தூய கன்னிமரியாவின் மன்றாட்டு மாலை

ஜூன் 27, 2016

 

தூய கன்னிமரியாவின் மன்றாட்டு மாலை

 

ஆண்டவரே இரக்கமாயிரும் - ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே இரக்கமாயிரும் - கிறிஸ்துவே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும் - ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் -  

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்

விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையாகிய இறைவா -எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி

உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி

தூய ஆவியாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி

மூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி

புனித மரியாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவனின் புனித அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னியரில் சிறந்த கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்துவின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச்சபையின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறையருளின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தூய்மைமிகு அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னிமை குன்றா அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அன்புக்குரிய அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஆச்சரியத்துக்குரிய அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நல்லாலோசனை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

படைத்தவரின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மீட்பரின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பேரறிவுள்ள கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வணக்கத்துக்குரிய கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

போற்றுதற்குரிய கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வல்லமையுள்ள் கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பரிவுள்ள கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பிரமாணிக்கம் உள்ள கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நீதியின் கண்ணாடியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞானத்துக்கு உறைவிடமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

எங்கள் மகிழ்ச்சியின் காரணமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞானம் நிறைந்த பாத்திரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மகிமை நிறைந்த பாத்திரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பக்தி நிறைந்த பாத்திரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைபொருளின் ரோசாமலரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தாவீது அரசரின் கோபுரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தந்த மயமான கோபுரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பொன்மயமான ஆலயமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உடன்படிக்கையின் பேழையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விண்ணகத்தின் வாயிலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விடியற்கால விண்மீனே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நோயுற்றோரின் உடல் நலமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பாவிகளுக்கு அடைக்கலமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

துயருற்றோருக்கு ஆறுதலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்தவர்களின் சகாயமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வானதூதரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

குலமுதுவரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவாக்கினரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அப்போஸ்தலரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைச்சாட்சியின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறையடியார்களின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னியரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அனைத்துப் புனிதரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அமல உற்பவியான அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விண்ணேற்படைந்த அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச்செபமாலையின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அமைதியின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே -எங்கள் பாவங்களை பொறுத்தருளும், சுவாமி

உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே -எங்கள் மன்றாட்டுகளை கேட்டருளும், சுவாமி

உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே -எங்கள் மேல் இரக்கமாயிரும், சுவாமி

இறைவனின் புனித அன்னையே! இதோ உம்மைக் சரணடைந்தோம். எங்கள் தேவைகளில் எங்களைப் புறக்கணியாதேயும். மகிமை மிகுந்த கன்னியே, விண்ணுலகப் பேறுபெற்ற அரசியே, அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களை என்றும் காத்தருளும்.

கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படி,இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


செபிப்போமாக

இறைவா! முழு மனதுடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைக் கண்ணோக்கியருளும். எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்தும் எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.


இறுதி வேண்டுதல்

இடைவிடாத துதிக்கும் புகழுக்கும் உரிய பரம திவ்விய நற்கருணை நாதரே, உமக்கு எந்நாளும் முடிவில்லாத ஆராதனையும்,

துதியும் புகழும் பெருகுவதாக!

அமல உற்பவியும், என்றும் கன்னியும், எங்கள் அரசியுமான புனித இறையன்னையின் அமல உற்பவத்துக்கும், புனித சூசையப்பரின் பாக்கியமான மரணத்துக்கும் புகழ் உண்டாவதாக!

இறையருளின் அன்னையே இரக்கத்தின் தாயே! புனித மரியாவே!எங்கள் எதிரி எங்களைச் சோதிக்கும் போதும், எங்கள் மரண நேரத்திலும் உமது திரு மைந்தனை வேண்டி, எங்களைக் காத்து ஆண்டு நடத்த வேண்டும் என்று உம் திருத்தால் முத்தி செய்து உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

தூய ஆவியானவருக்கு செபம்

ஜூன் 27, 2016

 

தூய ஆவியானவருக்கு செபம்

 

அப்பா பிதாவே! நான் வாழ்வதற்காக, உமது ஏக மகனாகிய கிறிஸ்து இயேசுவை எனக்காகவே அனுப்பினீர். மகிமையான அந்தப் புதுவாழ்வு என்னில் இப்பொழுது செயல்படுவதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இந்தப் புதுவாழ்வை முறையோடு வாழ எனக்குக் கற்றுத் தாரும்.

உமக்கு பணி புரியவும், உம் சித்தத்தை நிறைவேற்றவும், என்னில் உதிக்கும் தீய எண்ணங்களும், எனது அறியாமையும் தடையாய் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கின்றேன். இப்பொழுது எனக்கு நீங்கள் கொடுத்து என்னில் வேலை செய்யும் இந்தப் புதிய வாழ்வில் இருக்கும் பரலோகத்தின் சக்தியை நான் நம்புகிறேன்.

இந்தப் புதிய வாழ்வை வாழும் வழிகளை எனக்குக் காட்டி,என்னைத் தன் பரிசுத்த ஆவியின் வல்லமையில், வாழ்வும்,வழியுமான என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தன் அன்பின் போதனையினால் என்னை உம்மிடம் ஒப்படைப்பார் என நம்புகிறேன். ஆமென்.

 

தூய ஆவியானவருக்கு நவநாள்

 

தூய ஆவியே எழுந்தருளிவாரும், இறைமக்களின் உள்ளங்களை உமது அன்புத் தீயால் நிரப்பியருளும். உமது ஞானக்கதிர்களை வரவிட்டு உலகினரின் உள்ளங்களை புதுப்பித்தருளும். இறைவா!உமது இறை மக்களின் உள்ளங்களை தூய ஆவியின்

கொடையினால் தெளிவுபடுத்தினீர். அந்த ஆவியால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவரின் ஆறுதலால் மகிழ்வு பெறவும் அருள்புரிவீராக. எம் ஆண்டவராம் கிறிஸ்து வழியாக இவற்றை எங்களுக்கு அருளும். ஆமென்.


மனம் வருந்துதல்

 

அன்பின் பரிசுத்த ஆவியே - எங்கள் விரோத குணத்தை மன்னியும்.

நம்பிக்கையின் பரிசுத்த ஆவியே - எங்கள் சுய பரிதாபத்தை மன்னியும்.

விசுவாசத்தின் பரிசுத்த ஆவியே - எங்கள் சந்தேக புத்தியை மன்னியும்.

மகிழ்ச்சியின் பரிசுத்த ஆவியே - எங்கள் துயரமனதை மன்னியும்.

சமாதானத்தின் பரிசுத்த ஆவியே - எங்கள் ஆகங்காரத்தை மன்னியும்.

பொறுமையின் பரிசுத்த ஆவியே - எங்கள் முணுமுணுத்தலை மன்னியும்.

இரக்கத்தின் பரிசுத்த ஆவியே - எங்கள் கொடுரமான சிந்தனையை மன்னியும்.

நன்மைத்தனத்தின் பரிசுத்த ஆவியே - எங்கள் தீய செயலை மன்னியும்.

விசுவாசமுள்ள பரிசுத்த ஆவியே - எங்கள் சோம்பேறித்தனத்தை மன்னியும்.

தாழ்ச்சியின் பரிசுத்த ஆவியே - எங்கள் தற்பெருமையை மன்னியும்.

தன்னடக்கத்தின் பரிசுத்த ஆவியே - எங்கள் பேராசையை மன்னியும்.


ஒப்புக்கொடுத்தல்

 

தூய ஆவியானவரே, எங்களை வழிநடத்தும்படி, எங்கள் வாழ்வு முழுவதையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களுக்குள்ளே ஜீவித்து இறையன்பின் அற்புதங்களை எங்கள் வழியாக வெளிப்படுத்தும்.


மன்றாடுதல்

கடவுளின் பரிசுத்த ஊழியர்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை உறுதிப்படுத்தும்படி மன்றாடுகிறோம்.

நாட்டு தலைவர்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை நேர்மையுள்ளவர்களாக விளங்கும்படி மன்றாடுகிறோம்.

துன்புறும் ஏழைகளுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை செல்வர்களாக்கும்படி மன்றாடுகிறோம்.

கொடிய பணக்காரர்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை பணிவுள்ளவர்களாக் ஆகும்படி மன்றாடுகிறோம்.

கர்ப்பிணிப் பெண்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை ஆறுதல்படுத்தும்படி மன்றாடுகிறோம்.

நோயாளிகள், மரணத் தறுவாயில் உள்ளோருக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை ஆறுதல்படுத்தும்படி மன்றாடுகிறோம்.

வேலையில்லாதவர்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை தேற்றும்படி மன்றாடுகிறோம்.

காணாமல்போன ஆட்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்கள் தங்கள் இல்லத்திற்கு திரும்ப வழிகாட்டும்படி மன்றாடுகிறோம்.

உள்ளம் உடைந்தவர்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை குணப்படுத்தும்படி மன்றாடுகிறோம்.


இறை ஆசிருக்கு செபம்

ஓ தூய ஆவியே - இந்நாளில் எங்களையெல்லாம் ஆசிர்வதித்து,எங்கள் சுமைகளை சுலபமாக்கிவிடும். நன்றியுள்ள் இதயத்தோடு எங்கள் வாழ்வின் உதயத்தை எட்டிப்பிடிக்க உதவிடும். ஆமென்..

பிதாவுக்கும், சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றேன்றும் இருப்பதாக. ஆமென்.

நித்திய வாழ்வு என்னில் வேலை செய்கிறது.

தேய்வீக சக்தியோடு என்னில் வேலை செய்கிறது.

நான் எப்படிப்பட்டவனா(ளா)ய் இருக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தமோ அப்படியே நான் என் மனம் திரும்புதலின் மூலம் வாழ முடியும்.

கிறிஸ்துவே என் வாழ்வு. ஒவ்வொரு நான் என் வாழ்வாக கடவுளால் கொடுக்கப்பட்ட அவரை ஏற்றுக் கொள்வேன்.முழுமையான இறைசக்தியோடு என் வாழ்வாக அவர் இருப்பதால் இனி எதற்கும் எனக்கு பயமில்லை.

 

செபமாலை

அனைத்து நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா! நீச மனிதரும், நன்றியில்லாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள் மட்டிலாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலே இருந்து செபிக்கத் தகுதியற்றவர்களாயிருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயையை நம்பிக்கொண்டு, தேவரீருக்குத் துதி வணக்கமாகவும்,புனித தேவமாதாவுக்குத்

தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணிச் செபமாலை தொடுக்க ஆசையாயிருக்கிறோம். இந்தச் செபத்தை பக்தியோடு செய்து பயனடையத் தேவரீருடைய உதவியைத் தந்தருளும்.


விசுவாச பிரமாணம்

 

பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையை விசுவசிக்கிறேன்.புனிதர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.பாவப் பொருத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். ஆமென்.

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக.உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.ஆமென்.

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே,பெண்களுக்குள் (3 முறை)

ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகலாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

பிதாவுக்கும், சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றேன்றும் இருப்பதாக. ஆமென்.

ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும் கீழ்கண்ட செபத்தைச் சொல்லவும்.

ஓ என் இயேசுவே, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.எங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும். சகல ஆத்துமங்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு விசேஷ உதவி புரியும்.

 

செபமாலையின் இறுதியில்

அதிதூதரான அர்ச்சியிஷ்ட மெக்கேலே, தேவதூதர்களான அர்ச்சியிஷ்ட கபிரியேலே, ரபேலே அப்போஸ்தலர்களான அர்ச்சியிஷ்ட இராயப்பரே, சின்னப்பரே அருளப்பரே நாங்கள் எத்தனை பாவிகளாய் இருந்தாலும் நாங்கள் வேண்டிக் கொண்ட இந்த 53 மணி செபத்தை உமது ஸ்தோதிரங்களோடே ஒன்றாகக் கூட்டி அர்ச்சியிஷ்ட தேவ மாதாவின் திருப்பாதத்தில் பாதகாணிக்கையாக வைக்க பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

 

 

இயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை மற்றும் பிராத்தனை

ஜூன் 27, 2016

 

இயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை மற்றும் பிராத்தனை


முதலில்


பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென். 

அருள்நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகலாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென். 

விசுவாச பிரமாணம்


பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையை விசுவசிக்கிறேன். புனிதர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொருத்தலை விசுவசிக்கிறேன். சாரிர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். ஆமென். 

செபமாலையின் பெரிய மணியில்:


நித்தியப் பிதாவே! எங்களாண்டவரும், உமது நேசமகனுமான இயேசு கிறிஸ்துவின் உடலையும், உதிரத்தையும், ஆன்மாவையும் தெய்வீகத்தையும், எங்கள் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். 

செபமாலையின் சிறிய மணியில்:
அவரது வேதனை நிறைந்த பாடுகள் வழியாக எம்மீதும் அகில உலகின் மீதும் இரக்கமாயிரும். 

முடிவில்:


புனித இறைவா, புனித எல்லாம் வல்லவரே, புனித நித்தியரே, எங்கள் மீதும், அகில உலகின் மீதும் இரக்கமாயிரும். (3 முறை) 

இரக்கமுள்ள இயேசுவே! உம்மை நாங்கள் விசுவசிக்கிறோம். உம்மில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம். எங்கள் பலவீனத்திலும், இயலாமையிலும் எங்களுக்கு உதவியாக வாரும். நீர் எல்லோராலும் அறியப்படவும், நேசிக்கப்படவும் செய்ய எங்களுக்கு வரந்தாரும். அணை கடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும், உமது மகிமைக்காகவும் எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும் உள்ள தீய சக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரமருளும். 

ஆன்மாக்களுக்காகச் செபம்


ஆண்டவரே! உமது எல்லையற்ற அன்பினால் எல்லாப் பாவிகளையும் மன்னித்து உமது நீதியின் வழிக்கு நடத்திச் செல்லும். இவர்களையும் இவர்களுடையவர்களையும் தீமையின் கொடுமையினின்று பாதுகாத்தருளும். தீமை செய்த அனைவரையும் மீட்டருளும். இறைவனின் இரக்கம் அவர்கள் மேல் இருப்பதாக. என் தேவனே, எனது இறைவனும் எனது அனைத்தும் ஆனவரே, என் இயேசுவே! இரக்கமாயிரும். இயேசு கிறிஸ்துவே! இரக்கத்தின் அரசே! நான் உம்மை நம்புகிறேன். யேசு மரி சூசை! நான் உங்களை அன்பு செய்கிறேன். ஆன்மாக்களை மீட்டருளும். ஆமென். இரக்கத்தின் பிராத்தனை 

சுவாமி கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் உலகத்தை மீட்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

சகலமும் படைக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

எங்களைத் தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

மகாப் பரிசுத்தத் திருத்துவத்தின் பரம இரகசியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

கடவுளின் சர்வ வல்லமையை மானிடருக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

பரலோக அரூபிகளைப் படைக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

ஒன்றுமில்லாமையிலிருந்த எங்களை உருவாக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

எங்களுக்கு நித்திய வாழ்வை அருள காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

நாங்கள் அடையவிருக்கும் தண்டனைகலிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

பாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டுக் கை தூக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

மனித அவதாரத்தையும் பாடுகளையும், மரணத்தையும் ஏற்றுக்கொள்ள காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

சகல மனிதருக்கும் எப்பொழுதும் எல்லாவிடங்களிலும் உதவியளிக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

உமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்கச் செய்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

சத்தியத் திருச்சபை ஸ்தாபித்ததில் நீர் காட்டிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

அருட்சாதனங்களின் கொடைகளில் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

ஞானஸ்நானத்திலும் பச்சாதாபத்திலும் நீர் அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் நீர் தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

பாவிகள் மனம் திரும்புவதிலும் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

அவிசுவாசிகள் ஒளிபெறுவதிலும் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

நீதிமான்களின் அர்ச்சிப்பில் நீர் வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

உமது திருக்காயங்களிலுந்து சுரந்தோடிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

உமது மகா பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

இரக்கத்தின் தாயாக புனித மரியம்மாளை எங்களுக்கும் தர காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

நோயாளிகளுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

கதி கலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

மரிப்போரின் அடைக்கலமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

சகல புனிதர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

மீட்கப்பட்டவர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

அற்புதங்களின் வற்றாத துணையாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே, இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் பாவங்களை பொறுத்தருளும், சுவாமி 

உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மன்றாட்டுகளை கேட்டருளும், சுவாமி 

உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும், சுவாமி 

ஒருவர்: ஆண்டவருடைய இரக்கங்கள், அவருடைய சகல படைப்புகள் பேரிலும் உள்ளன. எல்: ஆதலால் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவேன். 

செபிப்போமாக:


மகாத் தயை நிறை இறைவா! இரக்கத்தின் தந்தையே, ஆறுதலின் தேவனே, உம்மில் விசுவாசமும், நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே; உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களை திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் பெரிய சோதனைகளிலும், உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருட்கொடைகளை எங்கள் மீது நிறையப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும் எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கு தந்தறுளும்.

ஆமென். 

செபமும் வாழ்வும்

ஜூன் 22, 2016

ஜெபம் என்பது என்ன?
கடவுளோடு உரையாடுவது ஜெபம். ஒரு நல்ல நண்பர் நமக்கு இருந்தால் நம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பகிர்ந்து கொள்வது நட்புக்கான இலக்கணம். கடவுளிடம் நாம் நம் வாழ்க்கையை பற்றி பேசுவதே ஜெபம். நாம் கடவுளிடம் நமது இதயத்தை திறந்து பேசுவதும், நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைக்கு திறந்த மனத்துடன் செவிமடுப்பதுமே ஜெபம்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். - பிலிப் 4:6-7

எதற்காக ஜெபம் செய்ய வேண்டும்?
கடவுளின் அருகில் நாம் நெருங்கிவர ஜெபம் நமக்குத் துணைசெய்கிறது. கடவுளிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றிசொல்லும் போதும், அவர் புகழ் பாடும் போதும், நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போதும், நமது பலகீனத்தில் அவரது உதவியை நாடும் போதும், அவர் சித்தத்தை நிறைவேற்றும் போதும், கடவுள் நம்மோடு பேசுகிறார். கடவுள் நமது சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதைச் செய்யத் தூண்டுகிறார். நாம் ஜெபம் செய்வதன் மூலம் கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற அதிக வாய்ப்பை நமக்குக் கொடுக்கின்றார். இதன் மூலம் நாம் கடவுளில் இணைந்து வாழும் பேற்றைப் பெறுகிறோம். முத்திப்பேறு பெற்ற அன்னைத் தெராசாவும் மற்ற புனிதர்களும் இப் பேற்றைப் பெற்றவர்களே.

கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். யோவான் 16:24

யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்? கடவுளிடமா? யேசுவிடமா? தூய ஆவியிடமா? புனிதர்களிடமா?
நாம் கடவுளிடமோ அல்லது யேசுவிடமோ அல்லது தூய ஆவியிடமோ ஜெபம் செய்யலாம்.இந்த மூவரிடமும் எழுப்பப்படும் ஜெபங்கள் விவிலியத்தில் அனேக இடங்களில் காணப்படுகின்றன. கடவுள் ஒருவர்தான். இயேசுவிடம் ஜெபம் செய்யும் போது இறைத் தந்தையிடமும் நாம் ஜெபம் செய்கிறோம். நாம் ஜெபம் செய்யும் வார்த்தைகளையும் கடந்து கடவுள் நம் உள்ளத்தையும் எண்ணங்களையும் அறியக்கூடியவர்.

புனிதர்கள் கடவுள் அல்ல. அவர்கள் கடவுளின் விருப்பத்தின்படி இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்கள். தங்களின் தூய வாழ்வால் விண்ணகத்தை சுதந்தரித்துக் கொண்டவர்கள். அவர்கள் இறைவனின் அருகில் அமர்ந்திருக்கிறார்கள், நமக்காக கடவுளிடம் பரிந்து பேசுகிறார்கள், நாம் செய்யும் வேண்டுதல்களை கடவுளிடம் மன்றாடி நமக்குப் பெற்றுத் தருகிறார்கள் என்பதே நமது விசுவாசம்.

சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முன்னிட்டும் தூய ஆவி நம் உள்ளத்தில் பொழிந்துள்ள அன்பை முன்னிட்டும் நான் உங்களைக் கேட்டுக் கொள்வது; எனக்காகக் கடவுளிடம் வேண்டி, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள் எனக்காகக் கடவுளிடம் வேண்டி, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள். -உரோ 15:30

 

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா? 
இல்லை. சிலைவழிபாடு என்பது ஒரு குறிப்பிட்ட சிலைக்கு சக்தி இருக்கிறது என்று நம்பி அந்த சிலையை தெய்வமாக வழிபடுவது. கத்தோலிக்க ஆலயங்களில் நிறுபப்பட்டிருக்கும் சுரூபங்கங்கள் (சொரூபம் - மாதிரி) இயேசுவை அல்லது அந்தந்த புனிதர்களை நம் நினைவில் கொண்டுவர, தியானிக்க, அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த சுரூபங்களுக்கு சக்தி இருப்பதாகவோ அல்லது அவைகளையே கடவுளாகவோ நாம் வழிபடுதில்லை. புனிதர்களை நாம் நம் வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். புனிதர்கள் கடவுள் அல்ல. புனிதர்களுக்கு, அன்னை கன்னிமரியாள் உட்பட அனைவருக்கும் நாம் வணக்கம் மட்டுமே செலுத்துகிறோம். புனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்கை வாழ்ந்து மரித்தவர்கள்(உம் - அன்னை தெரசா). புனிதர்கள் இறைவனோடு விண்ணகத்தில் இருப்பதால் புனிதர்களிடம் நாம் நமக்காக இறைவனிடம் பரிந்துபேச அழைப்பு விடுவிக்கின்றோம்.

 

கடவுளாகிய இயேசு ஏன் ஜெபம் செய்தார்?
இயேசு கடவுளும் மனிதனுமானவர்.  இந்த உலகில் இயேசு முழு மனிதனாக அவதரித்தார். அவர் கடவுளாயிருந்தாலும் இந்த உலகின் மனிதரைப் போல் மனிதராக வாழ்ந்தார். அவர் இறை தந்தையைச் சார்ந்து வாழ்ந்தார். எல்லாவற்றிலும் இறை தந்தையின் சித்தத்தையே நிறைவேற்றுகின்றார். இறை தந்தையை முழுமையாக அன்பு செய்து அவரில் வாழ்வதே வாழ்வாகக் கொண்டிருந்தார். ஆகவே அவரோடு உரையாடுவதில் அதிக நேரத்தை கழிக்கின்றதை நாம் நற்செய்திகளில் காண்கின்றோம்.

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்றவல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். எபிரே 5:7-8

 

கடவுள் நம் தேவைகளையும் அறிந்திருப்பவர். பின்னர் நாம் ஏன் நம் தேவைகளுக்ககாக ஜெபிக்க வேண்டும்? ஏன் மீண்டும் மீண்டும் ஜெபிக்கவேண்டும்?
நாம் ஜெபம் செய்யும் போது தாழ்ச்சியான உள்ளத்தையும் கடவுள் முன் நம்முடைய இயலாமையையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு செய்வது கொடுத்துக்கொண்டே இருக்கின்ற கடவுளின் கொடைகளை நாம் பெறுவதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளும் கருவியாக ஜெபம் அமைகின்றது. ஆகவே நாம் தொடாந்து ஜெபம் செய்ய வேண்டும்.

உம் அடியானின்; மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; நீரும் எனக்குப் பதிலளிப்பீர். சங்கீதம் 86:4-7

 

எந்த நிலையில் ஜெபம் செய்யவேண்டும்? முழந்தாள்படியிட்டு? கைகூப்பி? 
விவிலியத்தில் மக்கள் ஜெபம் செய்யும் போது பல்வேறு நிலைகளில் ஜெபிக்கின்றதைக் காண்கிறோம். நின்றுகொண்டு, கைகளை உயர்தி, கவிழ்ந்து, உட்கார்ந்து, முழந்தாள்படியிட்டு ஜெபித்திருக்கிறார்கள். எந்நிலையிலும் ஜெபிக்கலாம் என்றாலும் முடிகின்ற சூழ்நிலைகளில் முழந்தாள் படியிட்டு கைகூப்பி ஜெபிப்பது கடவுளுக்கு முன் நமது தாழ்ச்சியையும் பணிவையும் எடுத்துக்காட்டும் வண்ணமாக அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையாக, பயபக்தியோடு ஜெபிப்பது உகந்தது.

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. சங்கீதம் 51:15-17

 

கடவுளிடம் நாம் செய்யும் ஜெபம் சில வேளைகளில் கேட்கப்படுவதில்லையே ஏன்?
கடவுள் நம்மைவிட ஞானம் மிக்கவர். யார் யாருக்கு என்ன தேவை எப்போது தேவை என்பதை அவர் அறிவார். அவர் எப்போழுதும் நமக்கு நன்மையே செய்வார். சிலவேளைகளில் கடவுளின் திட்டம் மனித ஞானத்திற்கு எட்டுவதில்லை. ஆகவே கடவுள் நம் ஜெபத்தை கேட்காதவர் போல் நமக்குத் தெரிகிறது.

சிலவேளைகளில் சுயநலத்தோடு ஜெபம் செய்கிறோம். அரசர் சாலமோன் கடவுளிடம் ஞானத்தைக் கேட்டார். பொருட்செல்வமோ அல்லது படையோ, மேலும் அதிகாரத்தையோ அல்லது மேலும் அரசுகளையோ கேட்காததால் கடவுள் அனைத்தையும் அவருக்குக் கொடுத்தார்.

அல்லது கடவுளின் திட்டத்திற்கு மாறுபட்டு நம் எண்ணங்கள் அமைவதால் நம் ஜெபம் கேட்கப்படுவதில்லை. சில சமயங்களில் நம் ஜெபம் நேரடியாகக் கேட்கப்படாமல் வேறுவிதமாக நிறைவேற்றப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் நம் ஜெபங்களைக் கேட்டருள்வார் என்ற ஆழ்ந்த விசுவாசமும் கடவுளின் அன்பும் பராமரிப்பும் நம் வாழ்வில் நிலைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையும் அனைத்திலும் கடவுளின் சித்தம் நிறைவேற்றப்படவும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். - லூக்கா 18: 1, 6-8

பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்; "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறினார். லூக்கா 22:41-42

 

அச்சிடப்பட்ட அல்லது மனப்பாடம் செய்த ஜெபங்கள் ஜெபிப்பதற்கு உகந்ததா?
இப்படித்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை கடவுள் நம்மிடம் எதிர்பார்கவில்லை. அச்சிடப்பட்ட அல்லது அனுதினம் நாம் அறிந்த ஜெபங்களைப் பயன்படுத்துவது ஜெபம் செய்ய உதவிசெய்யுமானால் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக கர்த்தர் கற்பித்த ஜெபம், மங்கள வார்தை ஜெபம், தெரிந்த சங்கீதங்களை ஜெபிப்பது அல்லது பாடுவது சிறந்த ஜெபம். அச்சிடப்பட்ட ஜெபங்களை ஜெபிக்கும் போது கடகட வென ஒப்பிக்காமல், பொருளுணர்ந்து மன ஈடுபாட்டுடன் ஜெபிப்பது மேன்மைக்குரியது. (எடுத்துக்காட்டு: பரிசுத்த ஆவியானவர் ஜெபம்).

மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்;" விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! ..... மத் 6:7-9

சமீபத்திய கட்டுரை
புனித ஸிட்டா (St. Zita of Lucca) 27-04-2017
புனிதர் மாற்கு (St. Mark) 25-04-2017
 புனிதர் ஃபிடேலிஸ் (St. Fidelis of Sigmaringen) 24-04-2017
புனிதர் ஆக்னெஸ் (St. Agnes of Montepulciano) 20-04-2017
புனிதர் ஒன்பதாம் லியோ (Saint Leo IX) 19-04-2017
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter