பிரபலங்களைப்பற்றி - ஹோமி ஜஹாங்கீர் பாபா

டிசம்பர் 19, 2016

பிரபலங்களைப்பற்றி - ஹோமி ஜஹாங்கீர் பாபா

 

அணு விஞ்ஞானி  ஹோமி ஜஹாங்கீர் பாபா, வேலையிலும், அயராது உழைப்பதிலும் ஆர்வம் கொண்டவர். நம் நாட்டில் தேவையற்ற சில காரணங்களுக்காக விடுமுறையளிப்பதை அவர் விரும்பவில்லை. அதிலும் ஒரு தலைவர் இறந்துவிட்டால், அதற்காக விடுமுறையளிப்பதை அவர் அறவே மறுத்தார். 1966 ஆம் ஆண்டு ஒரு விமான விபத்தில் இவர் காலமானார். அப்போது இவர் எண்ணியதை போல், இவர் உழைத்த அணுசக்தி இலாகா, அணுசக்தி பணியகம், ஆராய்ச்சி நிறுவனங்கள் எதுவுமே இவர் இறந்ததுக்காக விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் அவருடன் பணியாற்றியவர்கள் பெருந்துயரத்தில் வாடினாலும் அவரின் சொல்லை தட்டாமல் என்றும் பனி செய்வதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி என்று அனைவரும் அன்றும் விடுமுறை எடுக்காமல் பணியாற்றினார்கள்.  
 

பிரபலங்களைப்பற்றி - அபுல் கலாம் ஆசாத்

டிசம்பர் 18, 2016

பிரபலங்களைப்பற்றி - அபுல் கலாம் ஆசாத்

 

1942 ஆம் ஆண்டு அபுல் கலாம் ஆசாத் கொல்கத்தாவில்  இருந்து காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள  மும்பை வந்தார். ஆகஸ்டு 9 ஆம் தேதி ஆசாத்தும் மற்ற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார்.  அப்போது ஆசாத்தின் மனைவி படுத்த படுக்கையாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆசாத் மூன்று ஆண்டுகள் கழித்துச் சிறையில் இருந்து விடுதலை அடைந்தார். பின்னர் கொல்கத்தா சென்று அங்கு அவர் மனைவியின் கல்லறை முன் மண்டியிட்டு மலர் சொரிந்துள்ளார். கொல்கத்தாவை விட்டுப் புறப்படும் போது மனைவி கட்டிலில், திரும்பி கொல்கத்தா வரும்போது அவர் கல்லறையில். மனைவி இறந்த செய்தி கூட ஆசாத்தின் காதுகளுக்கு எட்டாமல் தடுத்துவிட்டது வெள்ளையாளர் ஆட்சி.

கவிதை : இயற்கையும் இறைவனும்

டிசம்பர் 09, 2016

மரம் 
வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் யாரையேனும், 
எதையேனும் வாழவைத்துவிட வேண்டுமென 
சொலித் தருகிறது...

காற்று 
எவர் தடுத்தாலும்  - தம் 
திறமையை எங்கும் 
பரப்பிடவேண்டுமென  
சொல்லித் தருகிறது...

நெருப்பு 
நன்மைதனை 
ஒளியாய் பரப்பி 
தீமைதனை எரித்துவிட 
சொல்pத் தருகிறது ...

பூமி (மண்) 
எப்பெரும் சுமையையும் 
வலியையும், தோல்வியையும் 
சாதாரனமாய் சுமந்து 
மகிழ்வாய் வாழ 
சொல்லித் தருகிறது ...

நீர் 
அத்தியாவசிய தேவைகளையாவது 
அடுத்தவர்களுக்கு கொடுத்து 
உதவி செய் எனச் 
சொல்லித் தருகிறது ... 

இயற்கை 
இவ்வுலகத்தின் 
இதயமாகிப் போனது – அதுவே 
இவ்வுலகின் இயக்கமாகிப்போனது

ஹையோ 
அழிப்பது இயற்கையை அல்ல 
இவ்வுலகின் இதயத்தை ... 

உயிர் கொடு இயற்கைக்கு 
இனிய உலகிற்கு 

உன்னில் இயற்கையும் 
இயற்கையில் நீயும் 
நிலைத்திருக்க விரும்புகிறேன் .... 

இப்படிக்கு  
இறைவன்
 

- ம. தேவப்ரகாஷ்

கவிதை : சுற்றுப்புறச் சூழல்

டிசம்பர் 08, 2016

கவிதை : சுற்றுப்புறச் சூழல்

 

காற்றின் தேவை அறிந்த நாம்

மரத்தின் தேவை அறிய மறந்திட்டோம் .

காற்றில் கார்பன் - டை- ஆக்ஸைடு

உன் மூச்சில் நச்சுக்காற்று

தூசிகளை நான் வாங்கி உயிர்மூச்சை தந்து

உன் நுரையீரலைப் புனிதமாக்கினேன்

வெயிலில் நான் வாழ,

நீ ஒதுங்க நிழல் தந்தேன்

ஆனால் நீயோ என்னை அழித்துவிட்டு,

உன் உயிருக்கு என்னை எமனாக்கிவிட்டாய்.

இயற்கையை நீயே அழித்தாய்

கால நிலை மாற நீயே காரணமானாய்

தவறுகள் இழைத்து தரணியில் புலம்பும் மனிதா!

உன் ஆராய்ச்சி பசிபோக்க  வானை பிளந்தாய்

உலக வளத்தை உருக்குலைதுவிட்டு – உன்  

உடல் பிணிபோக்க அலைகின்றாய்

உன் வாகனப் புகையும், ஆலையின் கழிவும்,

பிளாஸ்டிக் பொருட்களும் உனக்கே கேடு விளைவித்ததே...!

உன்னை புனிதனாக்கும் என்னை

உன் சுயத்திற்கென்று அழித்தாயே !

மனிதா! பணத்தின் தேவையை அறிந்த நீ

சுற்றுபுறத்  தூய்மையை அறிய மறந்துவிட்டாயே ?

மரங்களை வளர்ப்போம்.... தூய்மையை காப்போம் ......    

பிரபலங்களைப்பற்றி - சோ.ராமசாமி

டிசம்பர் 08, 2016

 

பிரபலங்களைப்பற்றி  -- சோ.ராமசாமி 

 

 • பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரும் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் மற்றும் அரசியல் விமர்சகருமான திரு."சோ'' ராமசாமி காலமானார். பத்திரிக்கை உலகில் பலருக்கு ஆசானாக விளங்கிய சோ ராமசாமி, அரசியல் விமர்சனம் என்பதில் பெயர் பெற்றவர். துக்ளக் பத்திரிக்கையின் சிறப்பான அரசியல் விமர்சனம் அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதற்கு காரணம் இவரது வலிமையான எழுத்துக்களே.

 

 • சிறிது காலமாகவே நோய் வாய்ப்பட்டிருந்த சோ ராமசாமி பலமுறை மரணத்தின் விளிம்பை தொட்டு வந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் காலமானார்.மறைந்த சோவுக்கு மனைவியும் ஒரு மகளும் , மகனும் உள்ளனர். பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் சோ.

 

 • இவர் தனது துக்ளக் பத்திரிகையில் எழுதிய அரசியல் கட்டூரைகள் மிகவும் பிரபலமானவை. நையாண்டி கட்டூரைகளை எழுதுவதில் வல்லவர். அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்து தந்தது.

 

 •  1934 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார்.பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 •  1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்.

 

 • 1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். பின்னர் திரைப்படத்துறையில் ஈடுபட்டு சிறந்த நகைச்சுவை நடிகராகவிளங்கினார். திராவிட அரசியலை முக்கியமாக விமர்சித்தவர்.

 

 •  அதே நேரம் திராவிட கட்சி தலைவர்களான அண்ணா , கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர். ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் போன்றவர், அவருக்கு அரசியல் வழிகாட்டி என்றும் குறிப்பிடுவர்.

 

 • 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார். துக்ளக் என்ற இவரது திரைப்படம் பிரபலமானது. இவர் மாநிலங்களவை உறுப்பின‎ராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 • நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு, ‘முகமது பின் துக்ளக், ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கி சொந்தமாக நடத்தி வந்தார்.

 

 •  அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

 

 • தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றியவர், சோ ராமசாமி ஆவார்.
சமீபத்திய கட்டுரை
கலை விழா 2017
Who Killed Anitha
யார் இந்த திருமுருகன் காந்தி ?
Piyush Manush Speaks about Kathiramangalam Issue | Radio Veritas Tamil
தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சாதனை இதுதான்!
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter