கச்சத்தீவு வழக்கு: முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு

மார்ச் 24, 2017

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார்.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், கச்சத்தீவு தமிழகத்தின் ஒருப்பகுதி எனவும், அதனை மீட்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 1998-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது பல்வேறு கட்டங்களை கடந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மனு தொடர்ந்த ஜெயலலிதா காலமாகிவிட்டதால் இனிமேல் இந்த வழக்கை விசாரிக்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு முடிவு பெற்று விட்டதாக கூறி நீதிபதி செல்லமேஸ்வர் வழக்கினை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் உயிரிழந்த தமிழக மீனவர்கள்: தமிழக முதல்வர் நடவடிக்கை

மார்ச் 23, 2017

சவுதி அரேபியாவில் உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்களை சொந்த நாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சவுதி அரேபியா கடலில் கன்னியாகுரி மாவட்டத்தின் கடலோர கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இறந்துபோன பரிதாபமான சம்பவம் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ஜீசஸ் என்பவருடைய மகன் ஜார்ஜ், பயஸ் என்பவருடைய மகன் நெவில், வஸ்தியன் என்பவருடைய மகன் ஜோசப் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர்.

இவர்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து, 17-ந் தேதியன்று அங்குள்ள தரின் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்றனர். சவுதி அரேபியாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

18-ந் தேதியன்று அவர்கள் இருந்த படகு விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் காணாமல் போன ஜார்ஜ் மற்றும் ஜோசப் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் 3 பேரும் பணியாற்றி வந்தனர். அவர்களின் மறைவு அவர்களின் குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. நெவிலை தேடுவதற்கும், இறந்துபோனவர்களின் உடலின் மீதி பாகத்தை இங்கு கொண்டு வருவதற்கும், அவர்களின் முதலாளியிடம் இருந்து இழப்பீட்டு நிதியைப் பெறவும் அரசாங்க ரீதியான உதவி தேவைப்படுகிறது.

எனவே சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் பேசி விரைவான நடவடிக்கை எடுக்க நீங்கள் உத்தரவிட வேண்டும். எந்த காலதாமதமும் இல்லாமல் அந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் பண உதவி கிடைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிட வேண்டும்.  இதற்காக மத்திய வெளியுறவுத் துறையை முடுக்கிவிட வேண்டும் என்று எழுதியுள்ளார்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கம் - இந்திய தேர்தல் ஆணையம்

மார்ச் 23, 2017

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது. முடக்கி வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்ததை அடுத்து அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற இரு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது. இருதரப்பினரும் தங்களின் வாதங்களை முன் வைத்தனர்.

மாலை 5 மணியுடன் வாதங்கள் முடிந்த நிலையில் முடிவுகள் மாலையே வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது. முடக்கி வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கட்சி பெயரை பயன்படுத்தவும் தடை எம்.ஜிஆர். மறைவுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக என்ற பெயரை இருதரப்பும் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இரு தரப்பும் புதிய கட்சியின் பெயரை வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலைச் சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

20 பக்க ஆவணங்களை படித்து உடனடியாக தீர்ப்பு வழங்குவது கடினம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வரும் எப்ரல் 17ம் தேதி வரை தேர்தல் ஆணையம் இருதரப்புக்கும் கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அ தி மு க வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு ? தேர்தல் ஆணையம்

மார்ச் 22, 2017

முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் தொடங்கிய  அதிமுகவின் வெற்றி சின்னமாக விளங்கிய இரட்டை இலை சின்னமானது தற்போது  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இரண்டாக பிளவு பட்டிருக்கும்  சசிகலா அணிக்கா அல்லது ஓ.பி.எஸ் அணிக்கா யாருக்கு போகும் என கேள்வி எழுந்துள்ளது.

 

இது தொடர்பாக கடந்த வாரம் ஓ.பி.எஸ் தலைமையானது  தேர்தல் ஆணையரை சந்தித்த னர். பின்னர் இது தொடர்பாக விளக்கமளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

 

இதையடுத்து. சசிகலா தரப்பு நேற்று, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது. எனவே, எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என விளக்கமளித்திருந்தது.

 

இந்நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணியை இன்று தேர்தல் ஆணையம் நேரில் விசாரிக்கவுள்ளது.  இரு அணிகளும் உரிமை கோரும் அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம்  யாருக்கு போகும் என்பதை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

 

ஏப்ரலில் தமிழ் நாட்டில் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வினியோகம்

மார்ச் 21, 2017

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்படும்..

 

அரசு மாலியத்துடன் வழங்கும் தானியங்களில் செய்யப்படும் முறைகேடுகளை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

 

ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இந்த ஸ்மார்ட் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஸ்மார்ட் ரேஷன் அட்டையை தேய்த்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும்.

 

வாங்கப்படம் பொருட்கள் என்னவென்று குறுந்தகவலாக பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு வந்துவிடும்.

 

ரேஷன் கடையில் உள்ள இருப்பு குறித்தும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய கட்டுரை
இலங்கை அரசு இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க திட்டம்! :ஐ.நாவில் குமுறல்
புதிய அமெரிக்க சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு : ட்ரம்ப் அதிரடி
வடகொரியா தயாரிக்கும் பேரழிவை தரும் வெடிகுண்டு : அதிர்ச்சியில் உலக நாடுகள்
இலங்கை போர்க்குற்ற தீர்மானம் : இந்தியாவின் முடிவு
கச்சத்தீவு வழக்கு: முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
அருங்கொடைப் பாடல்கள்03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
புனித சிலுவை பாதை06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
சிலுவை பாதையில் நாம்09:00 - 10:00
மெல்லிசை பாடல்கள் 10:00 - 11:00
உலக மீட்பர் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
உலகின் பேரொளி13:00 - 14:00
அருங்கொடைப் பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
இரக்கத்தின் ஆண்டவர்- சிலுவை பாதை16:00 - 17:00
மெல்லிசை பாடல்கள் 17:00 - 18:00
புனித சிலுவை பாதை18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
சிலுவை பாதையில் நாம்21:00 - 22:00
பொது பக்திப் பாடல்கள் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter