புனித ஸிட்டா (St. Zita of Lucca) 27-04-2017

ஏப்ரல் 26, 2017

புனித ஸிட்டா (St. Zita of Lucca) 27-04-2017

கன்னியர் (Virgin)

புனிதர் ஸிட்டா ஒரு இத்தாலிய நாட்டு ரோமன் கத்தோலிக்க புனிதரும் அருட்சகோதரியும் ஆவார்.

இத்தாலியின் லூக்கா (Lucca) நகரின் அருகேயுள்ள "மோன்சக்ரட்டி" (Monsagrati) என்னும் கிராமத்தில் 1212 ஆம் ஆண்டு பிறந்த இவர், தமது பன்னிரெண்டாம் வயதிலேயே வீட்டுப் பணிப்பெண்ணாக பணியமர்த்தப்பட்டார். நீண்ட காலமாக அவர் ஒரு பணிப்பெண்ணாக கொடுமைப்படுத்தப் பட்டார். கடினமான பணிகள் அவரிடம் சுமத்தப்பட்டன. நியாயமற்ற முறையில் அவர் துன்புறுத்தப்பட்டார். அவருடைய அன்பான மற்றும் வெளிப்படையான தன்மைக்காக அவர் அவரது முதலாளிகளாலும் சக பணியாளர்களாலும் தாக்கப்பட்டார். இடைவிடாது தவறாகப் பயன்படுத்தப்பட்டார். அவருடைய பணிவும் சாந்த குணமும் அன்பும் அவரைக் கொடுமைப் படுத்திய முதலாளிகளையும் சக பணியாளர்களையும் அவரை விட்டு விலக வைத்தன. அவரது விடாமுயற்சியும் பண்பும் அவரை அவர்களிடமிருந்து மீட்டன. அவரது நிலையான பக்தி படிப்படியாக ஒரு மத எழுச்சியை குடியேற்றியது.

சோம்பேறித்தனமான பக்தி பொய்மையானது என்று அவர் அடிக்கடி பிறருக்கு எடுத்துரைத்தார். அவருக்கு தரப்பட்ட பணி, கடவுளால் அவருக்கு தரப்பட்டது என்று கூறினார். பிறரை இகழ்வதை விட்டு, தமது பணிகளை தாமே செவ்வன செய்தார். உறங்கும் நேரத்தைக் குறைத்து, செபத்தில் ஈடுபட்டார்.

27 ஏப்ரல் 1272ல், அவர் உறக்கத்திலேய சமாதானமாக இறந்தார். அவர் படுத்து இருந்த இடத்தின்மேலே ஒரு விண்மீன் தோன்றியதாக சொல்லப்பட்டது.

அடக்கம் செய்யப்பட்ட அவரது உடல், 1580ல் தோண்டி வெளியில் எடுக்கப்பட்டது. அவரது உடல் கெட்டு விடாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் பின்னர் பதப்படுத்தப்பட்டதாக மாறிவிட்டது. புனித ஸிட்டாவின் உடல் தற்போது லுக்காவிலுள்ள 'சேன் ஃப்ரேடியானோ பேராலயத்தில்' (Basilica di San Frediano in Lucca) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. புனிதர் பட்டம் 1696 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. இவருடைய நினைவுத் திருநாள் ஏப்ரல் 27 ஆகும். 

புனிதர் மாற்கு (St. Mark) 25-04-2017

ஏப்ரல் 24, 2017

புனிதர் மாற்கு (St. Mark) 25-04-2017

நற்செய்தியாளர், மறைசாட்சி (Evangelist, Martyr)

நற்செய்தியாளரான புனித மாற்கு, பாரம்பரியப்படி மாற்கு நற்செய்தியின் ஆசிரியராகக் கருதப்படுபவர் ஆவார். மேலும் இவர் இயேசுவின் எழுபது சீடர்கலுள் ஒருவராகவும். கிறிஸ்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுல் ஒன்றான அலெக்சாந்திரியா திருச்சபையின் (Church of Alexandria) நிறுவனராகவும் கருதப்படுகின்றார்.

வரலாற்றாசிரியரான யுசிபசின் (Eusebiu)படி, மாற்கு அனனியாசு என்பவருக்குப் பின்பு, நீரோ மன்னனின் ஆட்சியின் எட்டாம் ஆண்டில் (62/63) அலெக்சாந்திரியாவின் ஆயரானார். பாரம்பரியப்படி கி.பி 68ல் இவர் மறைசாட்சியாக மரித்தார் என்பர்.

மாற்கு நற்செய்தி 14:51-52ல் கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கைதுசெய்யப்பட்ட பின்பு அவர் பின்னே சென்ற இளைஞர் இவர் என்பது மரபு; இயேசுவை கைது செய்தவர்கள் இவரைப் பிடித்தபோது, தம் வெறும் உடம்பின் மீது இருந்த நார்ப்பட்டுத் துணியைப் விட்டு விட்டு இவர் ஆடையின்றித் தப்பி ஓடினார்.

கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா ஏப்ரல் 25ல் கொண்டாடப்படுகின்றது. இவரை பொதுவாக இரண்டு இறக்கைகளை உடைய சிங்கத்தைக்கொண்டு கலைகளில் சித்தரிப்பர்.

திருத்தூதர் பணியில் நாம் சந்திக்கும் ஜான் மாற்கும், புனித பேதுரு தமது முதல் திருமுகம் 5:13 -ல் குறிப்பிடும் மாற்கும் ஒருவரே. 
புனித பவுல் (கொலோ 4:10, 2 தீமோத்தேயு 4:11, பிலோமோனுக்கு எழுதிய திருமுகம் 2:4) இவற்றில் குறிப்பிடும் மாற்கும் இவரே.

இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர். திருத்தூதரான புனித பவுலின் முதல் பயணத்தில் அவரோடு கூட சென்றவர். மூன்றாம் பயணத்தில் உரோமை வரை பின் தொடர்ந்தவர். பேதுருடைய சீடரும், அவருடைய மொழி பெயர்ப்பாளருமாக மாற்கு தமது நற்செய்தியில் காணப்படுகின்றனர்.

எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகர் திருச்சபையை நிறுவியவராகக் கருதப்படுகிறார். எருசலேம் திருச்சபையில் புனித பேதுருவுக்கு மிக உதவியாகவும், புதுக் கிறிஸ்தவர்கள் தமது வீட்டில் வந்து தங்கிப்போக உதவியாகவும், இருந்த மரியா என்பவர் மாற்கின் தாய். 
முதன் முறையாகப் பவுல் சைப்ரஸ் நாட்டிற்கு போகும் போது இவரை உடன் அழைத்துச் சென்றார். 
அவர்கள் பம்பிலியா நாட்டில் பெர்கா என்ற இடத்தில் தங்கியிருந்தபோது, மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என்று அச்சம் கொண்ட பவுல், சிலிசியா, சிறிய ஆசியாவிலிருந்த திருச்சபைகளை சந்திக்க சென்றபோது, பர்ணபாஸ் பரிந்துரைத்ததால், பவுல் மாற்கை அழைத்து செல்லவில்லை. இதனால் பர்ணபாவும் பவுலை விட்டுப் பிரிந்தார்.

ரோம் நகரில் பவுல் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது, மாற்கு பவுலுக்கு உதவி செய்தார். பவுல், தான் இறக்கும்முன்பு, ரோம் சிறையில் இருந்தார். அப்போது எபேசு நகரிலிருந்த திமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் மாற்கு தன்னோடு இருப்பார் என்று எழுதியுள்ளார்.

பின்னர் மாற்கு, புனித பேதுருவின் நண்பனானார். அலெக்சாண்டிரியா நகர் கிளமெண்ட், இரனேயுஸ், பாப்பியாஸ் ஆகியோர் மாற்கைப் பேதுருவின் விளக்கவுரையாளர் என்று காட்டுகிறார்கள்.

மாற்கு இயேசுவை சந்திக்காதவர் என்று பாப்பியஸ் கூறுகிறார். இன்று விரிவுரையாளர் பலர் மாற்கு நற்செய்தியில் நாம் சந்திக்கும் இளைஞன் ஆண்டவர் கைதியாக்கப்பட்ட நிலையில் அவரைப் தொடர்ந்தவர் இதே மாற்குதான் என்று ஏற்றுக் கொள்கின்றனர்.

பேதுரு தாம் எழுதிய முதல் திருமுகத்தில் (1 பேதுரு 5:13) "என் மைந்தன் மாற்கு" என்று குறிப்பிடுவதன் மூலம் மாற்கு பேதுருவுடைய மிக நெருக்கமான நண்பர் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மாற்கு, அலெக்சாண்டிரியா நகரின் முதல் ஆயர். இவர் ஆயராக இருக்கும்போது அலெக்சாண்டிரியா நகரில் இறந்தார். இவரது உடல் 830ம் ஆண்டில் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு வெனிஸ் நகரிலுள்ள மாற்கு பேராலயத்தில் வைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. மாற்கு வெனிஸ் நகரின் பாதுகாவலர் என்று போற்றப்படுகின்றார்.

இறக்கையுள்ள சிங்கம் மாற்குவின் சின்னமாக உள்ளது. "பாலைவனத்தில் ஒலிக்கும் குரலொலி" (மாற்கு 1:3) எனப் புனித திருமுழுக்கு யோவானை இவர் குறிப்பிடுகின்றார். எனவே ஓவியர்கள் இவ்வாறு வரைந்துள்ளனர்.

நற்செய்தியில் காணப்படும் "எப்பேத்தா" என்ற சொல் இவருக்கே உரியது. புதிதாக மனந்திரும்பிய ரோமப் புற இனத்தவர்க்கு இவரது நற்செய்தி எழுதப்பட்டது. மாற்கு நற்செய்தி கி.பி. 60 - 70 க்குள் எழுதப்பட்டிருக்கலாம். என்று வரலாறு கூறுகின்றது.

ஒரு நிகழ்வை கண்ணால் காண்பதுபோல் சித்தரிப்பதில் இவர் வல்லவராக இருந்தார். "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் என்ற நற்செய்தியை புறவினத்தார்க்கு அறிக்கையிடுவதே இவரது நற்செய்தியின் குறிக்கோள். கோப்த்து, பிசாந்தின் வழிபாட்டு முறையாளர் புனித மாற்குவின் திருவிழாவை ஏப்ரல் 25 ஆம் நாளன்று கொண்டாடுகின்றனர்.

 புனிதர் ஃபிடேலிஸ் (St. Fidelis of Sigmaringen) 24-04-2017

ஏப்ரல் 23, 2017

 புனிதர் ஃபிடேலிஸ் (St. Fidelis of Sigmaringen) 24-04-2017

மறைப்பணியாளர், குரு, மறைசாட்சி (Religious, Priest and Martyr)

புனிதர் ஃபிடேலிஸ், கப்புச்சின் (Capuchin friar) சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளரும், கல்வியில் சிறந்த பேரறிஞரும், மறைசாட்சியும் ஆவார். இப்புனிதர் தற்போதைய ஸ்விட்சர்லாந்து நாட்டின் "சீவிஸ் இம் ப்ரட்டிகவ்" (Seewis im Prättigau) எனுமிடத்தில் தமது எதிர்ப்பாளர்களால் கொலை செய்யப்பட்டார்.

"மார்க் ராய்" (Mark Roy) என்ற இயற்பெயர் கொண்ட ஃபிடேலிஸ், தற்போதைய ஜெர்மனி நாட்டின் சிக்மரிங்கன் என்ற நகரில் அக்டோபர் 1577ல் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் "ஜான் ரே" (John Rey) ஆகும். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஃபிடேலிஸ், "பிரைபெர்க்" (University of Freiburg) பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் தத்துவம் ஆகியன கற்றார். தாம் பயின்ற பல்கலையிலேயே தத்துவம் கற்பித்த இவர், சட்ட கல்வியில் முனைவர் பட்டம் வென்றார். தமது மூன்று ஆசிரியர் நண்பர்களுடன் இணைந்து இத்தாலி, ஃபிரான்ஸ், ஸ்பெயின், போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு புதிய மொழிகளை கற்று ஆழ்ந்த அறிவை பெற்றார்.

ஏழைகளின் வழக்கறிஞர் :
மார்க் ராய், தனது வழக்கறிஞர் பணியை 'என்சிசீம்' நகரில் "ஏழைகளுக்கு நீதி" என்ற இலட்சியத்துடன் தொடங்கினார். செல்வந்தர்களால் ஏமாற்றப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட ஏழை மக்களின் வழக்குகளை எடுத்து நடத்தி நீதியை நிலைநாட்டினார். எவ்வித இலாபத்தையும் எதிர்பாராமல் இலட்சியம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தியதால் சக வழக்கறிஞர்களின் இன்னல்களுக்கு உள்ளாகி மனமுடைந்தார்.

கப்புச்சின் துறவி :
பணம், பொருள், பதவி என்ற உலகத்தின் போக்கும், நீதிமன்றங்களில் நீதிக்கு தண்டனை கிடைப்பதையும், ஏழைகள் அநியாயமாக நசுக்கப்படுவதையும் கண்டு மனம் நொந்து, தனக்கு உகந்த பணி இதுவன்று என உதறித் தள்ளி, செபத்திலும், தபத்திலும், தனது பாதையை செலுத்தினார். ஏழைகளுக்கு பணி செய்ய கப்புச்சின் சபையை நாடினார், ஆனால், இவரது செல்வ செழிப்புடைய குடும்பப் பின்னணி, மிகப்பெரிய படிப்பு ஆகியவை தடையாக இருந்தாலும் தொடர்ந்து போராடி கப்புச்சின் சபையில் 4 அக்டோபர் 1612ல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

மறைபரப்பு பேராயத்தின் முதல் மறைச்சாட்சி :
பிரிவினை சபையினருக்கு சுவிஸ், பிரிகாளியா, பிரட்டிக்காவு, மேயன்பெல்ட் மற்றும் சுவபேயா பகுதிகளில் நற்செய்தியை முழங்கி பலரை மீண்டும் கத்தோலிக்க விசுவாசத்திற்கு மனம் திருப்பினார். இதனால் பிரிவினை சபையினரின் கடும் கோபத்துக்கு உள்ளானார்.

1622 ஏப்ரல் 24ல் சீவிஸ் என்ற ஊரில் உள்ள ஆலயத்தில் சில ஆஸ்திரிய அரசு சிப்பாய்களின் பாதுகாவலுடன் மறையுரையாற்றுகையில் கால்வினிஸ்ட் கிளர்ச்சியாளர்களால் (Calvinist agitators) தாக்குதலுக்கு ஆளானார். அவரை நோக்கி வெடித்த துப்பாக்கி குண்டிலிருந்து அதிசயமாக தப்பினார். உடனே அவர் அங்கிருந்த ஆஸ்திரிய சிப்பாய்களாலும் சில கத்தோலிக்க மக்களாலும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். எதிர் சபை நண்பர் ஒருவர் அவருக்கு தங்க இடம் தர முன்வந்தார். ஆனால், தமது வாழ்க்கை கடவுள் கைகளில் உள்ளது என்று கூறி மறுத்த ஃபிடேலிஸ், தமது இருப்பிடத்துக்கு திரும்பும் வழியில், ஆயுதம் தாங்கிய சுமார் இருபது கால்வினிஸ்ட் கிளர்ச்சியாளர்களால் (Calvinist agitators) வழி மரிக்கப்பட்டார். அவர்கள் அவரை கத்தோலிக்க விசுவாசத்தை கைவிட வற்புறுத்தினர். ஆனால், ஃபிடேலிஸ் தமது விசுவாசத்தை கைவிட மறுத்ததால் ஏப்ரல் 24, 1622 ஆம் ஆண்டு  இரக்கமற்று கொலை செய்யப்பட்டார்.

திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட் (Pope Benedict XIII) அவர்கள்  மார்ச் 24, 1729 ஆம் ஆண்டு இவருக்கு அருளாளர் பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் (Pope Benedict XIV) அவர்களால் 1746ல் புனிதர் பட்டமளிக்கப்பட்ட இப்புனிதர், ஆறு மாதங்களின் பின்னர் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்டார். இவருடைய நினைவுத் திருவிழா  ஏப்ரல் 24 ஆகும். 

புனிதர் ஆக்னெஸ் (St. Agnes of Montepulciano) 20-04-2017

ஏப்ரல் 19, 2017

புனிதர் ஆக்னெஸ் (St. Agnes of Montepulciano) 20-04-2017

டொமினிக்கன் மட தலைவி (Dominican Priores)

புனிதர் ஆக்னெஸ், டொமினிக்கன் துறவற சபையைச் சார்ந்த அருட்சகோதரியும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

ஆக்னெஸ், இத்தாலி நாட்டின் மான்டெபல்சியானோ அருகில் உள்ள "க்ராசியானோ"வைச் (Gracciano) சார்ந்த உயர் குடும்பத்தில் 1268ம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே இவர் சிறந்த கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருக்கு ஒன்பது வயது நடந்தபோதே டொமினிக்கன் துறவற சபையின் மடத்தில் இணைந்தார்.

அதன் பிறகு 1281ம் ஆண்டு, இவர் "ப்ரொசெனோ" (Proceno) நகரில் புதிதாக தொடங்கப்பட்ட துறவற மடத்திற்குச் சென்றார். 1288ஆம் ஆண்டு, தனது இருபதாம் வயதில் இவர் அந்த துறவற மடத்தின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் செப வாழ்வில் சிறந்து விளங்கினார். இயேசு கிறிஸ்துவிடம் அதிக அன்பு கொண்டிருந்தார்; அவரது வார்த்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.

"என் மேல் விசுவாசம் கொண்டிருப்பவர்கள் என்னைப் போன்று அதிசயங்களைச் செய்வர்" என்ற இயேசுவின் வார்த்தைகள், ஆக்னெசின் வாழ்க்கையில் சிறப்பான விதத்தில் உண்மையாகின. இவர் தனது வாழ்நாட்களிலேயே பல்வேறு அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தினார்.

ஆக்னெஸ் இயேசு கிறிஸ்துவின் பெயரால், மக்கள் பலரின் மன நோய்களையும், உடல் நோய்களையும் குணப்படுத்தினார். இயேசு கிறிஸ்து அப்பங்களைப் பெருகச் செய்தது போலவே, இவரும் அப்பங்களைப் பலமுறைப் பெருகச் செய்திருக்கிறார்.

1306ம் ஆண்டு, ஆக்னெஸ் டொமினிக்கன் மடம் ஒன்றை நிறுவினார். இந்த மடத்தில்தான் தாம் இறக்கும்வரை வாழ்ந்தார். 1317ல் இவர் மரித்த பின்பு, இவரது கைகளில் இருந்தும் கால்களில் இருந்தும் இனிமையான நறுமணம் வீசும் திரவம் ஒன்று கசிந்தது.

1726ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். மான்டெபல்சியானோ நகர புனிதர் ஆக்னெசின் அழியாத உடல், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

புனிதர் ஒன்பதாம் லியோ (Saint Leo IX) 19-04-2017

ஏப்ரல் 18, 2017

புனிதர் ஒன்பதாம் லியோ (Saint Leo IX) 19-04-2017

திருத்தந்தை (Pope)

திருத்தந்தை ஒன்பதாம் லியோ, ஜெர்மன் பிரபு குடும்பத்தில் ஜூன் 21, 1002 ஆம் ஆண்டு   பிறந்தவர். இவர் பெற்றோர் இவருக்கு 'புரூனோ' (Bruno of Egisheim-Dagsburg) என்று பெயர் சூட்டினர். புரூனோ, ஃபிரான்சு நாட்டிலுள்ள தூல் (Toul) என்ற ஊரில் கல்வி பயின்றார்.

இவர் படிக்கும்போதிலிருந்தே இவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர். புரூனோ சிறு வயதிலிருக்கும் போதிலிருந்தே பூசை உதவி செய்வதிலும், பாடல் குழுவோடு இணைந்து திருப்பலியில் பாடல் பாடுவதிலும், ஆடம்பர திருப்பலியில் பங்கெடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டிவந்தார். இறைவன் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தினமும் திருப்பலியில் பங்கெடுத்த புரூனோ, தானும் குருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டு குருவானார்.

புரூனோ குருவான பிறகு, ஜெர்மனியிலிருந்த அரசர் இரண்டாம் கோன்ராட் (Konrad II) அவர்களின் குடும்பத்திற்கு ஆன்மீக வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் திருச்சபையில் இருந்த அரசியலைப் பற்றியும் படித்தார். அதன்பிறகு ஃபிரான்சு நாட்டிற்கு இறையியல் படிப்பதற்காக அனுப்பப்பட்டார்.

அப்போது இவர் அப்போஸ்தலர் சீமோனின் வாழ்க்கை வரலாற்றை படித்து, அவரால் ஈர்க்கப்பட்டார். பின்னர் இறையியல் படிப்பை முடித்தபிறகு இத்தாலி நாட்டில் இருந்த அரசர் குடும்பத்திற்கு மீண்டும் ஆன்மீக வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் இத்தாலி நாட்டின் ஆயரின் உதவியாளராக பணியாற்றினார். அப்போது இத்தாலி மறைமாநிலத்திலிருந்த ஏழை எளியவர்க்கு ஆயரின் உதவியுடன் பலவிதமான உதவிகளை செய்தார். 
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். அப்போது திருச்சபையில் இருந்த கத்தோலிக்க ஆலயங்களின் வழியாகவும், துறவற இல்லங்களின் வழியாகவும், நாள்தோறும் ஏழைகளுக்கு உணவு கொடுத்தும், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும் வந்தார். இவரின் தாராள குணத்தை அறிந்த ஜெர்மனி மற்றும் பிரான்சிலுள்ள ஆயர்களும் புரூனோவுக்கு ஏழைகளை பராமரிக்க தேவையான உதவிகளை செய்தனர். பின்னர் இவர் ஃபிரான்சிலுள்ள லையன் (Lyon) என்ற மறைமாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புரூனோ ஆயராக இருந்தபோது திருத்தந்தை தமாசுஸ் (Damasus) திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
23 நாட்கள் மட்டுமே திருத்தந்தையாக இருந்தவர், கடுமையான காய்ச்சலால் தாக்கப்பட்டு இறந்துப்போனார். அதனால் அவரைப் பின்பற்றி திருச்சபையை வழிநடத்த புரூனோ அவர்களை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர்.

1049ம் ஆண்டு புரூனோ "ஒன்பதாம் லியோ" என்று பெயர் மாற்றம் பெற்று திருத்தந்தையானார். திருத்தந்தை ஒன்பதாம் லியோ திருச்சபையின் மோசமான நிலையைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். இதனால் திருத்தந்தையான சிறிது நாட்களிலேயே ஆயர்களின் மாநாட்டை கூட்டினார். இம்மாநாட்டிற்கு பொது மக்களையும் வரவழைத்தார். இதில் பங்குபெற்ற ஒவ்வொருவருமே திருச்சபையில் இருக்கும் குறை, நிறைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டது. அம்மாநாட்டின் இறுதியில் தனிப்பட்ட முறையில் ஐரோப்பாவிலிருந்த ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களையும், அரசர்களையும், மக்களையும் திருத்தந்தை சந்தித்து உரையாடினார். ஆடம்பர திருப்பலி நிறைவேற்றி, அருமையான மறையுரை வழங்கினார். புதிய ஆலயங்களும், துறவற மடங்களும் கட்ட அடிக்கல் நாட்டினார்.

ஐரோப்பிய நாடுகளைப் பார்வையிட்டபோது, அரசர்களால் மக்கள் படும் வேதனையை, திருத்தந்தை கண்கூடாக பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். இதனால் மக்களின் பசியையும், அவர்களின் அவல நிலையையும் போக்க தன் சொந்த வீட்டு பணத்தை எடுத்து உதவிசெய்தார். மக்களை வழிநடத்த நல்ல குருக்களை உருவாக்கினார். இதனால் ஐரோப்பிய அரசர்கள் மிகவும் ஆத்திரமடைந்து திருத்தந்தை ஒன்பதாம் லியோவை பிடித்து சிறையில் அடைத்தார்கள். ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் கழித்து சிறையிலிருந்து விடுவித்தனர். ஆனால் இவர் மேல் தொடர்ந்து பல பொய்க்குற்றங்கள் சாட்டப்பட்டன.

பின்னர் 1054ம் ஆண்டு மார்ச் 12ம் நாள் ரோம் சென்று திருத்தந்தை பதவியிலிருந்து விலகினார். 
52 வயதான திருத்தந்தை ஒன்பதாம் லியோ வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே திருத்தந்தையாக பதவி வகித்தார். ஆனால் இவ்வைந்து ஆண்டுகளில் கத்தோலிக்க திருச்சபைக்கு இவர் ஆற்றிய பணி எண்ணிலடங்காது.

பின்னர் 1054ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் உரோமில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் இறந்தார்.

இவரது உடல், பேதுரு பேராலயத்திலுள்ள, திருத்தந்தையர்களை அடக்கம் செய்துள்ள கல்லறையில், புனித யோசேப்பு பலிபீடத்தின் வலதுபுறத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு திருத்தந்தை ஏழாம் கிரகோரி (Pope Gregory VII) அவர்கள் 1082 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கினார். இவருடைய நினைவுத் திருநாள்  ஏப்ரல் 19 ஆகும். 

இவர் இறந்தாலும் மக்களின் மனங்களில் புனிதராகவே வணங்கப்பட்டு வருகின்றார். 

சமீபத்திய கட்டுரை
புனித ஸிட்டா (St. Zita of Lucca) 27-04-2017
புனிதர் மாற்கு (St. Mark) 25-04-2017
 புனிதர் ஃபிடேலிஸ் (St. Fidelis of Sigmaringen) 24-04-2017
புனிதர் ஆக்னெஸ் (St. Agnes of Montepulciano) 20-04-2017
புனிதர் ஒன்பதாம் லியோ (Saint Leo IX) 19-04-2017
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter