‘கிரியேட்டிவ் ரைட்டிங்’ என்னும் கலையை ஊக்குவிக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்

செப்டம்பர் 29, 2016

‘கிரியேட்டிவ் ரைட்டிங்’ என்னும் கலையை ஊக்குவிக்கும் வெளிநாட்டு  பல்கலைக்கழகங்கள்

 

‘கிரியேட்டிவ் ரைட்டிங்’ என்னும் கலையை ஊக்குவிக்கும் வெளிநாட்டு  பல்கலைக்கழகங்கள்

 

ஏழுத்தானது ஒருவரின் சிந்தனையை தூண்டி, அவர்களது எண்ணத்தினை மாற்றி அமைத்து, மனதில் எழுச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் எழுத்துக்கு என்றுமே உண்டு!அத்தகைய ஆக்கப்பூர்வ ஏழுத்தினால், பிறரது சிந்தனையை தூண்டுவதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர்களது  படைப்பாற்றல் திறனை மேலும் மெருகேற்றிக்கொள்ள  சிறந்த படிப்பு ‘கிரியேட்டிவ் ரைட்டிங்’. இந்த எழுதும் கலையை ஊக்குவிக்கும் வகையில், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் கல்வி உதவித்தொகையை  வழங்குகிறது. அதில் சில பல்கலைக்கழகங்களின் பட்டியல் இதோ, 

 

* பால்மவுத் பல்கலைக்கழகம், இங்கிலாந்து
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் ‘கிரியேட்டிவ் ரைட்டிங்’ கல்வியை படிக்கும் சிறந்த  மாணவர்களை சர்வதேசளவில் தேர்வு செய்து, அவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக, அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து மொத்தம் 62 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் தொகையை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. இங்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆங்கில மொழியின் புலமைத் தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் 6.5 அல்லது 6 புள்ளிகளுடன் தேர்ச்சி பெற்றிக்கருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.falmouth.ac.உக்

 

* விக்டோரியா பல்கலைக்கழகம், வெலிங்டன்
நியூசிலாந்தில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான, விக்டோரியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., கிரியேட்டிவ் ரைட்டிங் முதுநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், ‘விக்டோரியா மாஸ்டர்ஸ்’ உதவித்தொகைக்கும்  விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்திட்டத்தின் கீழ், கிரியேட்டிவ் ரைட்டிங் துறையில் சிறந்த 30 மாணவர்களை தேர்வு செய்து, பரிசுகளையும் மற்றும் கல்வி உதவித்தொகையையும் விக்டோரியா பல்கலைக்கழகம் வழங்குகிறது.
உதவித்தொகையாக: ரூபாய் 99 லட்சத்து 7 ஆயிரம் (30 மாணவர்களுக்கும் சேர்த்து)
மேலும் விவரங்களுக்கு: www.victoria.ac.nz

 

* கொலம்பியா கல்லூரி, சிகாகோ (அமெரிக்கா)
இளநிலை மற்றும் முதுநிலை ‘கிரியேட்டிவ் ரைட்டிங்’ படிப்பில், எழுதும் திறமையும், படைப்பாற்றலுடன் ஒருங்கிணைந்து பெற்ற மாணவர்களுக்கு, பெட்டி ஷிப்லெட்டு  மற்றும் ஜான் ஷூல்ஸ் திட்டத்தின் கீழ் ரூபாய் 19 லட்சத்து 2 ஆயிரம் கல்வி உதவித்தொகையை கொலம்பியா கல்லூரி வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு: www.colum.எடு

 

* பிர்க்பெக் பல்கலைக்கழகம், லண்டன்
எம்.ஏ., கிரியேட்டிவ் ரைட்டிங் - படிப்பு பகுதி நேரம் மற்றும்  முழு நேரக் கல்வி முறையில் வழங்கப்படுகிறது.  ‘சோபி வார்ன் பெலோஷிப்’ எனும் திட்டத்தின்கீழ் இதில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ரூபாய் 15 லட்சத்து 5 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு: www.bbk.ac.uk


குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுமே, அவர்களது கல்விக் கட்டணத்தையே கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது.

 

 

கலை அறிவியல் படிப்புகள்

ஜூலை 05, 2016

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எதிர்காலத்தை எப்படி பொலிவடைய செய்யலாம் என்று தேர்வு முடிவுகள் வந்தவுடனே மாணவர்கள் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் அலைமோதுகின்றன. இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் சிந்தனைகள் பல விதமாக இருக்கின்றன. கல்வி தேவை அறிவை பெருக்கவும், வாழ்க்கை மேம்படவும், வேலை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதாரத் தேவைகளை சமாளிக்கவும், சாதனைகள் பல புரியவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. 

பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி தொடங்கச் செல்லும் மாணவர்களின் சதவிகிதம் தமிழகத்தில் சுமார் இருபது என்றால் மற்ற மாநிலங்களில் இன்னும் அதிகமாகவே உள்ளது. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கத்தை வாழ்க்கை முழவதும் சொல்லிக் கொடுப்பதுபோல இன்றைய தேவைகளை சந்திக்க மருத்துவம், பொறியியல் படிப்புகளை உயர்வாக நினைப்பதைத் தவிர்த்து அவையல்லாமல் வேறு படிப்புக்கள் நிறைய உள்ளன என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
பெரும்பாலானவர்கள் தேர்வு செய்வது கலை, அறிவியல் படிப்புகள் தான். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புக்கள் மட்டுமே வேலைவாய்ப்புக்களை உடனடியாக வழங்கும் என்ற கருத்து இப்போது காலாவதி ஆகிவிட்டது என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.
இந்தப் படிப்பில் மட்டுமே சேரவேண்டும், அதிலும் குறிப்பிட்ட கல்லூரியல் மட்டுமே சேர வேண்டும் என்ற நிபந்தனைகள் ஏதுமின்றி, படிப்பை முடித்தவுடன் வேலைவாய்பை பெற்றுக் கொடுக்ககூடிய கல்வியாக கலை, அறிவியல் படிப்புகள் உள்ளன. அதிலும், நிதியுடன் அதிகம் தொடர்படைய வணிகவியல் படிப்புக்கள் எப்போதும் வேலைகளை வாரி வழங்க கூடிய புகழ் மங்காத துறைகளாக உள்ளன.

வணிகவியல் பட்டதாரிகளை வளாக நுழைவுத் தோர்வு மூலம் தேர்வு செய்ய ஏராளமான தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. மாதம் ஒரு லட்சம் வரை ஊதியம் தரவும் பெரிய நிறுவனங்கள் தயாராக உள்ளன. கலை அறிவியல் படிப்புக்கள் மூலம் உலக அறிவை வளர்;த்துக்கொள்வதுடன் எந்தத்துறையிலும் எதிர்காலத்தில் சிறந்து வளரும் தன்மை கொண்டவராக மாற முடியும். இதற்கு உதாரணமாக ஏராளமான சாதனையாளர்களை பட்டியலிட முடியம். 
அனைத்துத் துறைகளிலும் தொடர்பு திறனை ஏற்டுத்திக்கொள்ளும் வாய்ப்பையும், அதற்கான அறிவையும் கலை அறிவியல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களால் மட்டுமே முடியும் என்று உறுதியாக சொல்ல முடியும். இவர்கள் தான் இன்றைக்கு பத்திரிகை, தொலைகாட்சி, தகவல் தொடர்பு துறை, வரவேற்பு, கலாச்சார பரிமாற்றம், கலைத்துறை, சேவைப் பணிகள், நிதித்துறை, வணிகத்துறை, நிர்வாகப் பணிகள், எனப் பல்வேறு துறைகளிலும் பிரகாசித்து வருகின்றனர். நம்பிக்கையோடு கலை அறிவியல் படிப்புக்களை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் வாழ்வில் வெற்றியாளர்களாக என்றைக்கம் திகழ முடியும். கலை அறிவியல் படிப்புக்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலம் வர உள்ளது என்று உறுதியாக கூற முடியும்.        

கலை அறிவியல் படிப்புக்கள் மீது ஆண்டுக்கு ஆண்டு ஆர்வம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆர்வம் இப்போது அதிகரித்து உள்ளது. 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் அறுபதுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. 
ஒரு நாட்டின் உயர்கல்விக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எற்தெந்த நாடுகளை நாம் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகள் என நினைக்கிறோமோ அவை கல்வியில் உயர்ந்திருக்கின்றன. அடிப்படை அறிவியலை யாரும் நிராகரித்து விட முடியாது. கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் ஒரு சில குறிப்பிட்ட பாடப் பிரிவுகளை, குறிப்பாக பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.சி.ஏ. போன்ற படிப்புக்களை மாணவர்கள் பயில விரும்புகின்றனர். இது தவிர இயற்பியல், வேதியில், கணிதம் போன்ற கலைப் படிப்புக்களும் முக்கியமானவை. இப்பாடப் பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில்  மாணவர்கள் சேர வேண்டும். 

கலை அறிவியல் கல்லூரிகளிலும் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என அரசும் கல்லூரி நிறுவனங்களும் முயற்சிகள் எடுத்து வருகின்றன. அமெரிக்கா ரஷிய போன்ற வல்லரசுகளாலும் முடியாத ஒன்றை முதல் முயற்சியிலேயே சாதித்துள்ளனர் இந்திய விஞ்ஞானிகள்.  உலமே வியக்கும் அளவுக்கு ஹாலிவுட் படத்தின் பட்ஜெட்டை விட மிகக் குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள். 
அறிவியில் ஆர்வமுள்ள மாணவ மாணவியருக்கு புதிய சவால்கள் வாய்ப்புகளோடு காத்திருக்கின்றன. விண்வெளித்துறை அடுத்த சில ஆண்டுகளில் இந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புக்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்கிறார் பெங்களுருவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. இந்த மாணவர்கள் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களில் சிறந்து விளங்கவேண்டும்.  
எனவே இதையெல்லாம் விடுத்து கட்டாயமாகத் திணிக்கப்படும் எந்த ஒன்றின் மீதும் மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் படிப்பின் மீது வெறுப்புத் தோன்றி வெறுப்பு அருவருப்பாக மாறி பகைமை வளரும் படிப்பாக அதை மாற்றி விடாமல் இருக்க பெற்றோர்கள் தம் பிள்ளைகளை குறைந்தபட்சம் அவர்கள் விரும்பும் கலை அறிவியல் படிப்புகளில் சேர்த்துப் படிக்கவைக்க முயலும்போது, படிப்பு மாணவர்களுக்கு வாழ்க்கைக்கான படிப்பினைகளை கற்றுத்தருவதோடு அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்தவர்களாக பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் துணைநின்று செயல்பட வேண்டும். இதன் மூலம் ஆயிரமாயிரம் கனவுகளோடு காத்திருக்கும் மாணவ! மாணவியரின் கனவுகள் நனவாகட்டும்.    
        
 

கலை, வணிகவியல் படிப்புகளுக்கு அதிகரிக்கும் மதிப்பு!

ஜூன் 21, 2016

பொறியியல் படிப்பில் சேருவதே பெருமையாகக் கருதப்பட்ட காலம் அது. தன் மகன் பி.இ. சேர்ந்திருக்கிறான் என்பதை பெற்றோர் பெருமையாகக் கூறிக் கொள்வர்.

2008-ஆம் ஆண்டு வரை இந்த நிலை இருந்தது உண்மைதான். ஆனால், 2008-இல் அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்த போது, அந்நிகழ்வு உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தகவல் தொழில்நுட்பப் பணிகளை பிற நாடுகளுக்கு அளிக்கும் பிரதான நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்கிறது. இந்த நிலையில் பொருளாதாரப் பின்னடைவைச் சீர்செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அயல் பணிகள் (ஆடஞ) வழங்குவதை அமெரிக்க நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.

இது இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும், அந்தத் துறையில் வேலைவாய்ப்பையும் வெகுவாக பாதித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் குறையத் தொடங்கியது. அதே நேரம் கலை, வணிகவியல் படிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றன என்கின்றனர் பேராசிரியர்கள்.

உதாரணமாக, 2013-14 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் 2,07,141 இடங்கள் இருந்தன. கலந்தாய்வு முடிவில் 1,27,838 இடங்களே நிரம்பின; 79,303 இடங்கள் காலியாக இருந்தன.

ஆனால், 2014-15 கல்வியாண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் கலந்தாய்வில் இடம் பெற்றபோதும், 1,02,700 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,02,000 இடங்கள் காலியாக இருந்தன.

மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருவதால், படிப்புகளை மட்டுமின்றி கல்லூரிகளையே இழுத்து மூடும் நிலைக்கு பொறியியல் கல்வி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இழுத்து மூடப்படும் 17 கல்லூரிகள் 2013-14 ஆம் ஆண்டில் சேர்க்கை குறைந்தவுடன், 80-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அனுமதி பெற்று இசிஇ, எம்.சி.ஏ., எம்பிஏ, பி.டெக். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கை இடங்களை பாதியாகக் குறைத்தன.

இந்த நிலையில், 2014-15 கல்வியாண்டில் 30-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனால் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட வருவாய் இழப்பைச் சந்தித்தன.

இந்த பாதிப்பு காரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த 17 பொறியியல் கல்லூரிகள், கல்லூரியையே முழுமையாக இழுத்து மூட இப்போது (2015-16 கல்வியாண்டில்) விண்ணப்பித்திருப்பதாக ஏஐசிடிஇ தென் மண்டல அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறையத் தொடங்கிய நிலையில், கலை, வணிகவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் 2011-ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததால், சென்னைப் பல்கலைக்கழகம் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் முக்கியப் படிப்புகளில் இடங்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் உயர்த்திக் கொள்ள 2011-இல் அனுமதி அளித்தது.

இந்த அனுமதியைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகள் பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50-லிருந்து 70-ஆக உயர்த்திக் கொண்டன.

ஆனால், அதன் பிறகும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

2014-15 கல்வியாண்டில், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில் பல்வேறு படிப்புகளில் சேர மொத்தம் 13 ஆயிரம் பேரும், அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரிக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

சென்னை, அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பல்வேறு படிப்புகளில் சேர 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். மாலை நேரப் பிரிவில் சேர 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இது கடந்த ஆண்டுகளை விட எண்ணிக்கையில் மிக அதிகம். அத்துடன், படிப்புகளைப் பொருத்த வரை வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

தனியார் வங்கி நிறுவனங்கள் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் கலை, அறிவியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்யத் தொடங்கிவிட்டன. மேலும், இதன் படிப்புக் காலமும் குறைவு. இவையே கலை, வணிகவியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் அதிகரிப்புக்குக் காரணம் என்கின்றனர் அந்தக் கல்லூரி நிர்வாகிகள்.

இரு மடங்கு விண்ணப்பம்

கலை, அறிவியல் படிப்புகள் மீது ஆண்டுக்கு ஆண்டு ஆர்வம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆர்வமும் இப்போது அதிகரித்துள்ளது.

2015-16 கல்வியாண்டில் புதிய கலை, அறிவியல் கல்லூரி தொடங்க கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் 60-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டுகளை விட இரு மடங்கு அதிகம். கடந்த ஆண்டுகளைப் பொருத்த வரை அதிகபட்சம் 30 விண்ணப்பங்களே பெறப்பட்டதாக இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்காலம் எப்படி?

கலை, வணிகவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரிப்பை உணர்ந்த மத்திய அரசு, தரமான, திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்கும் முயற்சியை இப்போது மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் நம்மோடு பகிர்ந்துகொண்ட விவரம்:

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடும் நிலை இப்போது உருவாகி வருகிறது. அதே நேரம் கலை, அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இதை அறிந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கலை, வணிகவியல் படிப்புகளை முடித்து வெளிவரும் பட்டதாரிகளை திறன் மிக்கவர்களாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக பட்டப் படிப்பு தர நிர்ணயத் திட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும்.

அதன்படி, படிப்பின் இறுதியாண்டில் மாணவர் பரிசோதிக்கப்பட்டு, முடித்துள்ள பட்டப் படிப்புக்கும், மதிப்பெண்ணுக்கும் மாணவர் எந்த அளவு தகுதியானவர் என்பது குறிப்பிடப்படும்.

இந்த நடைமுறை மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதும், தொழில்நிறுவனங்கள் தேர்வு செய்வதும் எளிதாகிவிடும்.

மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்யவுள்ள தேசிய கல்விக் கொள்கையில் இதுபோல மேலும் பல்வேறு திட்டங்கள் இடம்பெற உள்ளன என்றார்.

எம். மார்க் நெல்சன்

நன்றி : தினமணி மாணவர் மலர்

சமீபத்திய கட்டுரை
அதிக சம்பளம் வழங்கும் 10 வேலைகள்
என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் - 2017
பட்டதாரி என்ஜினீயர்களுக்கு கடற்படையில் எக்சிகியூட்டிவ் அதிகாரி பணிகள்
யூ.பி.எஸ்.சி. அறிவித்துள்ள புவியியல் வல்லுனர் 138 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்திய கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு மாலுமி பணி
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter