யாழ்பாண உயர் நீதிமன்ற நீதிபதியின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

ஜூலை 23, 2017

யாழ்பாண உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் சென்ற வாகனம் வழிமறிக்கப்பட்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 

நீதிபதி இளஞ்செழியனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

 

அவருடைய பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

 

இந்த பணியாளர்களில் ஒருவருக்கு தோள்பட்டையிலும், இன்னொருவருக்கு வற்றிலும் காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கை அனுராதாபுரம் சிறையில் தமிழர்களை சந்தித்த ஐநா சிறப்பு தூதர்

ஜூலை 15, 2017

ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு தூதர் பென் எமர்ஸன் அநுராதபுரத சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சந்தித்துள்ளார்.

 

இலங்கையில், அரசுக்கும், தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இனப்போரின்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

அனுராதபுரம் சிறைக்கு நேரில் சென்ற தூதர் பென் எமர்ஸன் பயங்கரவாத தடைச் சட்டம் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதித்திருக்கிறதா என்பதை அவர் ஆய்வு செய்தார்.

 

பின்ன்ர், விடுதலை செய்யப்பட்ட தமிழர்கள் சிலரையும் சந்தித்து பேசிய அவர், சிறை வாழ்க்கைக்குப் பின்னர் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் கேட்றிந்தார்.

 

இலங்கை: டெங்கு காய்ச்சல் - கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை

ஜூலை 08, 2017

இலங்கையில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியுள்ளதால், அதனை ஒழிக்க மிகவும் தீர்க்கமான நடவடிக்கை அவசியமாகிறது இலங்கை அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர், அதிபரையும், சுகாதார அமைச்சகத்தையும் கேட்டு கொண்டுள்ளனர்.

 

டெங்கு காய்ச்சலை ஒழிக்க உறுதியான நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட அது வேண்டுகோள் வைத்துள்ளது.

 

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் பரவி இயல்பு வாழ்க்கையை முடக்கிபோட்டுள்ளது. 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இதுவைரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 227 பேர் இறந்துள்ளனர்.

 

டெங்கு காய்ச்சலை பரவ செய்யும் கொசுக்கள் உருவாகாமல் தடுக்க, நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருந்தல், மூடிய சாக்கடைகள் என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை: எல்லை தாண்டி மீன்பிடிப்போருக்கு அபராதமும், சிறையும்

ஜூலை 07, 2017

எல்லை தாண்டி மீன் பிடித்தொழிலில் ஈடுபடுவோருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

 

எல்லை தாண்டி தங்களுடைய கடல் பரப்புக்கு வந்து மீன் பிடிக்கும் மீனவர்களைக் கட்டுப் படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது நிறைவேற்றப்பட்டால். தமிழக மீனவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

இலங்கை கடற்பகுதியில் எல்லை மீறி மீன்பிடிக்கும் மீனவர்களின் படகின் தன்மையைப் பொறுத்து இலங்கை ரூபாயில் ரூ.10 லட்சம் முதல் ரு. 10 கோடி வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சௌதி இளவரசர் இலங்கைக்கு திடீர் பயணம்

ஜூலை 05, 2017

சௌதி அரேபிய இளவரசர் அல்வலீட் பின் தலால் அப்துல்அஸீஸ் அல் சௌத் திடீரென்று இலங்கைக்கு வந்துள்ளார்.

 

செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சிறப்பு சந்திந்திப்பை நடத்திவிட்டு இரு தரப்பு கலந்துரையாடல் ஈடுபடுவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அதுபோல வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்காவுடனும் சந்திப்பு பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

 

இலங்கையில் நான்கு மணிநேரம் மட்டுமே அவர் தாங்கியிருந்து  பல்வேறு சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

 

கத்தாருக்கு தடை விதித்து, வளைகுடாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சவூதி இளவரசரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கட்டுரை
ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருப்தை கண்டித்துள்ள கர்தினால் ஸென்
இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு
இதுவரை அல்லாத அளவு ஜெர்மனி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
தமிழகத்தில் அன்புச்சுவர் திட்டம் – பாராட்டு பெறும் ஆட்சியாளர்
திருச்சபைகள் ஒரே பாலின திருமணத்தை கடைபிடிக்க வேண்டும் – பிரிட்டன் அமைச்சர்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter