புதிய அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் கமல் ஹாசன்

கோலிவுட் திரை நட்சத்திரமான நடிகர் கமல் ஹாசன், தமிழ் நாட்டில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

 

மக்கள் நிதி மய்யம்“ என்ற பெயரில் இந்த கட்சியை தொடங்கியுள்ள அவர், மக்கள் நீதியை, நியாயத்தை எதிர்பார்க்கின்ற மய்யமாக தன்னுடைய கட்சி விளங்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

 

இன்று மதுரையில் ஒத்தக்கடையில் நடைபெற்ற அரசியல் பிரவேச பொது கூட்டத்தில் தன்னுடைய கட்சியின் பெயரையும், கொடியையும் கமல் ஹாசன் வெளியிட்டார்.

 

ஆறு கைகள் இணைந்து நடுவில் நட்சத்திரம் இருப்பது போன்ற கொடியை அவர் தனது கட்சியின் கொடியாக வெளியிட்டுள்ளார்.

 

ஆறு கைகளும் ஆறு திராவிட மாநிலங்களை குறிப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

இன்று காலையில் ராமேஸ்வரம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் இருந்து, தன்னுடைய அரசியல் பிரவேசத்தை கமல் ஹாசன் தொடங்கினார்.

 

மாலையில், மதுரை ஒத்தக்கடையில் அவர் அழைப்பு விடுத்திருந்த பொது கூட்டம் நடைபெற்றது.

 

இதில் இந்தியா முழுவதிலும் இருந்து அவருடைய ஆதரவாளாகள் கலந்து கொண்டனர்.

 

தமிழகத்திலிருந்து அவருடைய நற்பணி மன்றத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

தமிழகத்தில் இரந்து 8 ஊர்களை தத்தெடுத்து, அவற்றை முற்றியும் மாற்றியமைக்கும் வழிமுறையில் நற்பணிகளை தொடர இந்த கட்சி முடிவு செய்து இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

தாய்குலத்திற்கு ஸ்கூட்டா் திட்டத்தை தொடங்கி வைக்க தமிழகம் செல்லும் நரேந்திர மோடி

பெண்களுக்கு சலுகை விலையில் வழங்கவுள்ள ஸ்கூட்டா் திட்டத்தை தொடங்கி வைக்க  இந்திய தலைமையமைச்சா நரேந்திர மோடி செல்வதாக தெரிய வந்துள்ளது.

 

வசதி வாய்ப்பற்ற குடும்ப பெண்கள் வேலைக்கு செல்வதற்கும், வெளியில் செல்வதற்கும உதவியாக இருக்க பெண்களுக்கு சலுகை விலையில் இந்த ஸ்கூட்டா் வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தமிழக செயலகத்தில் திறந்து வைக்க அழைக்கப்பட்டபோது, நரேந்திர மோடி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல் ஹாசனின் அரசியல் மாநாட்டில் அரவிந்த கெஜ்ரிவால்

மதுரையில் பதன்கிழமை நடைபெறும் கமல்ஹாசனின் அரசியல் மாநாட்டில் டெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார்.

 

நடிகர் கமல்ஹாசன் 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

 

மதுரையில் முதல் அரசியல் மாநாட்டை அவர் நடத்துகிறார்.

 

முன்னதாக, விஜயகாந்தை, திமுக தலைவர் கருணாநிதி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு ஆகியோரை சந்தித்து கமல் ஹாசன் வாழ்த்துக்கள் பெற்றுள்ளார்.

குற்றச்செயல்களில் சென்னை 2ம் இடம்

இந்தியாவிலேயே தமிழகத்தின் சென்னை மாநகரம் குற்றச்செயல்களில் 2 ஆம் இடம் பெற்றிருக்கிறது.

 

மத்திய அரசின் தேசியக் குற்றப்பதிவு ஆணையம் அளித்துள்ள புள்ளிவிவரம் இதை காட்டுகிறது.

 

இதற்கு கவலை தெரிவித்துள்ள தமிழ் மாநில கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பை இன்னும் அதிகமாக செயல்திறனோடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, தமிழக மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பேருந்து கட்டணம் உயர்வை கண்டித்து மீண்டும் ஆர்ப்பாட்டம்

பேருந்து கட்டணம் உயர்வை கண்டித்து வரும் 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது.

 

அதனால், கல்லூரி மாணவர்கள் முதல் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரை அனைவரும் கடந்த மாதம் 29ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, அடுத்தக் கட்ட போராட்டத்திற்காக திமுக தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கலந்து கொண்டார்.

சமீபத்திய கட்டுரை
இந்தியாவிலுள்ள மத தேசியவாதம் நாட்டையே அழித்து விடும் – ஆயர்கள் எச்சரிக்கை
ரோம் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வேறுபட்ட இறைநம்பிக்கை உடைய இளைஞர்கள்
மெல்கைட் முதுபெருந்தந்தையோடு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
சுமத்திரா தீவில் எரிமலை சீற்றம் – விமான போக்குவரத்து நிறுத்தம்
குழந்தைகள் பிறப்புக்கு மோசமான நாடு பாகிஸ்தான்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter