பெரு நாட்டு பயணத்தின்போது அமேசானுக்கு அச்சுறுத்தல் பற்றி திருத்தந்தை எச்சரிக்கை

ஜனவரி 21, 2018

அமேசான் மீதும், அங்குள்ள மக்கள் மீதும் வழங்கப்படும் அழுத்தங்கள் வணிக ஆதாயங்களுக்காக வழங்கப்படுவதாக என்று பெரு நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

இதுபோன்ற அச்சுறுத்தலை இந்தப் பிரதேசம் ஒருபோதும் சந்தித்ததில்லை என்று புயர்டோ மால்டோனாடோ என்ற சிறிய நகரை பார்வையிட்டபோது பழங்குடியின மக்களிடம் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

 

தங்களுடைய நிலங்களில் இருந்து விரட்டப்படுவதாக கூறி, தங்களை பாதுகாக்க வேண்டும் என்று பழங்குடியினர் திருத்தந்தையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

முதலில் பயணம் மேற்கொண்ட சிலி நாட்டில், அருட்தந்தையரின் பாலியல் தாக்குதல் சர்ச்சைகளால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான திருத்தந்தை பிரான்சிஸ், அடுத்த்தாக பெரு நாட்டில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பாலியல் விவகாரம் பற்றிய திருத்தந்தை கருத்துக்கு சிலியில் அதிருப்தி

ஜனவரி 20, 2018

அருட்தந்தை ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுவர்கள் அவதூறு பரப்புவதாக திருத்ததை பிரான்சிஸ் குற்றஞ்சாட்டியிருப்பது சிலி மக்களை ஆத்திரமூட்டியுள்ளது.

 

 

அருட்தந்தை பெர்னாண்டோ காரடிமா என்பவர் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததை ஆயரான ஜுவான் பாரோஸ் மூடி மறைத்தார் என்பதற்கு குற்றஞ்சாட்டுவதற்கு "எந்தவித ஆதாரமும் இல்லை" என்று திருத்தந்தை தெரிவித்தார்.

 

ஆனால், கராடிமா சிறுவர்களிடம் பல ஆண்டுகளாக தவறாக நடந்துகொண்டது உண்மை என்று வாடிகன் கண்டுபிடித்துள்ளது.

 

திருத்தந்தையின் இந்த கருத்துக்கள் வேதனையும் வருத்தமும் தருவதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஹாமில்டன் கூறினார்.

 

சிலி நாட்டு கத்தோலிக்க திருச்சபையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ஆயா பாரோஸ் அவரது ஆன்மீக தந்தையாக அருட்தந்தை பெர்னாண்டோ காரடிமாவின் குற்றங்களை விசாரிக்கத் தடையாக இருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

விமானத்தில் திருமணம் செய்து வைத்து திருத்தந்தை சாதனை

ஜனவரி 19, 2018

சிலி நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்டபோது ஒரு திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். 

 

2010ம் ஆண்டில் சிவில் முறைப்படி திருமணம் செய்துள்ள விமான ஊழியர் ஜோடி ஒன்று அந்த விமானத்தில் பணிவிடை செய்தது.

 

அவர்களின் உள்ளூர் தேவாலயம் நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதால், கத்தோலிக்க மதத்தின்ப்படி அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. 

 

சிலி நாட்டில் சான்டியாகோவில் இருந்து வட பகுதியில் இருக்கும் இகீகே நகருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் விமானப் பயணம் மேற்கொண்டார்.

 

அப்போது விமானத்தில் வைத்து குறுகிய மத சடங்கை நிறைவேற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

 

இந்த விமான நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சாட்சியாக இருக்க, விமானத்தில் பயணம் மேற்கொண்ட மதகுருமார்கள் அதிகாரப்பூர்வ ஆவணத்தை எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.

 

விமானத்தில் பயணம் மேற்கொள்கையில் திருத்தந்தை  ஒருவர் நடத்தி வைத்த முதல் திருமணம் இதுவாகும்

கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வுக்கு மாற வேண்டும் - கர்தினால்

ஜனவரி 19, 2018

செயல்திறமிக்க மறைபரப்பாளர்களாக இருப்பதற்கு கத்தோலிக்க திருச்சபையும், பிற கிறிஸ்தவ திருச்சபைகளும் மனமாற்றம் பெற்று கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வை அதிகமாக்கி கொள்ள வேண்டும் என்று வத்திக்கானின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான தலைவர் கர்தினால் குர்ட் கோச் தெரிவித்திருக்கிறார்.

 

இதன் மூலம் மறைபரப்புப்பணி நம்பதகுந்த வகையில் நடைபெறும். கிறிஸ்தவ ஒன்றிப்பை தேடும் உணர்வை வளர்க்கின்ற சுய மறைபரப்பு பணி கத்தோலிக்க திருச்சபைக்குள் நடைபெற வேண்டியுள்ளது என்று வத்திக்கான் செய்தித்தாளுக்கு எழுதிய கட்டுரையில் ஸ்விஸ் கர்தினால் தெரிவித்துள்ளார்.

 

ஜனவரி 18 முதல் 25 வரை நடைபெறும் கிறித்தவ ஒன்றிப்பு வார செபக்காலத்தில், சேவை மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு இடையிலுள்ள தொடர்பை கர்தினாலின் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.

 

இரண்டாம் வத்திக்கான் திருசங்கத்திற்கு பிறகு கிறிஸ்தவ ஒன்றிப்பை ஏற்ற கத்தோலிக்க திருச்சபை அதனை மிகவும் சிரத்தையோடு வளர்த்து வருகிறது.

பொது பாவ மன்னிப்பு அளிக்க ஆயர் தூண்டிய ஏவுகணை எச்சரிக்கை

ஜனவரி 19, 2018

டீக்கன் பயிற்சி பெறும் 45 பேருக்கு ஹானோலுலு ஆயர் லாரி சில்வா பொது பாவ மன்னிப்பு அளித்துள்ளார்.

 

ஜனவரி 13ம் தேதி காலையில் ஹவாய் தீவையே மிகவும் பீதிக்குள்ளாக்கிய ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இந்த ஆயர் அரிய வகை பொது பாவ மன்னிப்பை வழங்கியுள்ளார்.

 

இந்த சடங்கை இந்த ஆயர் முதல்முறையாக நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

மிகவும் சிக்கலான வேளைகளில் மட்டுமே பலருக்கும் ஒரே நேரத்தில் பொது பாவ மன்னிப்பு வழங்குகின்ற இந்த சடங்கு நிறைவேற்றப்படும்.

சமீபத்திய கட்டுரை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter