பனிசறுக்கு ஹாக்கி அணி பற்றி கருத்து மன்னிப்பு கோரிய தென் கொரிய அதிபர்

ஜனவரி 20, 2018

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட மற்றும் தென் கொரிய பெண்கள் பனி ஹாக்கி அணிகள் இணைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கு தென் கொரிய பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார்.

 

தென் கொரிய அணி எப்படியும் பதக்கம் வெல்ல போவதில்லை என்பதால் இந்த யோசனை நல்லது என்று லீ நாக்-யோன் முன்னதாக தெரிவித்ததாக வெளியாகியிருந்தது.

 

தன்னுடைய கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பிருப்பதால், வருந்துவதாக அவர் தெரிவித்தார்.

 

இந்நிலையில், வட கொரிய வீரர்களை இந்த கூட்டு அணியில் பங்கேற்க செய்ய தென் கொரிய அணியிலுள்ள சில வீரர்கள் வெளியேற வேண்டியிருப்பதால் இந்த திட்டத்துக்கு தென் கொரியாவில் எதிர்ப்பு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தைவான் சீனா இடையே பதட்டம் அதிகரிப்பு

ஜனவரி 20, 2018

அடுத்த மாதம் வரயிருக்கும், சீன புத்தாண்டு தினத்தன்று சீன பெருநிலப்பகுதியில் இருந்து தைவானுக்கு சுமார் 200 விமானங்கள் இயக்கப்படுவதை அனுமதிக்க தைவான் அனுமதி மறுத்துள்ளது.

 

இதனால், சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே இராஜிய ரீதியிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

 

இருப் பகுதிக்கும் மத்தியில் அமைந்திருக்கும் விமான தளத்தை பயன்படுத்த பெய்ஜிங் ஒருதலைப்பட்சமாக முடிவு செய்தது தைவானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

 

தைtவான் சீன பெருநிலப்பகுதியோடு இருப்பதாக தோற்றத்தை ஏற்படுத்த  சீனா கட்டாயப்படுத்துவதாக தைவான் எண்ணுகிறது.  

 

2 ஆண்டுகளுக்கு முன்னர் தைவான் மக்கள் சுதந்திரத்துக்கு ஆதரவான சாய் இங்-வென்னை அதிபராகத் தேர்ந்தெடுத்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மோசமடைந்து காணப்படுகிறது.

குவைத்துக்கு வேலைக்கு செல்ல பிலிப்பீன்ஸ் தடை

ஜனவரி 20, 2018

குவைத்திற்கு பிலிப்பீன்ஸ் நாட்டு மக்கள் வேலைக்கு செல்வதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. 

 

குவைத்தில் பணிபுரிந்த பிலிப்பீன்ஸ் நாட்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது, இறந்து போவது குறித்த தகவல்களை அடுத்து பிலிப்பீன்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

 

 

குவைத்தில் வீட்டு வேலை பார்க்கும் தொழிலாளிகள் நான்கு பேர் கொடுமைப்படுத்தப்பட்டதை அடுத்து அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே வியாழக்கிழமையன்று தெரிவித்தார்.

 

இது தொடர்பாக, விசாரணைகள் முடியும்வரை பிலிப்பீன்ஸ் தொழிலாளர்கள் குவைத்திற்கு வேலைக்கு அனுப்பப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிலிப்பைன்ஸ் தொழிலாளர் நலத்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

வளைகுடா நாடுகளில் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு உள்ளாவது தொடர்பான கவலைகளை மனித உரிமை ஆர்வலர்கள் அடிக்கடி வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் பற்றிய கருத்தில் டிரம்ப் உறுதி

ஜனவரி 19, 2018

மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவது தொடர்பான கருத்தில் தன்னுடைய மிக மூத்த அதிகாரி தெரிவித்த கருத்துக்கு முரண்பட்ட கருத்தை அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

 

மெக்ஸிகோ எல்லையோரமாக தடுப்புச்சுவர் எழுப்புவது பற்றிய தன்னுடைய கருத்துகள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதற்கு, டிரம்ப் மறுத்துள்ளார்.

 

மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவது தொடர்பான டிரம்பின் பார்வை, 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரையின் முக்கிய பகுதியாக படிப்படியாக உருவானதாக வெள்ளை மாளிகையின் முப்படை ஊழியர்களின் தலைவர் ஜான் கெல்லி ஃபாக்ஸ் நியூஸிடம் முன்னதாக கூறியிருந்தார். 

 

ஆனால், மெக்ஸிகோ தடுப்புச்சுவர் பற்றிய தன்னுடைய பார்வை அப்படியே இருக்கிறது, மாறவில்லை என்று டுவிட்டர் பதிவில் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இதனை கட்டுவதற்கு மெக்ஸிகோ நேரடியாகவோ, மறைமுகமாகவே நிதி வழங்கும் என்று டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெனிசுவேலா அதிகாரிகள் மீது தடை - ஐரோப்பிய ஒன்றியம்

ஜனவரி 19, 2018

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் நிலவி வருகின்ற மனித உரிமை நிலவரம் குறித்த கவலைகள் அதிகரித்து வருகிறது.

 

எனவே, ஏழு வெனிசுவேலா அதிகாரிகள் மீது தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிக ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. 

 

இந்த ஏழு அதிகாரிகள் வெளிநாட்டில் பயணம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கவும், சொத்துகளை முடக்கவும்  ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிய வருகிறது.

 

அடுத்த வாரம் நடைபெற இருக்கின்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் இந்த தற்காலிக தடைக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அரசுக்கு எதிரான போராட்டங்களில்,  கடந்த டிசம்பர் மாதம் முதல் குறைந்தது 6 பேர் இறந்துள்ளனர்.

சமீபத்திய கட்டுரை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter