சிரிப்பு யோகா செய்வதால்........

ஜனவரி 27, 2017

உலக சிரிப்பு தினம், ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் சிரிப்பு தினம் ஜனவரி 10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனெனில் சிரிப்பு யோகாவை உலகம் முழுவதும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தவர் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் மதன் கடாரிய ஆவர். 1998 - ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று முதன் முதலாக மும்பையில் சிரிப்பு யோகா தினம் கடைப்பிடித்து உலகம் முழுவதும் பரவச் செய்தார். சிரிப்பானது மன அழுத்தம், இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதயத் துடிப்பை சீராக்கி, உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் முகமலர்ச்சியைத் தரும்.

விமானத்தில் பறக்கும் போது காதுகள் அடைத்துக்கொள்வது ஏன்?

ஜனவரி 06, 2017

 

விமானப்பயணத்தின் பொது தரையில் இருந்து விமானம் மேலே எழும்பி உயர பறக்கும்போது விமானத்தில் உள்ளவர்களில் சிலருக்கு காதுகள் அடைத்துக்கொள்ளும். அது போல அதிவேகமாக செல்லும் 'லிப்ட்' மூலம் உயரமான இடங்களுக்கு பயணம் செய்யும் போதும் காதுகள் அடைத்துக்கொள்வது உண்டு. இதற்கு முக்கிய காரணம் காற்றழுத்தம் மாறுபடுவது தான். தரையில் இருந்து உயர செல்லச்செல்ல காற்றின் அழுத்தம் குறைந்துக்கொண்டே போகும்.  நமது தலைக்குள் இருக்கும் காற்றழுத்தமும், வெளிப்புறம் உள்ள காற்றழுத்தமும் மாறுபடும்போது காதுகள் அடைத்துக்கொள்ளும். இந்த காற்றழுத்த மாறுபாட்டை சரிசெய்ய  காதுகளுக்கு உள்ளே இருக்கும் யூஸ்டாசியன் குழாய் உதவுகிறது. காதுகள் அடைத்துக்கொள்ளும்போது    வாயை நன்றாக திறந்து கொட்டாவி விடுவது, எச்சில் விழுங்குவது, அல்லது சிறு இனிப்பு பொருளை விழுங்குவது போன்ற செயல்கள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம். இந்த செயல்களின் போது யூஸ்டாசியன் குழாய் வழியாக தலைக்குள் இருக்கும் அதிகப்படியாக காற்று வெளியேறுகிறது. தலைக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும்   காற்றழுத்தம் சமமாகிறது. தொடர்ந்து காது அடைக்கும் பிரச்சினையும் சரியாகிறது.விமானப்பயணத்தின் பொது தரையில் இருந்து விமானம் மேலே எழும்பி உயர பறக்கும்போது விமானத்தில் உள்ளவர்களில் சிலருக்கு காதுகள் அடைத்துக்கொள்ளும்.

 

அது போல அதிவேகமாக செல்லும் 'லிப்ட்' மூலம் உயரமான இடங்களுக்கு பயணம் செய்யும் போதும் காதுகள் அடைத்துக்கொள்வது உண்டு. இதற்கு முக்கிய காரணம் காற்றழுத்தம் மாறுபடுவது தான். தரையில் இருந்து உயர செல்லச்செல்ல காற்றின் அழுத்தம் குறைந்துக்கொண்டே போகும்.  நமது தலைக்குள் இருக்கும் காற்றழுத்தமும், வெளிப்புறம் உள்ள காற்றழுத்தமும் மாறுபடும்போது காதுகள் அடைத்துக்கொள்ளும். இந்த காற்றழுத்த மாறுபாட்டை சரிசெய்ய  காதுகளுக்கு உள்ளே இருக்கும் யூஸ்டாசியன் குழாய் உதவுகிறது. காதுகள் அடைத்துக்கொள்ளும்போது    வாயை நன்றாக திறந்து கொட்டாவி விடுவது, எச்சில் விழுங்குவது, அல்லது சிறு இனிப்பு பொருளை விழுங்குவது போன்ற செயல்கள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

 

இந்த செயல்களின் போது யூஸ்டாசியன் குழாய் வழியாக தலைக்குள் இருக்கும் அதிகப்படியாக காற்று வெளியேறுகிறது. தலைக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும்   காற்றழுத்தம் சமமாகிறது. தொடர்ந்து காது அடைக்கும் பிரச்சினையும் சரியாகிறது.

தினம் ஒரு வாழைப்பழம்

ஜனவரி 02, 2017

 முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம்,மிகுந்த சத்துக்களை கொண்டது. பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கு தீர்க்கும் ஆற்றல் உடையது. பழுக்காத வாழைப்பழத்தைவிட, பழுத்த வாழைப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி  ஆக்சிடென்டுகள் மற்றும் நார்ச்சத்து பெருமளவிலுள்ளது.

 

டி.என்.எப். எனப்படும் டியூமர் நேசிரோசிஸ் பாக்டர் எனப்படும் கரும்புள்ளிகள் நன்கு பழுத்த வாழைப்பழங்களின் மேலே காணப்படும். இது ஒரு வகையான வேதிப்பொருளை உருவாக்கி புற்று நோயை உருவாக்கம் செல்களை எதிர்த்துப் போராடும்.

 

ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு தேவையான வைட்டமின் பி 6 அளவில் 42 சதவீதமும், பொட்டாசியத்தின் அளவில் 11 சதவீதமும் இப்பழத்தில் உள்ளது.

 

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம், இதய நோய்கள், ருமட்டாய்டு, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி, எலும்புச்சிதைவு மற்றும் ஆர்த்தரைடீஸ் ஆகிய நோய்களின் வாய்ப்பு குறையும். தினசரி ஒரு வாழைப்பழத்தை உண்டு வந்தால் செரிமான பிரச்னைகளை தவிர்க்கலாம். 

வெறும் வயிற்றில் 1 டம்ளர் வெந்நீரில் 1 டீஸ்பூன் மிளகுத் தூளை கலந்து குடித்து வந்தால் . . .

செப்டம்பர் 28, 2016

 வெறும் வயிற்றில் 1 டம்ளர் வெந்நீரில்  1 டீஸ்பூன் மிளகுத் தூளை  கலந்து குடித்து வந்தால் . . .

 

பெயரே தெரியாத பல நோய்கள் தற்போது வருவதால் ஏராளமானோர்  பாதிக்க‍ப்பட்டு வருகிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் உடம்பில்  நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதே முக்கிய காரணம். ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தி அவர்கள் பலவீனமாக இருப்பதற்கு அவர்களின் ஆரோக்கியமற்ற சில பழக்கவழக்கங்கள் தான்  பல நேரங்களில் காரணமாக இருக்கிறது. 

 

 

 

நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த ஏராளமான வழிகள் உள்ளது. அதில் ஒன்று காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் வெந்நீரில் 1 டீஸ்பூன் மிளகுத் தூளை சேர்த்து கலந்துக் குடிக்கலாம். இதை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகமாவதோடு, இன்னும் பல நன்மைகளும் உண்டு. 

வெந்நீரில் மிளகுத்தூள் கலந்துகுடிப்பதால் உடலிலுள்ள செல்கள் ஊட்டம் பெற்று, நீர்ச்சத்தைப் பெற்று, உடல் வறட்சி, சோர்வு, வறட்சியான சருமம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்துகிறது, இதனால் நோய்களின் தாக்குதல்களில் இருந்து விலகி ஆரோக்கியமாக இருக்கலாம்.


தினமும்  மிளகுத்தூள் கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஸ்டாமினா அதிகரிப்பதோடு  உள்ளுறுப்பு மண்டலங்கள் சீராக இயங்குவதற்கும் உதவுகிறது.

 

வெந்நீருடன் மிளகுத் தூள் கலந்து பருகும் போது குடலியக்கம் மேம்பட்டு, உடலில் உள்ள  கழிவுப் பொருட்கள்  மற்றும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, பைல்ஸ்  மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வருவதை தடுக்கப்படும்.

 

வெந்நீரில் மிளகுத் தூளைக் கலந்து தொடர்ச்சியாக பருகி வருகையில் உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு உடல் எடை வேகமாக குறையும் வாய்ப்புள்ளது.

 

அதிகாலையில் மிளகுத் தூளை வெந்நீரில் சேர்த்து கலந்து குடிப்பதனால், சருமங்களில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, சருமத்திலுள்ள எண்ணெய் பசையின்  உற்பத்தியும் குறைந்து, சருமம் பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மாரடைப்பு வருவதற்க்கான ஏழு அறிகுறிகள்

செப்டம்பர் 26, 2016

மாரடைப்பு வருவதற்க்கான ஏழு அறிகுறிகள்


நம்மில் பலருக்கு தெரிந்த மாரடைப்பிற்கான அறிகுறிகள் அதிக இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், அதிக கொழுப்பு சேர்தல் மற்றும் மனஅழுத்தம். இக்கரணங்களுடன் இந்த ஏழு அறிகுறிகளையும் தெரிந்துக்கொள்ளுங்கள். கீழ்க்காணும் இந்த ஏழு அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி மாரடைப்பு வராமல் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

 

#1 நீங்கா குளிர் மற்றும் காய்ச்சல்

 

 

#2 நெஞ்சு எரிச்சல்

 

 

#3 மூச்சுத்திணறல்

 

 

#4 அதீத உடல் சோர்வு

 

 

#5 தொடர் உடல் வலி

 

 

#6 மயக்கம் மற்றும் வேர்த்துக்கொட்டுதல்

 

 

#7 Xanthelasma என்னும் கண் கொழுப்பு உருளைகள் (கண்களுக்கு  அருகில் வரும் கட்டிகள்). Xanthelasma என்னும் இந்நோய் பெரும்பாலும் நாற்பது வயதிற்கு மேல் ஏற்படுபவை ஆகும்.சமீபத்திய கட்டுரை
சிரிப்பு யோகா செய்வதால்........
விமானத்தில் பறக்கும் போது காதுகள் அடைத்துக்கொள்வது ஏன்?
தினம் ஒரு வாழைப்பழம்
செபங்கள் பகுதி - 3 (அனுதின செபங்கள்)
செபங்கள் பகுதி - 2 (பொது செபங்கள்)
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter