குழந்தைகள் பிறப்புக்கு மோசமான நாடு பாகிஸ்தான்

உலகிலேயே குழந்தைகளின் பிறப்புக்கு மிகவும் மோசமான சூழ்நிலை கொண்ட நாடு பாகிஸ்தான் என்று ஐக்கிய நாடு அவையின் யூனிசெப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

உலகில் பச்சிளங்குழந்தை பாதுகாப்புக்கு அதிக ஆபத்தான நாடுகளின் பட்டியிலில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளதாக இந்த நிறுவனம் வழங்கிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் பிறக்கின்ற குழந்தைகளில் உ5 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்தில் இறக்கின்றன.

 

அதில் 6 லட்சம் குழந்தைகள் இந்தியாவில்தான் இறக்கின்றன.

 

இந்த விகிதத்தில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக யூனிசெப் தெரிவித்திருக்கிறது.

 

பாகிஸ்தானில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 45.6 குழந்தைகள் இறக்கின்றன.

 

மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் இதற்கு அடுத்தாக உள்ளன.

 

இந்தியா 12வது இடத்தில் உள்ளது.

 

குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக ஜப்பான் உள்ளது.

 

அங்கு பிறக்கும் 1000 குழந்தைகளில் 0.9 குழந்தையே ஒரே மாதத்தில் இறக்கிறதாம்.

இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள் ரோந்து

சீனாவின் 5 போர் கப்பல்கள் இந்திய பெரங்கடலில் ரோந்து வருவது ஆசியாவில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

 

மாலத்தீவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்த ரோந்து நடைபெறுவதால். மிகவும் கவனிக்கப்பட்டு வருகிறது.

 

போர் நடக்கின்றபோது தேவைப்படுகின்ற தளவாடங்கள் அனைத்தையும் அடங்கிய போர்க் கப்பல்களும், உதவி டேங்கர்களும் இந்த ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீனாவின் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதில் இந்தியா மற்றும் சீனா இடையிலான பனிப் போர் சமீபத்தில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

 

மாலத்தீவு அரசியல் குழப்பத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் சீன போர்க் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் வட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் டிரம்ப் டவர்ஸ் குடியிருப்பு திட்டம்

இந்தியாவில் தொடங்கப்பட உள்ள டிரம்ப் டவர்ஸ் என்ற குடியிருப்பு திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் பதன்கிழமை இந்தியா வருகிறார்.

 

அமெரிக்க அதிபரின் டிரம்ப்பின் நிறுவனம் சார்பாக இந்த குடியிருப்பு திட்டம் தொடங்கப்படுகிறது.

 

தொழிலதிபரான டிரம்பின் நிறுவனமான டிரம்ப் ஆர்கனைஷேசன் பல ஆண்டுகளாக இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது.

 

இந்நிலையில். மும்பை, கொல்கத்தா, புனே மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் டிரம்ப் டவர்ஸ் என்ற பெயரில் சொகுசு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

 

இதன் கட்டுமானப் பணிகளைக் காண டிரம்ப் ஆர்கனைசேஷனின் செயல் தலைவரும், டொனால்ட் டிரம்ப்பின் மகனுமான ஜூனியர் டிரம்ப் பதன்கிழமை இந்தியா வருகிறார்.

 

நீச்சல் குளம், அழகுநிலையம், உடற்பயிற்சி கூடம், உணவகம், வர்த்தக மையம் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட டிரம்ப் டவரின் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை 15 லட்சம் டாலராக இருக்கும் என நம்ப்படுகிறது.

சூரிய மண்டலத்திற்கு வெளியே 100 புதிய கிரகங்கள் - நாசா

சூரிய மண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது.  .

 

புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு செய்வதற்கென 2009-ம் ஆண்டு கெப்லர் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம்.

 

அதில் பொருத்தப்பட்டுள்ள மிகவும் ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி சூரிய மண்டலத்துக்கு வெளியே அமைந்துள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

 

‘டென்மார்க்கை சேர்ந்த டெக்னிக்கல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், கெப்லர் எடுத்தனுப்பிய புகைப்படங்களை ஆய்வு மேற்கொண்டதில் 149 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

அவைகளில் 100 புதிய கிரகங்களாகும். இந்த அரிய கண்டுபிடிப்பு விண்வெளி வரலாற்றில் சாதனையாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கட்டுரை
இந்தியாவிலுள்ள மத தேசியவாதம் நாட்டையே அழித்து விடும் – ஆயர்கள் எச்சரிக்கை
ரோம் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வேறுபட்ட இறைநம்பிக்கை உடைய இளைஞர்கள்
மெல்கைட் முதுபெருந்தந்தையோடு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
சுமத்திரா தீவில் எரிமலை சீற்றம் – விமான போக்குவரத்து நிறுத்தம்
குழந்தைகள் பிறப்புக்கு மோசமான நாடு பாகிஸ்தான்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter