இளைஞர் மாநாட்டின் தலைமை தொடர்பாளராக பிரேஸில் கர்தினால் நியமனம்

நவம்பர் 24, 2017

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இளைஞர்கள் பற்றிய ஆயர்கள் மாநாட்டின் தலைமை தொடர்பாளராக பிரேஸிலின் கர்தினால் செர்ஜியோ டா ரோச்சாவை திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

 

58 வயதான பிரேஸில் பேராயரின் இந்த நியமனத்தை நவம்பர் 18 ஆம் தேதி வத்திக்கான் அறிவித்தது.

 

இந்த மாநாட்டின் கருத்தையொட்டி ஒருங்கிணைந்த வரைவை வழங்குவது இவருடைய பொறுப்பாக இருக்கும்.

 

திருத்தந்தையின் முன்மொழிவுப்படி இந்த மாநாட்டில் உரையாற்றுவோரின் பேச்சுக்களை சுருக்கமாக வழங்குவதும் இவரது முக்கிய கடமை.

 

அடுத்த ஆண்டு அக்டோபர் 3 முதல் 28க்குள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டில் இளைஞர்கள், இறைநம்பிக்கை மற்றும் இறையழைத்தலை தேர்ந்து தெளிதல் ஆகியவற்றில் கவணம் செலுத்தப்படும்.  

இணையம் குழந்தைகளுக்கானது அல்ல - ஆயர்

நவம்பர் 24, 2017

குழந்தைகளுக்கு இணையம் பன்முக ஆபத்துகளை கொண்டு வருகிறது. அது வயதுவந்தோருக்கு மட்டுமே என்ற தொடக்கத்தையே கொண்டிருந்தது என்று ஆயர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

எண்ணியல் காலத்தில் குழந்தைகள் மாண்பு பற்றி உலக மாநாட்டு கருத்துக்களை வெஸ்ட்மினிஸ்டர் துணை ஆயர் ஜான் ஷெர்ரிங்டன் மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.

 

அக்டோபரில் வத்திக்கான் இந்த மாநாட்டை நடத்தியது.

 

எனவே, இணையத்தால் பன்முக ஆபத்துக்களை குழந்தைகள் சந்திக்கும் தற்போதைய நிலைமையில் வத்திக்கான் கவலை அடைந்துள்ளது என்பதை இந்த மாநாடு காட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எளிதாக, சுதந்திரமாக வயதுவந்தோர் தொடர்பாடல் மேற்கொள்ளுவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்புதான் இணையம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழைகளுக்கு உதவி பராமரிப்பது விண்ணுலகிற்கு செல்லும் கடவுச்சீட்டு - திருத்தந்தை

நவம்பர் 24, 2017

நம்மிடையே உள்ள ஏழைகளுக்கு உதவி, அவர்களை பராமரிப்பதுதான், நாம் விண்ணுலகிற்கு செல்லுவதற்கு தேவைப்படுகின்ற கடவுச்சீட்டு என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

மக்கள் தங்களின் வாழ்க்கை பாதையில் அடிப்படை தெரிவுகளை கொண்டுள்ளனர். பூமியில் செல்வம் சோத்து வைப்பது அல்லது விண்ணகத்தை பெற்றுகொள்ள செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவுவது ஆகியவையே இந்த அடிப்படை தெரிவு என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

அன்பில் நாம் செய்கின்ற முதலீடு அனைத்தும் அப்படியே நிலைத்திருக்கும், மற்றவை அனைத்தும் மறைந்துவிடும் என்று முதலாவது உலக ஏழைகள் தின ஞாயிறு திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

புனித பேதுரு பேராலயத்தில் இதற்காக நடைபெற்ற திருப்பலியில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ஏழைகள் பங்கேற்றனர்.

 

திருப்பலியின்போது பீடத்தில் உதவுபவராக ஏழைகள், குடியேறிகள் அல்லது வீடற்றவர்கள் இருந்தனர்.

கர்த்தர் கற்பித்த செபத்தின் திருத்தியமைத்த பதிப்பை பயன்படுத்த இருக்கும் பிரான்ஸ் கத்தோலிக்கர்கள்

நவம்பர் 24, 2017

அடுத்த மாதம் தொடங்கி, திருத்தியமைக்கப்பட்ட கர்த்தர் கற்பித்த செபத்தை பிரான்ஸ் கத்தாலிக்கர்கள் பயன்படுத்தவுள்ளனர்.

 

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு பின்னர் தற்போது இருக்கும் மொழிபெயர்ப்புக்கு பதிலாக இந்த புதிய பதிப்பு செபிக்கப்படும்.

 

எங்களை சோதனையில் விழ விடாதேயும் என்று பொருள்படும் சொற்கள் எங்களை சோதனையில் நுழைய விடாதேயும் என்று சொல்லப்படும் இந்த புதிய பதிப்பை செபிப்பதற்கு கடந்த மார்ச் மாதம் பிரான்ஸ் ஆயர்கள் ஒப்பு கொண்டனர்.

 

இதற்கு முந்தைய பதிப்பு தெளிவாக இல்லாததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாடுகளின் வழிபாடுகளை மேற்பார்வையிடும் ஆயர் கே டிகெரிமெல் தெரிவித்துள்ளார்.

எல்லோரும் கடவுளின் குழந்தைகள் – மியான்மர் மக்களிடம் திருத்தந்தை

நவம்பர் 24, 2017

நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகளே என்று மியான்மர் மக்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

கத்தோலிக்கர்களை தங்களுடைய இறைநம்பிக்கை மற்றும் இரக்க செயல்பாடுகளில் உறுதிப்படுத்தவும், இணக்கம் மற்றும் ஒத்துழைப்பை கட்டியமைக்கும் எல்லா முய்சிகளை ஊக்கமூட்டவும் விரும்புவதாக மியான்மரில் பயணம் மேற்கொள்வதையெட்டி, எல்லா மத நம்பிக்கையாளர்களுக்கும் அனுப்பிய செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

திருத்தந்தை மியான்மரில் பயணம் மேற்கொள்வதையொட்டி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள காணொளி செய்தியில். திருத்தந்தை இந்த செய்தியை வழங்கியுள்ளார்.

 

மத நம்பிக்கையாளர்களும், எல்லா இடங்களிலும் வாழும் நல்லெண்ணமுடையோரும் பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதை வளர வேண்டும் என்று விரும்புகின்றனர். இதனால், ஒரு மனித குடும்பத்தின் உறுப்பினர் என்ற உணர்வு நம்மில் வளரும். நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகள்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியிருக்கிறார்.

சமீபத்திய கட்டுரை
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழலாமா?
ரோஹிஞ்சாக்களை திருப்பி அனுப்பும் ஒப்பந்த்தில் வங்கதேசம் மியான்மர் கையெழுத்து
இளைஞர் மாநாட்டின் தலைமை தொடர்பாளராக பிரேஸில் கர்தினால் நியமனம்
இணையம் குழந்தைகளுக்கானது அல்ல - ஆயர்
எழைகளுக்கு உதவி பராமரிப்பது விண்ணுலகிற்கு செல்லும் கடவுச்சீட்டு - திருத்தந்தை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter