பிறப்பின்போது பெற்றோரால் கைவிடப்பட்டவர் ஸ்விஸ் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனவரி 19, 2018

1970ம் ஆண்டு பிறந்த ஒரு வாரத்திற்குள் கர்நாடக மருத்துவமனையிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டார்தான் நிக்கோலஸ் சாமுவேல் கட்கர்.

 

அதிஷ்டம் அந்த குழந்தையின் பக்கம் இருக்கவே, ஸ்விஸ் தம்பதியர் ஒருவர் அந்த குழந்தையை தத்து எடுத்து கேரளாவில் கொஞ்ச காலம் வாழ்ந்த பின்னர், தங்களின் சொந்த நாடான ஸ்விட்சர்லாந்துக்கு அழைத்து சென்று விட்டனர்.

 

அங்கேயே வளர்ந்த அவர், தற்போது அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

ஸ்விட்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது இந்திய வம்சாவளியை சேந்த நபர் என்ற பெருமையை நிக்கோலஸ் சாமுவேல் கட்கர் பெற்றுள்ளார்.

 

தற்போது 48 வயதாகும் நிக்கோலஸ் சாமுவேல் கட்கரை ஸ்விட்சர்லாந்தின் ஃபிரிட்ஸ் மற்றும் எல்சபெத் தம்பதினர் தத்து எடுத்து அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

கேட்டலோனியா அரசை மீண்டும் கைப்பற்றிய சுதந்திரத்திற்கு ஆதரவானோர்

ஜனவரி 18, 2018

ஸ்பெயினிலுள்ள கேட்டலோனிய பிரதேச நாடாளுமன்றத்தின் அதிக இடங்களை சுதந்திரத்திற்கு ஆதராவானோர் கைப்பற்றியுள்ளனர்.

 

கடந்த நவம்பர் மாதம் தன்னிச்சையாக சுதந்திரத்தை அறிவித்ததால், பிரதேச அரசை ஸ்பெயின் கலைத்த பின்னர் தேர்தல் நடத்தியது.

 

இந்த தேர்தலுக்கு பின்னர் உருவாகியுள்ள நாடாளுமன்றத்திலும் சுதந்திரத்திற்கு ஆதரவானோர் பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளனர்.

 

இந்த நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இடதுசாரி குடியரசு கட்சியின் ரோஜர் டெரன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

 

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பிராந்திய தேர்தல்களில் தங்களது பெரும்பான்மையை பிரிவினைவாத கட்சிகள் தக்க வைத்துக் கொண்டன.

 

கேட்டலேனிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, பதவியில் இருந்து அகற்றப்பட்டவரும், தற்போது தானே நாடு கடந்து வாழ்பவருமான முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இதனால் உருவாகியுள்ளது.

ஒரே கொடி கீழ் அமைதி அறிகுறி காட்டும் வட மற்றும் தென் கொரியா

ஜனவரி 18, 2018

அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறுகின்ற பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணி ஒன்றை உருவாக்க இரு நாடுகளும் இசைந்துள்ளன.

 

வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு அமைதி ஏற்படுவதற்கான நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

 

ஒன்றுபட்ட கொரியாவுக்கு ஆதரவான ஐக்கிய கொரியாவின் ஆதரவு கொடியை ஏந்திக்கொண்டு, வட மற்றும் தென் கொரிய விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஓரணியாக இந்த விளையாட்டில் கலந்துகொள்ள பான்முன்ஜாம் என்ற இடத்தில் சந்தித்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

 உற்சாகமூட்டுவோர், இசைக்கலைஞர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வட கொரிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை, அந்நாட்டின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு துறைகளை தனியாரிடம் வழங்க சௌதி அரேபியா முயற்சி

ஜனவரி 18, 2018

பல பள்ளிகளை கட்டி முடிக்கவும்,  அவற்றை செவ்வனே நடத்துவதற்கும் ஒப்பந்தங்களை வழங்க வேண்டுமென்று தனியார் நிறுவனங்களை சௌதி அரேபிய அரசு கேட்டுகொண்டுள்ளது.

 

சௌதி அரேபியா தற்போது பெருமளவு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

 

அதிக வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்கி, விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற பொது வசதிகளை பெறுப்பேற்று நடத்துவதில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க சௌதி அரேபியா அனைத்து எற்பாடுகளை செய்து வருகிறது.

 

இவ்வாறு அரசின் அதிக செயல்பாடுகளை குறைத்துகொள்ள சௌதி அரசு முயன்று வருகிறது.

 

எண்ணெய் விலை வீழ்ச்சி சௌதி அரேபியாவின் நிதிநிலைமையை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கியிருக்கிறது.

 

இத்தகைய நிலைதான் பொருளாதார சீர்திருத்த திட்டத்தை மிகவும் அவசியமான ஒன்றாக்கியுள்ளது.

சமீபத்திய கட்டுரை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter