விமானப்படையில் பயிற்சியுடன் அதிகாரி வேலை

ஜூன் 27, 2016

விமானப்படையில் ‘கமிஷன்டு ஆபீசர்’ பணியிடங்களுக்கு முதுகலை பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். ஆண்–பெண் இருபாலருக்கும் வாய்ப்பு உள்ளது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

இந்திய விமானப்படை, நமது நாட்டின் வான்வழி பாதுகாப்பை கட்டிக் காக்கும் ராணுவப் பிரிவாகும். இந்த படைப்பிரிவில் ‘‘கமிஷன்டு ஆபீசர்’ (மெட்டோராலஜி பிராஞ்ச்– ஜூலை2017) எனப்படும் அதிகாரி பணிகளுக்கு முதுகலை பட்டதாரிகளை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்–பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

201/17ஜி/பி.சி. சேர்க்கையின் அடிப்படையில் ஆண் விண்ணப்பதாரர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணியிடங்களாகும். இதேபோல 201/17ஜி ஷாட் சர்வீஸ் கமிஷன் சேர்க்கையில் ஆண்–பெண் இருபாலருக்கும் பணிகள் உள்ளன.

இந்த பணிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை தெரிந்து கொள்வோம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1–7–2017 தேதியில் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2–7–1991 மற்றும் 1–7–1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், என்விரான்மென்டல் சயின்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், ஓசனோகிராபி, மெட்டோராலஜி, அக்ரிகல்சரல்,  ஈகாலஜி, என்விரான்மென்ட், ஜியோபிசிக்ஸ், என்விரான்மென்டல் பயாலஜி போன்ற கலை அறிவியல் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பின்போது கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

உடற்தகுதி: 

ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157.5 சென்டிமீட்டர் உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு, பார்வைத்திறன், உடல்–உள நலம் போன்றவை விமானப் படைக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா? என்பது பரிசோதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு ஸ்டேஜ்–1 தேர்வில் நுண்ணறிவுத்திறன் சோதிக்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். பிறகு ஸ்டேஜ்–2 தேர்வில் உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின் ஒரு வருட பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை புகைப்படம் ஒட்டி நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து, புகைப்படங்கள், ரூ.27 ஸ்டாம்ப் ஒட்டிய சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவை இணைக்க வேண்டும்.

அஞ்சல் முகப்பில்   APPLICATION FOR METEOROLOGY BRANCH COURSES COMMENCING IN JULY 2017  என்று குறிப்பிட்டு   POST BAG NO.001, NIRMAN BHAWAN POST OFFICE, NEW DELHI  110106  என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். சாதாரண தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 16–7–2016

மேலும் விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள் ஜூன் 18–24 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கலாம்.

நன்றி : தினத்  தந்தி

114 உதவி மேலாளர், இளநிலை பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு

ஜூன் 23, 2016

தில்லி மெட்ரோ ரயில்வே கழகத்தில் காலியாக உள்ள 114 உதவி மேலாளர், இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVT No. DMRC/PERS/22/HR/2016(86) Dated: 18/05/2016

மொத்த காலியிடங்கள்: 114

பணி: ASSISTANT MANAGER (ELECTRICAL)

காலியிடங்கள்: 12
 

பணி: ASSISTANT MANAGER (SIGNAL & TELECOME)

காலியிடங்கள்: 08
 

பணி: ASSISTANT MANAGER (ELECTRICAL)

காலியிடங்கள்: 15
 

பணி: ASSISTANT MANAGER (SIGNAL & TELECOME)

காலியிடங்கள்: 07

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

 

பணி: JUNIOR ENGINEER (ELECTRICAL)

காலியிடங்கள்: 54

சம்பளம்: மாதம ரூ.13,500 - 25,520

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

 

பணி: JUNIOR ENGINEER (ELECTRONICS)

காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம ரூ.13,500 - 25,520

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ராணிக்ஸ், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.delhimetrorail.com/CareerDocuments/Advtt_86_A.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

நன்றி: தினமணி

 

கிளார்க், நூலகர் பணி - தேசிய சுகாதார மையம் : அகமதாபாத்

ஜூன் 23, 2016

அகமதாபாத்தில் செயல்ப்டு வரும் தேசிய சுகாதார மையத்தில் "National Institute of Occupational Health" காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Accounts Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Section Officer - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

பணி: Office Assistant - 01
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Library Information Assistant - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

பணி: Stenographer (English) - 03
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk - 03
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, NIOH, Ahmedabad என்ற பெயருக்கு SBI Civil Hospital Branch, Ahmedabad மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nioh.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி., தேவையான சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றை இணைத்து விரைவு அல்லது பதிவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Director, 
National Institute of Occupational Health, 
Meghani Nagar, Ahmedabad - 380 016

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2016

மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nioh.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நன்றி : தினமணி

சமீபத்திய கட்டுரை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter