ஈராக் நாட்டில் பணிகளை மீண்டும் துவக்கும் இயேசு சபையினர்

மார்ச் 24, 2017

 ஈராக் நாட்டில் இயேசு சபையினர் தங்கள் பணிகளை மீண்டும் துவங்குவது, தங்கள் நாட்டுக்கு, குறிப்பாக, கிறிஸ்தவ சமுதாயத்திற்கு கிடைத்த ஓர் ஆசீர் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.

1969ம் ஆண்டு, ஈராக் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய ஓர் அரசியல் கட்சியால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இயேசு சபையினர், மீண்டும் அந்நாட்டில் தங்கள் பணிகளைத் துவக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியைக் குறித்து, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் மகிழ்வை வெளியிட்டார் என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வேளையில், இயேசு சபையினர் மேற்கொண்டிருந்த கல்விப்பணியை அவர்கள், மீண்டும் தொடர்வது, ஈராக் நாட்டிற்கு மிக அவசரமானத் தேவையாக உள்ளது என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் கூறினார்.

இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு, 2014ம் ஆண்டு முதல், ஈராக் நாட்டின் எர்பில் நகரிலும், குர்திஸ்தான் பகுதியிலும் பணிகளைத் துவங்கியிருந்தது என்பதை, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இயேசு சபையினர் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வேளையில் அவர்களிடம் இருந்த அனைத்துச் சொத்துக்களும், கல்தேய திருஅவையின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டதென்றும், அவற்றை மீண்டும் இயேசு சபையினரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

1932ம் ஆண்டு முதல், ஈராக் நாட்டில், கல்விப்பணியாற்றிய இயேசு சபையினர், 1956ம் ஆண்டு நிறுவிய ஹிக்மா (Hikma) பல்கலைக் கழகத்தின் வழியே, பெண்களுக்கும் கல்வி புகட்டத் துவங்கினர் என்பதும், இயேசு சபையினர் ஈராக் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டபோது, அவர்களிடம் பயின்ற மாணவர்களில், 70 விழுக்காட்டினர், இஸ்லாமியர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

இயேசுவின் புனிதக் கல்லறை, திருஅவை வாழ்வின் கருவறை

மார்ச் 24, 2017

இயேசுவின் புனிதக் கல்லறை, திருஅவையின் வாழ்வை வழங்கிய கருவறையாக அமைந்ததோடு, அனைத்துலக மக்களுக்கும் ஒளிவழங்கும் ஊற்றாக அமைந்துள்ளது என்று கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்திரி அவர்கள், வாழ்த்துச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

எருசலேமின் புனிதக் கல்லறை பசிலிக்காவில் அமைந்துள்ள இயேசுவின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு, மார்ச் 22, இப்புதனன்று, அங்கு நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு அர்ச்சிப்பு வழிபாட்டிற்கு, கர்தினால் சாந்திரி அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார்.

பல்வேறு கிறிஸ்தவ சபைகளும், திருஅவையும் இணைந்து, இந்த புனித கருவூலத்தைக் காத்து வருவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, தானும் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவிப்பதாக கர்தினால் சாந்திரி அவர்களின் செய்தி கூறியது.

கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைமையில், ஆர்மீனிய சபை, மற்றும் கத்தோலிக்கத் திருஅவை அனைத்தும் இணைந்து, 2016ம் ஆண்டு மார்ச் 22ம் தேதியன்று துவங்கிய புதுப்பித்தல் பணி, மிகச் சரியாக தன் முதலாண்டு நிறைவு நாளன்று முடிக்கப்பட்டுள்ளது கண்டு தான் மகிழ்வதாக கர்தினால் சாந்திரி அவர்கள் கூறியுள்ளார்.

நம்மிடையே விளங்கும் நம்பிக்கைக்கு மட்டுமல்லாமல், நமது உடன்பிறந்த உணர்வு, உரையாடல் ஆகிய பண்புகளுக்கும் இந்தப் புனிதக் கல்லறை சான்றாக விளங்குகிறது என்று கர்தினால் சாந்திரி அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

திருத்தந்தையைச் சந்தித்த காமரூன் நாட்டு அரசுத்தலைவர்

மார்ச் 24, 2017

ஆப்ரிக்காவின் காமரூன் நாட்டு அரசுத்தலைவர் பால் பியா (Paul Biya) அவர்களும், அவரது துணைவியார், மற்றும் ஏனைய அரசு அதிகாரிகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மார்ச் 23, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தனர்.

ஏறத்தாழ 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், காமரூன் நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், காமரூன் நாட்டின் கல்வி, மற்றும், நலவாழ்வு ஆகிய துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை காட்டிவரும் ஆர்வம், மற்றும், ஈடுபாடு ஆகியவை குறித்தும் பேசப்பட்டதென, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் கூறியது.

அரசுத்தலைவர் பால் பியா அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் தலைவர், பேராயர் பால் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

மேலும், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் ஒவ்வொருவருடனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில், 30 நிமிட சந்திப்புக்களை மேற்கொண்டார்.

திருவழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் இராபர்ட் சாரா, திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர், கர்தினால் ஜியான்பிரங்கோ இரவாசி, புனிதர் பட்டங்கள் வழங்கும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ, மற்றும் பலசமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் ஜான்-லூயிஸ் தூரான் ஆகியோர் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

இலண்டன் வன்முறைத் தாக்குதல்கள் – திருத்தந்தையின் செய்தி

மார்ச் 24, 2017

 மத்திய இலண்டன் பகுதியில் நடைபெற்றுள்ள வன்முறைத் தாக்குதல்களால் உயிரிழந்தோர், மற்றும் காயமுற்றோர் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழ்ந்த வருத்தத்தை ஒரு தந்தியின் வழியே தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் அனுதாபங்களைத் தெரிவிக்கும் இத்தந்தியை, வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

இறந்தோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காவும், காயமற்றோர் குணமடைவதற்கும் திருத்தந்தை தன் செபங்களை அளிப்பதாக இத்தந்தியில் கூறப்பட்டுள்ளது.

இலண்டன் பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், இப்புதனன்று பிற்பகல் நடைபெற்ற வன்முறை தாக்குதல்களில், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட, 4 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 29 பேர் காயமுற்றுள்ளனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

தீவிரவாத தாக்குதல்கள் என்று சந்தேகிக்கப்படும் இத்தாக்குதல்கள் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

பாத்திமா அன்னை காட்சி கண்ட இருவர் புனிதர்களாக அறிவிப்பு

மார்ச் 24, 2017

பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சியளித்ததைக் கண்ணுற்ற மூவரில், அருளாளர்களான, பிரான்செஸ்கோ மார்த்தோ, மற்றும் அவரது தங்கை, ஜெசிந்தா மார்த்தோ ஆகிய இருவரின் பரிந்துரைகளால் நிகழ்ந்துள்ள புதுமைகளை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விருவரையும் புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சியளித்ததன் 100ம் ஆண்டைச் சிறப்பிக்க, மேமாதம் 12, 13 தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அத்திருத்தலத்திற்குச் செல்லவிருக்கும் வேளையில், இவ்விருவரையும் புனிதர்கள் என அறிவித்திருப்பது, குறிப்பிடத்தக்கது.

புனிதர் பட்டங்கள் வழங்கும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள், இவ்வியாழன் காலை திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்த வேளையில், திருத்தந்தையின் ஒப்புதலைப் பெறுவதற்கென, பல்வேறு அருளாளர்கள் மற்றும் இறையடியாரைக் குறித்து திரட்டப்பட்ட தகவல்கள் அடங்கிய ஒன்பது ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

கப்பூச்சியன் துறவு சபையைச் சேர்ந்த அருளாளர், ஆஞ்செலோ அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமையையும், பிரேசில் நாட்டில் 1645ம் ஆண்டிலும் (30 பேர்), மெக்சிகோவில் 1529ம் ஆண்டிலும் (3 பேர்) மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டவர்களின் வீரத்துவ பண்புகளையும் ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, இவர்கள் அனைவரையும் புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கினார்.

புனிதர்களாக உயர்த்தப்படுவதற்கு திருத்தந்தையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 30 பேரில், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர் மற்றும், மூன்று வளர் இளம் பருவத்தினர் அடங்குவர்.

மேலும், 1936ம் ஆண்டு, இஸ்பானிய உளநாட்டுப் போரில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட 32 இறையடியார் உட்பட, மேலும் நான்கு இறையடியார்களை அருளாளர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கு, திருத்தந்தை இவ்வியாழனன்று ஒப்புதல் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

சமீபத்திய கட்டுரை
இலங்கை அரசு இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க திட்டம்! :ஐ.நாவில் குமுறல்
புதிய அமெரிக்க சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு : ட்ரம்ப் அதிரடி
வடகொரியா தயாரிக்கும் பேரழிவை தரும் வெடிகுண்டு : அதிர்ச்சியில் உலக நாடுகள்
இலங்கை போர்க்குற்ற தீர்மானம் : இந்தியாவின் முடிவு
கச்சத்தீவு வழக்கு: முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
அருங்கொடைப் பாடல்கள்03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
புனித சிலுவை பாதை06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
சிலுவை பாதையில் நாம்09:00 - 10:00
மெல்லிசை பாடல்கள் 10:00 - 11:00
உலக மீட்பர் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
உலகின் பேரொளி13:00 - 14:00
அருங்கொடைப் பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
இரக்கத்தின் ஆண்டவர்- சிலுவை பாதை16:00 - 17:00
மெல்லிசை பாடல்கள் 17:00 - 18:00
புனித சிலுவை பாதை18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
சிலுவை பாதையில் நாம்21:00 - 22:00
பொது பக்திப் பாடல்கள் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter