இலங்கை தலைமையைமைச்சர் 4 நாள் பயணமாக இந்தியா வருகை

ஏப்ரல் 26, 2017

இலங்கை தலைமையமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே 4 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார்.

.

டெல்லி வந்த அவர் இன்று இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

 

முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள், மீனவர் பிரச்சனை ஆகியவை முக்கியமாக  விவாதிக்கப்படுகின்றன.

 

தொடர்ந்து, ராஜஸ்தான் உள்ளிட்ட சில இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் ரணில் பங்கேற்க உள்ளார்.

 

இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி மே மாதம் 12 ஆம் தேதி இலங்கையில் பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

குப்பைமேடு சரிந்து விழுந்து தீ பரவியதில் 16 பேர் பலி

ஏப்ரல் 16, 2017

இலங்கையில் குப்பைமேடு ஒன்றில் ஏற்பட்ட தீயானது, அந்த குப்பை மேடு சரிந்து விழுந்து வீடுகளுக்கு பரவியதில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

 

இலங்கை தலைநகர் கொழும்புவின் வடக்கு பகுதியிலுள்ள குப்பைமேடு ஒன்றில் வெள்ளிக்கிழமை தீ எரிய தொடங்கியுள்ளது.

 

இதில் குப்பைமேடு சரிந்து விழுந்ததில், அருகிலுள்ள வீடுகளில் தீ பரவி. 100 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. .

 

குறைந்த்து 8க்கு மேலானோர் மருத்துசமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதனால் ஏற்பட்ட சேதங்கள் இன்றும் முழுமையாக தெரியவில்லை என்ற இலங்கை காவல்துறை தெரிவித்திருக்கிறது.

மீனவர் பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முனைப்பு

ஏப்ரல் 07, 2017

மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.

 

இதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய பிரதிநிதிகள் இன்று  இலங்கைக்கு வருகை செல்கின்றனர்.

 

அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை உட்பட அமைச்சு மட்ட பேச்சுவார்த்தைகளும் இன்ற முதல் ஆரம்பமாகவுள்ளது.

 

இதனால், மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

“சீ நோர்”  நிறுவனம் மீன்பிடித்துறைக்கு நவீன வசதி கொண்ட படகுச் சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

அங்கு மீன்பிடி படகினை மீன்பிடித்துறைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இவ்வாற தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் அதிநவீன தொடர்வண்டி ஓட்டும் பெண்

ஏப்ரல் 06, 2017

இலங்கையில் பெண்கள் ரயில் ஓட்டுநர்களாக செயற்படுவது பற்றி தகவல் இல்லை. ஆனால், தேவிகா திலானி என்பவர் இத்தாலியில் அதி நவீன மின்சார தொடர்வண்டியின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

 

இலங்கையின் பூகொடை தரால பிரதேசத்தில் பிறந்த தேவிகா திலானி, மூன்றாம் வகுப்பு வரை அந்த பகுதியிள்ள பாடசாலையில் கல்வி கற்றுள்ளார்.

 

பின்னர் இத்தாலிக்கு புலம்பெயர்ந்த அவரின் குடும்பம், இத்தாலியின் மெசினா, வெவியா கல்லூரியில் கல்வி கற்றார், பொலனோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுள்ளார்.

 

அவருடைய தொழிலாக தொடர்வண்டி ஒட்டு பணியை தெரிவு செய்துள்ளார். அதற்கமைய இத்தாலி ரயில் ஒன்றில் சேவை செய்யும் முதல் இலங்கை பெண்ணாக திலானி காணப்பட்டுள்ளார்.

 

அவருடைய ஆடையில் இலங்கை கொடி ஒன்றை எப்போதும் அணிந்திருப்பது முக்கிய விடயமாக காணப்படுகின்றது.

இலங்கை அரசமைப்பு சட்ட வழிகாட்டல் குழுவின் அறிக்கை தாக்கல்

ஏப்ரல் 03, 2017

இலங்கை அரசமைப்பு சாசன வழிகாட்டல் குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

 

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு பண்டாரநாயகா காலத்தில் 1972 மே 22 ஆம் தேதி அரசமைப்புச் சாசனம் நடைமுறைக்கு வந்த்து. அதற்கு மாற்றாக 1978 ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.

 

அரசமைப்பு சட்டத்துக்கு மாற்றாக புதிய அரசமைப்பு சாசனத்தை வரையறுக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

புதிய அரசமைப்பு சாசனம் தொடர்பாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் அண்மை யில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சயின் ஆதரவாளர்களை தவிர இதர கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சமீபத்திய கட்டுரை
மக்களை குருக்கள்மயமாக்க வேண்டாம் – திருத்தந்தை
திருப்பலியின்போது, நிழலுலக தேவாலயத்தில் கால்துறை ரோந்து
21 ஆம் நூற்றாண்டு மறைச்சாட்சிகளை கௌரவப்படுத்திய கத்தோலிக்க மற்றும் காப்டிக் திருத்தந்தையர்கள்
கடவுளின் பெயரால் நடைபெறும் வன்முறையை தடுக்கவும் - திருத்தந்தை கோரிக்கை
அமைதியின் செய்தியோடு எகிப்து சென்றடைந்த திருத்தந்தை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter