் ஊறும் இடங்களில் உப்பு நீர் படரவும் வாய்ப்பு இருக்கிறது.

நம்முடைய முன்னோர்கள் நாம் வாழவதற்கு பசுமையான சூழலை நமக்கு அளித்து சென்றார்கள். ஆனால் நாம் நம்முடைய எதிர்கால தலை முறைக்கு எத்தகைய வாழ்வியல் சூழலை விட்டுவிட்டு செல்லப்போகிறோம் என்கிற பொறுப்புணர்வு இல்லாததே இது போன்ற இயற்கை வளங்களும் நலன்களும் சூரையாடப்படுவதன் காரணம் .

ஆறு , ஏரி, குளம்  கண்மாய் , உள்ளிட்ட நீர்தேக்கங்களில் ஆக்கிரமிக்க கூடாது என்கிற சிந்தனை நமக்கு எப்போது தன்னெழுச்சி பெறுகிறதோ அப்போது தான் நம்மால் ஒரு ஆரோக்கியமான அறிவுசார் சமூகத்தை உருவாக்க முடியும் அதே நேரத்தில் அரசும் இதுபோன்ற நீரை தேக்கி வைப்பது தொடர்பான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சாமான்ய மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
நியூயார்க்கில் உலகின் மிகப் பெரிய மினியேச்சர் உருவாக்கம்
சர்வதேச மகளிர் தினம் - உருவான கதை
நாய் காட்டிய நட்பின் மதிப்பு
பிரபலங்களைப்பற்றி - அறிஞர் அண்ணா
இறையும் இயற்கையும் - சுற்றுச் சூழல்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter