இறையும் இயற்கையும் - சுற்றுச் சூழல்

ஜனவரி 24, 2017

சுற்றுச் சூழல்

உருவமில்லா இறைவனின் உண்மையான படைப்பு  - அது 
உருவமுள்ள மனிதருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு – அதை
பாதுகாக்க தூண்ட வேண்டும் அவனது  நினைப்பு – ஆனால்
பாதை மாறிச் சென்றுவிட்டான்
அது அவன் பிழைப்பு
உழைப்பு உழைப்பு என்று சுயலமாகிவிட்டது அவனது மாண்பு
அதனால்தான் என்னவோ,
சுற்றியுள்ள சூழலை அழிக்க துணிந்து விட்டது அவனது பண்பு.                           பண்பில்லாதவனுக்கு   எப்படி இருக்கும் இறைவனின் அன்பு.
கல்லான இதயம் உள்ளவனுக்கு எங்கே தெரியும்
அதில் மறைந்துள்ள சிற்பம்  - ஆம்
சிற்பம் போன்ற சூழலையும் சிதறடிகின்றானே!
சிறகுள்ள பறவை, சூழல்மேல் காட்டும் அன்பை – சிறந்த
அறமுள்ள மனிதன் காட்ட மறந்துவிட்டான்.
அவனுக்கு வேண்டியது பணம் – அதனால்
சூழல் அவனுக்கு வெறும் பிணம்.
இதுவே மனிதனின் குணம்
முற்படுவோம் இந்த கணம்
பணத்தாலும் வாங்க இயலாத சுற்றுச்சூழலை
பாதுகாத்திட செயல்படுவோம் தினம் தினம்.
அதுவே, பூமிக்கு மணம் – மனித வாழ்விற்கு நலம்....

- ஜெகன் பாண்டியன் - தேவக்கோட்டை 

உலகின் மிக ஆபத்தான விமான நிலையம்....!!!

ஜனவரி 08, 2017

 

போர்ச்சுகல் நாட்டின் மெடீரா தீவு விமான நிலையம், உலகிலேயே மிகவும் ஆபத்தான விமான நிலையமாகக் கருதப்படுகிறது.இப்பகுதியில் கடற்காற்று வலுவாக வீசுவதால், இந்த விமான நிலையத்தில் விமானத்தைப் பத்திரமாக இறக்குவதும், ஏற்றுவதும் விமானிகளுக்குக் கடும் சவாலாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில், ஸ்விட்ஸ்ர்லாந்து நாட்டின் ஈடல்வீஸ் விமான நிறுவனத்தின் விமானம், மெடீரா  தீவை நெருங்கியது.

 

மெடீரா விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கும்போது கடுமையான கடற்காற்று வீசியிருக்கிறது. எனவே மூன்று முறை விமானத்தைத்  தரையிறக்க ரன்வேயை நெருங்கி வந்தும், தரையிறக்க முடியாமல் விமானி திணறியிருக்கிறார்.

 

நான்காவது தடவையில் ஒரு வழியாக விமானத்தைத் தரையிறக்க, விமானப் பயணிகள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். கடற்காற்றின் வேகத்தில் வானில் விமானம் தள்ளாடுவதும், ரன்வேயை தொடத் தடுமாறுவதும் ஒரு வீடியோவில் பதிவாகி, தற்போது வெளியாகியிருக்கிறது. அதைப் பார்க்கும்போது நமக்கும்கூட கொஞ்சம் மூச்சுத் திணறித்தான் போகிறது. 

சமீபத்திய கட்டுரை
கலை விழா 2017
Who Killed Anitha
யார் இந்த திருமுருகன் காந்தி ?
Piyush Manush Speaks about Kathiramangalam Issue | Radio Veritas Tamil
தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சாதனை இதுதான்!
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter