ஜல்லிக்கட்டில் விலங்கு வதை இல்லை – விலங்குகள் நல ஆணையம்

ஜனவரி 19, 2018

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் எதுவும் சித்தரவதைக்கு உள்ளாகவில்லை என்று இந்திய விலங்குகள் நல ஆணையம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

 

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் கொடுமைப்படுத்தபடபடுவதை அறிய, விலங்குகள் நல ஆணையம் சார்பாக கண்காணிப்பாளர்கள் ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டனர்.

 

இதுவரையில் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கொடுமை இழைக்கப்பட்டதாக புகார்கள் எதுவுமில்லை  என்று இந்திய விலங்குகள் நல ஆணையத்தின் தலைவர் குப்தா தெரிவித்துள்ளார்.

 

பொங்கல் தினத்தை முன்னிட்டு, பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதிதான் இறந்தார் - அப்போலோ

ஜனவரி 18, 2018

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதிதான் உயிரிழந்தார் என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

ஜெயலலிதாவின் இறப்பு தொடா்பாக முரண்பட்ட கருத்து வெளியாகியுள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

 

புதன்கிழமை மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் சசிகலாவின் சகோதரா் திவாகரன் கலந்துகொண்டு பேசியபோது முன்னாள் முதல்வா் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி இரவு 11.30 மணியளவில் மரணமடைந்ததாக தெரிவித்தார்.

டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். மருத்துவமனையின் பாதுகாப்பு கருதி மருத்துவமனை அடுத்த நாளில் மரண அறிவிப்பை வெளியிட்டது என்று அவர் கூறினார்.

 

இதனை மறுத்து அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவர் சந்தேக மரணம்

ஜனவரி 17, 2018

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் படித்து வந்த தமிழக மாணவர் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்துள்ளார்.

 

திருப்பூரைச் சேர்ந்த மாணவன் சரத்பாபு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ் படித்து வந்தார்.

 

புதன்கிழமை அதிகாலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறையில் சடமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

தனக்கு தானே இன்சுலின் போட்டுக்கொண்டதால் இந்த மாணவன் சரத்பாபு தற்கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தெளிவாக தெரியாததால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

ஏற்கெனவே கடந்த ஆண்டு, டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் பயின்ற கனேஷ் என்ற மாணவர் இதே போன்று மர்மமான முறையில் இறந்தார்.

 

மீண்டும் அதே போன்றதொரு மரணம் நடைபெற்றுள்ளதால் தமிழ் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரை நிறைவுஈ எதிர்பார்ப்பு அதிகரிப்பு

டிசம்பர் 20, 2017

ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் தோ்தல் பரப்புரை நிறைவு பெற்றது.

 

ஆா்.கே.நகா் இடைத் தோ்தலுக்கான பரப்புரைகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வந்தது.

 

செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., சுயேட்சை வேட்பாளா் டிடிவி தினகரன், பா.ஜனதா, நாம் தமிழா் கட்சி என எல்லா தரப்பினரும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனா்.

 

வெளி நபா்கள் யாரும் அங்கிருக்கக் கூடாது என்பதால்  விடுதிகள் உள்பட அங்குள்ள இடங்களில் தங்கியிருப்போர் வெளியேறி வருகின்றனர்.

 

செய்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 21ம் தேதி மாலை வரை சமூக வளை தளங்கள் உட்பட எந்த விதத்திலும், எந்த கட்சியையும் ஆதரித்தோ, கட்சிகள் மீது குறை கூறியோ விளம்பரங்கள் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம்

டிசம்பர் 14, 2017

டிசம்பர் 31ம் தேதிக்குள் தொடக்கக்கல்வியில் பயிலும் அனைத்து பள்ளி மாணவா்களும் ஆதார் எண் பெற்றிருப்பது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

 

தொடக்க கல்வி இயக்க கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி பயின்று வருகின்ற மாணவா்களில் இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவா்களுக்கு ஒன்றிய அளவில் ஏற்பாடுகள் செய்து விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

 

மாணவர்களின் விபரங்களை பெற்று இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் இந்த பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய கட்டுரை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter