புதிய அமெரிக்க சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு : ட்ரம்ப் அதிரடி

மார்ச் 24, 2017

அமரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் வெற்றி பெறத் தேவையான எண்ணிக்கை இருப்பதால் தான் வெற்றி அடைய முடியும் என நேற்று வியாழக்கிழமை வலியுறுத்திய ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இந்த ஒத்திவைப்பு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்ட சுகாதார சட்டத்தின் சில பகுதிகளுக்கு பதிலாக வேறு சில அம்சங்களை செயல்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க சுகாதார மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

ஒபாமா கேயார் என்றழைக்கப்பட்ட சுகாதார மசோதாவினை திரும்பப் பெறுவதும், அதில் மாற்றம் கொண்டு வருவதும் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மையாக உள்ள குடியரசுக் கட்சியின் தலைவரான கெவின் மெக்கார்த்தி இது குறித்து கூறுகையில், அவை வாக்கெடுப்பு நடத்த வெள்ளிக்கிழமை தான் திட்டமிடப்பட்டிருந்தாலும், குடியரசுக் கட்சியினர் வியாழக்கிழமை மாலை சந்திப்பர் என்று தெரிவித்திருந்தார். அதன்படி அதிபர் ட்ரம்ப் சார்பில் வெள்ளை மாளிகை நிர்வாகிகளும், பால் ரயனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை. வெள்ளிக் கிழமை அனைத்து குடியரசுக் கட்சியினரும் மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

வடகொரியா தயாரிக்கும் பேரழிவை தரும் வெடிகுண்டு : அதிர்ச்சியில் உலக நாடுகள்

மார்ச் 24, 2017

கிம் ஜாங் ஆளும் வட கொரியாவில் இந்த மாத இறுதிக்குள் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கர வெடிகுண்டுகள் தயாராகி விடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியாவை ஆளும் சர்வாதிகாரி கிம் ஜாங் கடந்த வருடம் மட்டும் நான்கு ஏவுகணைகளை உருவாக்கி அதை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் அணுவாயுத சோதனையை அவர் எந்த நேரத்திலும் தொடங்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை அமெரிக்காவும், தென் கொரியாவும் உற்று நோக்கி வருவது முக்கிய விடயமாகும்.

அணுவாயுதத்தை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஒரு நகரையே அழிக்ககூடிய ஹைட்ரஜன் வெடிகுண்டு கிம் ஜாங் உத்தரவின் பேரில் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மாத இறுதிக்குள் அது பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது. இந்த விடயம் உலக நாடுகளிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து பாராளுமன்ற தாக்குதல் : இஸ்லாமிய இயக்கங்களுக்குத் தொடர்பு?

மார்ச் 23, 2017

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் பாராளுமன்றம் அவைகளுக்கு வெளியே நேற்று நடந்த தாக்குதல்களுடன் இஸ்லாமியப் பெயரில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று லண்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
கார் ஒன்று வேகமாகச் செலுத்தப்பட்டு அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதச் செய்யப்பட்டதாகவும் அதற்கு முன் அந்த கார் நான்கு அல்லது ஐந்து பாதசாரிகள் மீதுஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பாராளுமன்ற வளாகத்திற்குள் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர் மீதுபொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து காயமடைந்தவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டவுடன் பாராளுமன்றத்திற்குள் இருந்த பிரித்தானிய பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

தாக்குதலைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அவசரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் அதியுயர் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம் பிதமர் தலைமையில் நேற்று (22) இரவு நடைபெற்றது.

வெள்ளை மாளிகை கண்டனம் ;

இதேவேளை இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு அருகில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்கு பிரித்தானியாவிற்கு முழு முயற்சிகளை வழங்குவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதிகளால்ந பிரான்சில் நடத்தப்பட்ட தாக்குதலின் ஒரு வருட நிறைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனி நாட்டில் சீக்கிய கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல்

மார்ச் 22, 2017

ஜேர்மனியில் சீக்கிய கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மூன்று வாலிபர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மனியில் தற்போது சுமார் 13 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர்.

மேற்கு Essen நகரில் உள்ள சீக்கிய கோயிலில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமண நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

அப்போது, கோயிலின் முகப்பு பகுதியில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன, இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோயிலில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக பொலிசார் விசாரணை தொடங்கியபோது 17 வயது நிரம்பிய 3 வாலிபர்களை பொலிசார் கைது செய்தனர்.

மேலும், மூவரிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மூவரின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, மூவரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

பின்னர், மூவரில் ஒருவருக்கு 7 ஆண்டுகளும், மற்ற இருவருக்கு 6 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வட கொரியா அரசு செலுத்திய ஏவுகணை சோதனை தோல்வி

மார்ச் 22, 2017

சர்வதேச வல்லரசு நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை அடிக்கடி நிகழ்த்தி வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 4 ஏவுகணை சோதனைகளை வட கொரியா அரசு நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று வட கொரியா அரசு செலுத்திய ஏவுகணை ஒன்று புறப்பட்ட சில வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இத்தகவல்களை அமெரிக்க ராணுவமும் உறுதிப்படுதியுள்ளது.

எனினும், வட கொரியா எத்தனை ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது என்ற உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளின் ராணுவ பயிற்சி முகாம் தென் கொரியா எல்லையில் நடைபெற்று வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு வட கொரியா அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

இரு நாடுகளின் நடவடிக்கையை கண்டிக்கும் விதத்தில் இந்த ஏவுகணை சோதனை நடத்தியதாக வட கொரியாவில் இருந்து ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு வட கொரியாவில் உள்ள Wonsan என்ற கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய கட்டுரை
இலங்கை அரசு இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க திட்டம்! :ஐ.நாவில் குமுறல்
புதிய அமெரிக்க சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு : ட்ரம்ப் அதிரடி
வடகொரியா தயாரிக்கும் பேரழிவை தரும் வெடிகுண்டு : அதிர்ச்சியில் உலக நாடுகள்
இலங்கை போர்க்குற்ற தீர்மானம் : இந்தியாவின் முடிவு
கச்சத்தீவு வழக்கு: முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
அருங்கொடைப் பாடல்கள்03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
புனித சிலுவை பாதை06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
சிலுவை பாதையில் நாம்09:00 - 10:00
மெல்லிசை பாடல்கள் 10:00 - 11:00
உலக மீட்பர் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
உலகின் பேரொளி13:00 - 14:00
அருங்கொடைப் பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
இரக்கத்தின் ஆண்டவர்- சிலுவை பாதை16:00 - 17:00
மெல்லிசை பாடல்கள் 17:00 - 18:00
புனித சிலுவை பாதை18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
சிலுவை பாதையில் நாம்21:00 - 22:00
பொது பக்திப் பாடல்கள் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter