வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்ஸ்

 

உலகளவில் வாட்ஸ் ஆப் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொன்டே தான் இருக்கிறது. இந்தியாவில் மட்டுமே 20 கோடி பேர் வாட்ஸ் ஆப் உபயோகிப்பதாக வாட்ஸ்ஆப் நிறுவனர்களில் ஒருவரான பிரையான் ஆக்டன் அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளார்.

 

நிமிடத்திற்கு ஒரு முறை வளர்ச்சி அடைத்துக்கொன்டே இருக்கும் தொழில்நுட்பத்தில், வாட்ஸ் ஆப் மட்டும் விதிவிக்கல்ல. அதன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பலவற்றை மேம்படுத்தியுள்ளனர் வாட்ஸ் ஆப் நிறுவனத்தினர். அதில் ஒரு அப்டேட்டாக  வாட்ஸ் அப்பில் நம் statusகளாக படங்கள், வீடியோ, GIFs போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம்.

 

நம் Statusகளை யாரெல்லாம் பார்த்துள்ளார்கள், எப்போது பார்த்துள்ளார்கள் எனவும் இந்த புதிய அப்டேட் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, நம் Statusகளை நமக்கு விருப்பமான அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்கும்படி வைத்துக்கொள்ள முடியும்.  

ஒளிவீசும் சாலை – மனிதரின் கரங்களால் இறைவன் செய்த புதுப்படைப்பு

அக்டோபர் 10, 2016

ஒளிவீசும் சாலை அமைக்கப்பட்டிருப்பது நம்முடைய காலத்தின் நவீனமயமாக்கத்தை காட்டினாலும், மனிதரின் கரங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட இறைவனின் புதுப்படைப்பாக அது காட்சி தருகிறது.

போலந்து நாட்டின் வட பகுதியிலுள்ள லிட்ஸ்பார்க் வார்மின்ஸ்கி நகரத்தில் இந்த புதுமையான சாலை அண்மையில் போடப்படுள்ளது.

இதனால், இந்த நகரம் உலக அளவில் தெரியவந்துள்ளது.

சைக்கிளில் செல்வோருக்கா அமைக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க பாதை இதுவாகும்.

இரவு நேரத்தில் இந்தச் சாலை ஒளியில் ஜொலிக்கிறது.

சூரிய ஆற்றலை சேமித்து அதனை மின்னாற்றலாக மாற்றி, இரவில் ஒளி வீசக்கூடிய சாலையாக போலந்து கட்டிட நிறுவனம் ஒன்று அறிவியல் வல்லுநர்களை வைத்து இதனை அமைத்திருக்கிறது.

செயற்கை இழைகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை, சூரியனில் இருந்து வெப்ப ஆற்றலை எடுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

பகல் முழுவதும் கிடைக்கின்ற சூரிய ஆற்றலை கிரகித்து வைத்துகொண்டு இரவில் 10 மணி நேரம் சாலையில் ஒளி வீசுகிறது

எனவே, இரவும் முழுவதும் சாலையானது, விளக்கு வெளிச்சத்தில் கண்கொள்ளா காட்சியாக ஜொலிக்கிறது.

சாலையில் கிடைக்கின்ற ஒளியால் சைக்கிளில் செல்பவர்கள், இரவு நேரத்திலும் எளிதாகச் பயணம் செய்ய முடிகிறது.

உங்கள் மொபைல் அடிக்கடி hang ஆகிறதா??

செப்டம்பர் 28, 2016

உங்கள் மொபைல் அடிக்கடி hang ஆகிறதா?? 

 

            எவ்வளவுதான் தேடி தேடி ஸ்மார்ட்போன் வாங்கினாலும், சில மாதங்கள் கழித்து hang ஆக தொடங்கிவிடும். அப்படி hang ஆவதை தடுக்க உங்கள் மொபைலின் storage ஐ சற்று சுத்தம் செய்தல் போதுமானது. 

 

 உங்கள்  ஸ்மார்ட்போன் hang  ஆகுவதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் ஆப் (apps ) தான். அவற்றில் உங்களுக்கு தேவையானவற்றை வைத்துக்கொண்டு மற்றவற்றை  டெலிட் செய்தாலே  போதுமானது,  உங்க மொபைல்  சுறுசுறுப்பாகிவிடும். உங்கள் மொபைலில் hang ஆவதற்க்கான முக்கிய ஆப்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 

அந்த வரிசையில் முதலில் இருப்பது, ஃபேஸ்புக். இதன் பயன்பட்டால் உங்கள் மொபைலின் வேகம் குறையும். ஆகையால் ஃபேஸ்புக்கை கணினி மூலம் பயன்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.

 

நாம் மொபைல் வாங்கும் போதே ஒரு சில பிரௌசர்கள் அதில் முன்னக்கூட்டியே சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த பிரௌசர்களும் உங்கள் போனின் வேகத்தைக் குறைக்க ஒரு காரணமே. அதை டெலிட் செய்துவிட்டு, ஒரு புதிய பிரௌசரை இன்ஸ்டால் செய்தால் போதும். 
 
நம் சூழலின் பருவநிலை மற்றும்  வெப்பநிலையை  அறிய உதவும் வெதர் ஆப்கள்  போனின் வேகத்தை குறைக்கும். அதே போல ஆன்டி வைரஸ் மற்றும் கிளீனிங்  ஆப்கள்  கூட மொபைல் hang ஆவதற்கு ஒரு காரணம் தான்.  அதனால் அதை  டெலிட் செய்துவிட்டு, தேவைப்படும்போது மட்டும் download செய்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

உங்கள் மொபைலில் நீங்கள் இதை அதிகம் பயன்படுத்தியிருக்கவே மாட்டீர்கள்

செப்டம்பர் 28, 2016

உங்கள் மொபைலில் நீங்கள் இதை அதிகம் பயன்படுத்தியிருக்கவே மாட்டீர்கள் அல்லவா? 

 

ஸ்மார்ட் போனில்  பல வருடமாக இருக்கும் ஸ்பீச் ரெககனைஷன் (speech recognition) ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்தியிருக்கீர்களா? அதில் உள்ள பல குறைகள் காரணமாக இந்த தொழில்நுட்பம், மக்களிடம் பெரிதாக  வரவேற்கப்பட பெறவில்லை. ஆனாலும், இந்த ஸ்பீச் ரெககனைஷன் தொழில்நுட்பத்தில் சாதிப்பதற்காக அதிகம் ஆர்வம் காட்டுகின்றன பிரபல டெக் நிறுவனங்கள். "சத்தமே இல்லாமல் இதன் வளர்ச்சி கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சியை போன்றே இதன் வேகமும் சற்று அதிகரித்துள்ளது" என கூறுகிறார் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் லேண்டே.

 

தற்போது, "Speech Recognition"  ஆப்ஷன் டைப் செய்வதை விட மூன்று மடங்கு வேகமாக செயல்படுகிறது. 19 முதல் 32 வயதினர்க்கிடையே  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்தும் qwerty keypad மூலம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள்  மேன்டரின் சைனீஷ்   மற்றும்  ஆங்கிலம் ஆகிய இருவேறு மொழிகளில் டெக்ஸ்ட் செய்தனர். இதற்காக சொற்தொடர்கள் நம் தினசரி அகராதியில் இருந்து 100 வார்த்தைகளை எடுத்து டைப் செய்யப்பட்டது, Speech Recognition சாஃப்ட்வேரில் பேசியும் பதிவு செய்யப்பட்டது. முடிவில் ஆங்கிலத்தில் டெக்ஸ்ட் செய்வதை விட மூன்று மடங்கு வேகமாக ஸ்பீச் ரெககனைஷன் சாஃப்ட்வேரானது செய்தியை அதிவேகமாக அனுப்புகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதன் மூலம் அனுப்பப்படும் செய்தியை நாம் மொபைலில் டைப் செய்வதை விட  20.4% குறைவான தவறையே ஏற்படுத்துகிறது. மேன்டரின் சைனீஸ் மொழியில் செய்திகள் டைப் செய்வதைக் காட்டிலும், 63.4% குறைவான தவறையே ஸ்பீச் ரெககனைஷன் ஏற்படுத்துகிறது. மேலும் இது டெக்ஸ்ட்  செய்வதை காட்டிலும் 2.8% அதிவேகமாக செயல்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார். 


அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஸ்பீச் ரெககனைஷன் ஆப்ஷன் இருந்தாலும், இதை நாம் பயன்படுத்தாமலேயே இருக்கக் காரணம், அதிலுள்ள தொழில்நுட்ப பிழைகள்தான். இந்தியாவில் இங்கிலாந்தில் இருக்கும் ஒருவரின் ஆங்கில உச்சரிப்பும், இங்கிலாந்தில்  இருக்கும் ஆங்கில உச்சரிப்பும் வேறாக இருந்தாலும் ஒரே மொபைலைத் தான் இருநாட்டவரும்  பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற எத்தனை  சிக்கல்கள் இருந்தாலும், டெக்ஸ்ட் சாட்டிங், மொபைல் கமாண்ட்ஸ் செய்வது போன்ற பல விஷயங்களுக்கு இது பயன்படுவதால், இந்த தொழில்நுட்பத்திற்கான ஈர்ப்பு இன்னும் குறையவே இல்லை. 
 

 

சமீபத்திய கட்டுரை
பனைவெல்லம் எப்படி எடுக்கிறார்கள் பாருங்கள்
வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்ஸ்
தெரிந்துக்கொள்வோம் - கோல்ப் பந்துகள்
(Microsoft ) மைகிரோசாப்டின் இந்த புதிய கணினி உங்களை வியக்கவைக்கும்
ஒளிவீசும் சாலை – மனிதரின் கரங்களால் இறைவன் செய்த புதுப்படைப்பு
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter