பட்டதாரி என்ஜினீயர்களுக்கு கடற்படையில் எக்சிகியூட்டிவ் அதிகாரி பணிகள்

இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படையில் சேருவது இளைஞர்களின் விருப்பப் பணிகளில் ஒன்றாக உள்ளது. கடற்படையும் தகுதியான இளைஞர்களை பல்வேறு சிறப்பு நுழைவின் அடிப்படையில் சேர்த்து பயிற்சி கொடுத்து பணி நியமனம் செய்து வருகிறது.

தற்போது ‘எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் மற்றும் டெக்னிக்கல் பிராஞ்ச் ஜன-2018’ பயிற்சியில் சேர, பட்டதாரி என்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இது ஷாட் சர்வீஸ் கமிஷனின் கீழ் வரும் அதிகாரி பணியிடங்களாகும்.

இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 19½ முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-1-1993 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் பி.இ., பி.டெக் போன்ற தொழில்நுட்ப பட்டப்படிப்பில் பணிக்கு தேவையான பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இவர்கள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு மூலம் இதற்கான தேர்வு முறைகள் நடத்தப்படும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரரின் தகுதிகள் சோதிக்கப்படும். நுண்ணறிவுத் தேர்வு, படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும்.

இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இது 14 ஆண்டுகள் பணிக் காலத்தைக் கொண்ட ‘ஷாட் சர்வீஸ் கமிஷன்’ பணியாகும். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் அதற்கு பின்னர் பணி நீடிப்பு பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-2-2017

மேலும் விரிவான விவரங்களை www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

-நன்றி : தினத்தந்தி

 

யூ.பி.எஸ்.சி. அறிவித்துள்ள புவியியல் வல்லுனர் 138 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யூ.பி. எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. பல்வேறு தரப்பட்ட அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் தெரிவு செய்யும் அமைப்பான இது, தற்போது புவியியல் வல்லுனர் மற்றும் புவி ஆராய்ச்சியாளர் பணிக்கான தேர்வை (2017) அறிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலம் மத்திய அரசுத் துறைகளில் உள்ள ஜியாலஜிஸ்ட், ஜியோ பிசிக்ஸ்ட், கெமிஸ்ட், ஜூனியர் ஹைட்ரோஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 138 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியாக ஜியாலஜிஸ்ட் பணிக்கு 40 இடங்களும், ஜியோபிசிக்ஸ்ட் பணிக்கு 40 இடங்களும், கெமிஸ்ட் பணிக்கு 25 இடங்களும், ஜூனியர் ஹைட்ரோஜியாலஜிஸ்ட் பணிக்கு 33 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-1-1985 மற்றும் 1-1-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். ஜூனியர் ஹைட்ரோஜியாலஜிஸ்ட் பணி விண்ணப்பதாரர்கள் மட்டும் 35 வயதுடைய வர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1-1-2017 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

ஜியாலஜிக்கல் சயின்ஸ், ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ஜியோ எக்ஸ்புளோரேசன், மினரல் எக்ஸ்புளோரேசன், ஜியோ என்ஜினீயரிங், மரைன் ஜியாலஜி, எர்த்து சயின்ஸ், ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், ஓசனோகிராபி, கோஸ்டல் ஏரியாஸ் ஸ்டடிஸ், பெட்ரோலியம் ஜியோ சயின்ஸ், ஜியோபிசிக்கல் டெக்னாலஜி, எம்.எஸ்சி. பிசிக்ஸ், அப்ளைடு பிசிக்ஸ் உள்ளிட்ட பணி சார்ந்த முதுநிலை அறிவியல் படிப்புகள் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

ஆளுமைத்திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 3-3-2017-ந் தேதியாகும். விண்ணப்பிக்கும்போது புகைப்படம் கையொப்பம் மற்றும் தேவையான சான்றுகளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க கடைசி நாள் : 3-3-2017

வங்கியில் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 2-3-2017

இணையதளத்தில் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 3-3-2017

போட்டித் தேர்வு நாள் : 12-5-2017 முதல்

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsconline.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும். 

- நன்றி : தினத்தந்தி

இந்திய கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு மாலுமி பணி

டிசம்பர் 05, 2016

இந்திய கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு
மாலுமி பணி

 

பிளஸ்-2 முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்கள் வருமாறு:- இந்திய கடற்படையில் தற்போது பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்களை பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.எஸ்.ஆர்.- 2/2017 பேட்ஜ் என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு மாலுமிபணியில் சேர ஒரு வாய்ப்பு வந்துள்ளது. திருமணம் ஆகாத இந்திய குடியுரிமை பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். சில மாத கால பயிற்சிக்குப் பின் இவர்கள் பணியில்  அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள்.

 

வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் 1-8-1996திலிருந்து 31-7-2000  திற்குள் பிறந்திருக்க வேண்டும்.

 

கல்வித் தகுதி: மேல்நிலைக் கல்வியை (10+2 முறையில்) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல் மற்றும் கணிதம் அடங்கிய பிரிவில் படித்திருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யும் முறை: உடல்உறுதி திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்து தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள்  22 வார கால பயிற்சிக்கு பின் பணியில்  அமர்த்தப்படுவர். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற வாய்ப்புள்ளது.

 

உடல் தகுதி: விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையுடனும், மார்பளவு 5 செ.மீ.(விரியும்போது)உடனும் இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி இவர்களின்  பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியோடு 6/6, 6/6  என்கிறளவில் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியில் சேர விரும்புவோர் மேற்க்கூறிய தகுதிகளைப் பெற்றிருந்தால் இணையதளம்வழியாக விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சில கணினிப் பிரதிகள் எடுத்துக்கொள்வது நல்லது. அப்பிரதியுடன்  தேவையான சான்றிதழ்நகல்கள் மற்றும் சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பிப்பவர்கள் Post Box No.488, Cole Dak Khana, GPO, New Delhi 110001 என்ற முகவரிக்கு தங்களின் நகல் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். இணையதள விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19-12-2016 தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் வந்தடைய வேண்டிய  கடைசி நாள்: 26-12-2016. மேலும் விவரங்களை அறிய  www.joinindiannavy.gov. என்கிற இணையதள முகவரியை பார்க்கவும்.

வங்கிகளில் அதிகாரி பணிக்கு 1103 இடங்கள் அறிவிப்பு

நவம்பர் 30, 2016

இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.). தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 103 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்யூசிசன் ரிலேசன்சிப் மேனேஜர், ரிலேசன்ஷிப் மேனேஜர், ஸோனல் ஹெட், கம்ப்ளையன்ஸ் ஆபீசர், இன்வெஸ்ட்மென்ட் கவுன்சலர்ஸ் போன்ற அதிகாரி பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு 55 இடங்களும், அக்யூசிசன் ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு 34 இடங்களும் உள்ளன. இதர அதிகாரி பணிகளுக்கு ஒருசில பணியிடங்கள் உள்ளன.

1-12-2016 தேதியில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதிகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தனிநபர் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு கடைசிநாள் 12-12-2016-ந் தேதியாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்துடன், தேவையான நகல்கள் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 16-12-2016-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.statebankofindia.comமற்றும் www.sbi.co.in ஆகிய இணையதள முகவரிகளை பார்க்கலாம்.

ஐ.டி.பி.ஐ. 1000 பணியிடங்கள்:

இந்திய தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. எனப்படுகிறது. தற்போது இந்த வங்கி கிளைகளில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1000 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-10-2016 தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றம் ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்படுகிறது.

ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 9-12-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 3-2-2017-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.idbi.com என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம். 

என்ஜினீயரிங் பட்டதாரிகள் கடற்படையில் ஆய்வுப் பணிகளுக்கு சேர்க்கை

நவம்பர் 30, 2016

என்ஜினீயரிங் பட்டதாரிகள் கடற்படையில் ஆய்வுப் பணிகளுக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விரிவான விவரம் : இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான கடற்படை பல்வேறு சிறப்பு நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்களை படைப்பிரிவில் சேர்த்து வருகிறது. தற்போது கோர்ஸ் காமென்சிங் ஜூன்-2017 பயிற்சியின் கீழ் ‘நேவல் அர்மாமென்ட் இன்ஸ்பெக்சன் கேடர் (என்.ஏ.ஐ.சி.)’ பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணிவாய்ப்பாகும். திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது : விண்ணப்பதாரர்கள் 19½ வயது முதல் 25 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1992 மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வி : மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், புரொடக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன், ஐ.டி., கெமிக்கல், மெட்டலர்ஜி போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

உடல் தகுதி : விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். பார்வைத்திறனும் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் பாதிப்பு இருக்கக்கூடாது.

தேர்வு முறை : சர்வீசஸ் செலக்சன் போர்டு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு முறைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 ஆகிய இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். நுண்ணறிவுத்திறன், படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடல், உளவியல் திறன், குழுத் தேர்வு, நேர்காணல், உடற்திறன், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகளுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் உதவி லெப்டினன்ட் தரத்திலான அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். கமாண்டர் பதவி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.

விண்ணப்பம் : விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 9-12-2016 வரை இணையதளத்தில் செயல்பாட்டில் இருக்கும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு நகலுடன் தேவையான சான்றுகள் சுயசான்றொப்பம் செய்து இணைத்து Post Box No.02, Sarojini Nagar PO, New Delhi 110023என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பயிற்சியின் பெயர், படிப்பு, மதிப்பெண் சதவீதம், என்.சி.சி. சான்றிதழ் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 19-12-2016-ந் தேதி.

விரிவான விவரங்களை பார்க்கவும் www.nausenabharti.nic.in என்ற இணையதளத்தை சொடுக்கவும். 

சமீபத்திய கட்டுரை
பட்டதாரி என்ஜினீயர்களுக்கு கடற்படையில் எக்சிகியூட்டிவ் அதிகாரி பணிகள்
யூ.பி.எஸ்.சி. அறிவித்துள்ள புவியியல் வல்லுனர் 138 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்திய கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு மாலுமி பணி
வங்கிகளில் அதிகாரி பணிக்கு 1103 இடங்கள் அறிவிப்பு
என்ஜினீயரிங் பட்டதாரிகள் கடற்படையில் ஆய்வுப் பணிகளுக்கு சேர்க்கை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter