புனிதர் சல்வேடர் (St. Salvator of Horta) 20-03-2017

மார்ச் 19, 2017

 புனிதர் சல்வேடர் (St. Salvator of Horta) 20-03-2017

குருத்துவம் பெறாத ஃபிரான்சிஸ்கன் மறை பணியாளர் 
(Franciscan Lay Brother)

"சல்வேடர் ப்ளடேவல் ஐ பீன்" (Salvador Pladevall i Bien) எனும் இயற்பெயர் கொண்ட சல்வேடர், டிசம்பர் 1520 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஸ்பெயின் நாட்டின் "கடலோனியா" (Catalonia) பிராந்தியத்தைச் சேர்ந்தவரும், குருத்துவம் பெறாத ஃபிரான்சிஸ்கன் சபையின் மறை பணியாளரும் ஆவார். தமது வாழ்நாள் காலத்தில் இவர் அதிசயங்கள் பல செய்ததாக மக்கள் இவரைக் கொண்டாடுகின்றனர்.

ஏழைக் கூலித்தொழிலாளர்களின் மகனான சல்வேடர், பதினான்கு வயதிலேயே அனாதையானார். தமது ஒரே தங்கையான "ப்ளாஸா'வை" (Blasa) அழைத்துக்கொண்டு "பார்சிலோனா" (Barcelona) சென்றார். தங்கள் இருவரது வயிற்றுப்பிழைப்புக்காக செருப்புத் தைக்கும் பணி செய்தார். தமது தங்கைக்கு திருமணமானதும் தாம் இறை சேவையில் ஈடுபட எண்ணியிருந்தார்.

அவரது எண்ணம் போலவே தங்கைக்கு திருமணம் ஆனது. சல்வேடர் முதலில் பார்சிலோனாவுக்கு அருகேயுள்ள "புனித மரியாளின் பெனடிக்டைன்" (Benedictine Abbey of Santa Maria de Montserrat) துறவு மடத்தில் சேர்ந்தார். மென்மேலும் தாழ்ச்சியுடன் வாழ்வினை அர்ப்பணிக்க விரும்பிய சல்வேடர், "பெனடிக்டைன் துறவு மடத்திலிருந்து" விலகி, பார்சிலோனாவிலுள்ள "இளம் துறவியர் சபையின்" (Order of Friars Minor) "துறவறப்புகுநிலையின் கண்காணிப்புக் கிளையில் (novitiate of the Observant branch) 3 மே 1541 அன்று, "குருத்துவம் பெறாத அருட்சகோதரராக" (Lay Brother) இணைந்தார். அவர் 1542ல் தமது உறுதிப்பாடுகளை ஏற்றுக்கொண்டார். அங்கேதான் அவரது பணிவான துறவு வாழ்க்கை முறை அனைவருக்கு தெரிய வந்தது.

பின்னர் அவர் "டோர்டோஸா" (Tortosa) என்னுமிடத்திலுள்ள துறவு மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே அவருக்கு சமையல் பணிகள், சுமை சுமக்கும் பணி, 'தானம் வாங்கும் பணி' ஆகியன வழங்கப்பட்டன. விரைவிலேயே சல்வேடர் நோயுற்றோரின் நோய்களை நீக்கும் அதிசயங்களைச் செய்ய ஆரம்பித்தார். அவர் பணி புரிந்த துறவு மடம் நோயாளிகளால் நிரம்பிப் போனது. வெகு தூர இடங்களிலிருந்தெல்லாம் நோயுற்றோர் வர ஆரம்பித்தனர். வாரம் தோறும் சுமார் இரண்டாயிரம் பேர் வரை வந்து சென்றதாக கூறப்படுகிறது.

துறவு மடத்தின் தலைமைத் துறவியர் அவர் மீது அவநம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர். அவரை வெவ்வேறு துறவு மடங்களுக்கு அனுப்பினர். இறுதியில் அவர் "ரியுஸ்" (Reus) மற்றும் "மேட்ரிட்" (Madrid) ஆகிய இடங்களிலுள்ள துறவு மடங்களுக்கு சென்றார். அங்கே, ஸ்பெயின் நாட்டின் மன்னர் இரண்டாம் பிலிப் (King Philip II of Spain) அவரை காணச் சென்றார். 1560ல் அவர் செய்திருந்த அற்புதங்களுக்காக ஸ்பேனிஷ் அரசு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், அவர் உண்மையாகவே அதிசயங்கள் செய்வதாக முடிவுக்கு வந்தனர்.

1565ல் சல்வேடர் "சார்டினியா" (Sardinia) தீவின் "கக்ளியாரி" (Cagliari) எனும் இடத்திலுள்ள "இயேசுவின் புனித மரியாள்" (Friary of St. Mary of Jesus) துறவு மடத்திற்கு சென்றார். அங்கே ஸ்பெயின் சட்டப்படி துறவு சமூகத்தினருக்கு சமையல் பணி செய்தார். தமது செப பரிந்துரையால் நோய் நீக்கும் அற்புதங்களையும் செய்து வந்தார்.

தம்மிடம் நோய் நீங்க வரும் நோயாளிகளிடம், அவர்களது உளச்சான்றினை பரிசோதிக்கவும், பாவ மன்னிப்பு பெறவும், நற்கருணை பெற்று வரவும் வலியுறுத்தினார். இவற்றை செய்ய மறுத்தவர்களுக்காக செபிக்க அவர் மறுத்தார்.

18 மார்ச் 1567ல் மரித்த சல்வேடர், தாம் மரிக்கையில், "ஆண்டவரே, உமது கைகளில், என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" (“Into your hands, O Lord, I commend my spirit.”) என்று கூறி மரித்தார். திருத்தந்தை ஐந்தாம் பால் (Pope Paul V) அவர்கள் 5 ஃபெப்ரவரி 1606 ஆம் ஆண்டு முக்திபேறு பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI) அவர்கள் இவருக்கு 17 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கினார்.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
புனித ஸிட்டா (St. Zita of Lucca) 27-04-2017
புனிதர் மாற்கு (St. Mark) 25-04-2017
 புனிதர் ஃபிடேலிஸ் (St. Fidelis of Sigmaringen) 24-04-2017
புனிதர் ஆக்னெஸ் (St. Agnes of Montepulciano) 20-04-2017
புனிதர் ஒன்பதாம் லியோ (Saint Leo IX) 19-04-2017
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter