சுக்மா தாக்குதலில் படையினர் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற காம்பீர்

ஏப்ரல் 29, 2017

நக்ஸலைட்டுகள் தாக்குதலில் பலியான 26 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

 

சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட்டு தாக்குதலில் பலியான வீரர்களின் புகைப்படங்களைக் கண்டு பரிதாபமாக இருந்தது. இறந்த படைவீரர்களின் குழந்தைகளுக்கான செலவை ஏற்க முடிவு செய்துள்ளேன்” என்று காம்பீர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

 

சுக்மா மாவட்டம், சின்டகுபா அருகேயுள்ள கலாபதர் வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தபோது, அவர்களுக்கு, பாதுகாப்பு வழங்கும் வகையில், 99 சிஆர்பிஎப் படைவீரர்கள் முகாமிட்டிருந்தனர்.

 

அறந்தொரில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அபராதத்தை செலுத்தாவிட்டால் மீண்டும் சிறை – நீதிமன்றம் எச்சரிக்கை

ஏப்ரல் 28, 2017

ரூ.1500 கோடியை செலுத்தாவிட்டால் மீண்டும் சிறை தண்டனை தான் என்று சஹாரா அதிபர் சுப்ரதா ராய்க்கு, உச்சநீதிமன்றம் எச்சரிக்கை வழங்கியுள்ளது.

 

முதலீட்டாளர்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டியதாகக் 2014ம் ஆண்டு சஹாரா குழுமம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

 

அதில் கூறப்பட்ட முதலீட்டாளர்களின் விவரங்கள் போலியானவை என, பங்குச்சந்தைகள் கட்டுப்பாட்டு வாரியமான செபி கண்டுபிடித்தது.

 

இதையடுத்து, சஹாரா குழுமம் சர்ச்சையில் சிக்கியது.

 

சஹாரா அதிபர் சுப்ரதா ராய் நேரில் ஆஜராகாததால், 2014ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

 

சுமார் 2 ஆண்டுகள் சிறையில் வாடிய பின்னர், அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

 

அதில் அவர் ரூ.500 கோடி செலுத்தியுள்ளார்.

 

எஞ்சிய தொகையை ஜூன் 15 தேதிக்குள்ளாக, சுப்ரதா ராய் செலுத்தாவிட்டால். ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அக்னி 3 ரக ஏவுகணை சோதனை வெற்றி

ஏப்ரல் 28, 2017

அக்னி 3 ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

 

3000 கிலோமீட்டர் தொலைவு, சுமார் ஒன்றரை டன் எடையுள்ள அணு ஆயுதங்கள் உள்பட அனைத்து விதமான ஆயுதங்களை சுமந்து சென்று, இலக்கை தாக்கக்கூடிய சக்தி வாய்ந்ததுதான் அக்னி 3 ஏவுகணை.

 

இதனை அவ்வப்போது, விண்ணில் ஏவி, அதன் செயல்திறனை பரிசோதிப்பது  வழக்கம்.

 

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்த அக்னி 3 ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடியதாகும்.

 

ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவுகளில் இருந்து, இலக்கை நோக்கி ஏவப்பட்ட அக்னி 3 துல்லியமாக பாய்ந்து சென்ற இலக்கை தாக்கியது.

ஜம்மு காஷ்மீரில் 22 சமூக வலைதளங்களுக்கு தடை

ஏப்ரல் 27, 2017

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு காரணங்களை காட்டி ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட 22 சமூக வலைதளங்களை மாநில அரசு தடை செய்திருக்கிறது.

 

நாட்டில் நடைபெறும் பிரச்சனைகள் வேகமாக பகிரப்பட்டு பெரும் எழுச்சி ஏற்பட சமூக ஊடகங்கள் இன்று முக்கிய காரணமாகின்றன.

 

சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க, வதந்தியை பரப்ப ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால். ஜம்மு காஷ்மீரில் 22 வகை சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டுவிட்டர், விசாட், க்யூக்யூ, ஓசோன், கூகுள் பிளஸ், ஸ்கைப், லைன், பின்டிரஸ்ட், ஸ்னாப்சாட், யூ ட்யுப், வைன், ஃபிளிக்கர் உள்ளிட்டவை இந்த தடைக்கான பட்டியலில் அடங்குகின்றன. .

 

சமூக விரோத சக்திகள், இவற்றைப் பயன்படுத்தி வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா – வங்கதேச எல்லையில் 100மீ நீள குகை – தீவரவாதிகளின் வலுவிடமா?

ஏப்ரல் 27, 2017

இந்தியா – வங்கதேச எல்லையில் இந்திய படையினர் கண்டுபிடித்துள்ள  100 மீட்டர் நீள குகை எதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தீவிரமாக புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

பேட்பூர் என்ற இடத்தில் 100 மீட்டர் நீளமுள்ள குகையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

 

இது வழியாக சில சமூக விரோதிகள் கடத்தலில் ஈடுபட்டு வரலாம் என்று பாதுகாப்பு படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 

எனவே இது தொடர்பாக அதிகாரிகள் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த குகை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய கட்டுரை
மக்களை குருக்கள்மயமாக்க வேண்டாம் – திருத்தந்தை
திருப்பலியின்போது, நிழலுலக தேவாலயத்தில் கால்துறை ரோந்து
21 ஆம் நூற்றாண்டு மறைச்சாட்சிகளை கௌரவப்படுத்திய கத்தோலிக்க மற்றும் காப்டிக் திருத்தந்தையர்கள்
கடவுளின் பெயரால் நடைபெறும் வன்முறையை தடுக்கவும் - திருத்தந்தை கோரிக்கை
அமைதியின் செய்தியோடு எகிப்து சென்றடைந்த திருத்தந்தை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter