கோவாவில் 48வது திரைப்படவிழா – ஒரேயொரு தமிழ் திரைப்படம் தேர்வு

நவம்பர் 21, 2017

கோவாவிலுள்ள பனாஜி நகரில் 48வது சர்வதேச திரைப்படவிழா துவங்கியுள்ளது.

 

உலகிலுள்ள 82 நாடுகளைச் சேர்ந்த 195 திரைப்படங்கள் திரையிடப்படும் இந்த 48வது திரைப்பட விழா 28ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

 

இவ்விழாவில் 64 இந்திய திரைப்படங்களும் இடம்பெறுகின்றன. இதில் ஒன்றுதான் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்தியன் பனோரமா எனும் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. தமிழ் மொழியைப் பொறுத்த வரையில், ஒரே ஒரு படம் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், முக்கிய பட்டியலில் பாகுபலி 2 வும் இடம்பெறுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஆவணப் படங்கள் பல எடுத்த அம்ஷன் குமாரின் இயக்கத்தில் உருவான மனுசங்கடா திரைப்படம்தான் தமிழ் மொழி திரைப்படம்.

 

90 நிமிடங்கள் மட்டும் ஒடக்கூடிய இந்த திரைப்படம் ஏற்கனவே மும்பையில் நடந்த திரைப்பட விழாவில பெரிதும் புகழ்பட்டதாகும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்

நவம்பர் 21, 2017

விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அனைத்திந்திய இந்திய விவசாயிகள் கூட்டமைப்பினர் நடத்தி வருகின்றனர்.

 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தரில் இரண்டு முறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், மொத்தம் 141 நாட்கள் பேராடிய பின்னர், வீடு திரும்பினர்.

 

இந்த போராட்டங்களின்போது இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.  

 

இந்நிலையில், காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது, உற்பத்தி விலையில் 50 சதவீத விலை நிர்யணம், சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அனைத்திந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்தெடுக்கப்படுவாரா?

நவம்பர் 21, 2017

அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவா் பதவிக்கான தோ்தல் டிசம்பா் 16ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் தோ்தல் நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

டிசம்பா் முதல் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மனுதாக்கல் செய்ய டிசம்பா் 4 ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டிசம்பா் 19ம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

கட்சியின் துணைத்தலைவா் ராகுல்காந்தி தலைவராக போட்டியிடுவார் என்று இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, ராகுல் காந்தியையே கட்சியின் தலைவராக்க வேண்டும் என்றும் இந்த காரிய கமிட்டியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்த தீா்மானத்தால் தலைவா் தோ்தலில் ராகுல் காந்தியை தவிற வேறு யாரும் போட்டியிட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

 

கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு பின்னா் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவா் கிடைக்க இருப்பதால் அக்கட்சி தொண்டா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

உலக அழகி போட்டியை மனிஷி சில்லார் வெல்ல காரணம் என்ன தெரியுமா?

நவம்பர் 21, 2017

உலக அழகி போட்டியின்போது, கேட்கப்பட்ட கேள்விக்கு, மனுஷி செல்லார் கூறிய புத்திசாலித்தனமான பதில்தான் உலக அழகி போட்டியில் வெற்றிபெற காரணமாகியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

உலக அழகி பட்டம் வென்றுள்ள மனிஷி சில்லாருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

 

இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 

உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படும் பணி எது? என்று அவரிடம் கடைசியில் கேட்கப்பட்டுள்ளது.

 

இதற்கு பதிலளித்த மனிஷி சில்லார், 'தாய்மை தான் உலகிலேயே அதிக மதிப்புள்ள பணி என்றும், இந்த பணிக்கு சம்பளமாக பணம் தரப்படாவிட்டாலும், அன்பும், பாசமும் மரியாதையும் அதிகமாக கிடைக்கும். எனவே தாய்மையே உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படும் பணி என்று கூறினார்.

 

இந்த பதில் நடுவர்கள் அனைவரையும் கவர்ந்துவிட்டதால், அவருக்கு உலக அழகி பட்டம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய கட்டுரை
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழலாமா?
ரோஹிஞ்சாக்களை திருப்பி அனுப்பும் ஒப்பந்த்தில் வங்கதேசம் மியான்மர் கையெழுத்து
இளைஞர் மாநாட்டின் தலைமை தொடர்பாளராக பிரேஸில் கர்தினால் நியமனம்
இணையம் குழந்தைகளுக்கானது அல்ல - ஆயர்
எழைகளுக்கு உதவி பராமரிப்பது விண்ணுலகிற்கு செல்லும் கடவுச்சீட்டு - திருத்தந்தை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter