ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவிய ஜப்பான்

செப்டம்பர் 21, 2017

வடகொரியா தொடர் அச்சுறுத்தல் விடுத்து வருவதால், அதனை சமாளிக்க ஜப்பான் ராணுவம் ஹோக்காய்டோ தீவில் அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவியிருக்கிறது.

 

வடகொரியா 2 முறை தொடர்ச்சியாக ஏவிய ஏவுகணைகள் இரண்டு ஜப்பானின் வான் பரப்பை கடந்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

 

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜப்பானின் ஹோக்காய்டா தீவில் நாட்டு ராணுவம் செவ்வாய்க்கிழமையன்று அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவியுள்ளது.

 

ஜப்பானின் ராணுவ பலமும் அதிகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தகுதி நீக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை

செப்டம்பர் 21, 2017

தமிழ் நாட்டில் பெரும் அரசியல் திருப்பமாக தகுதி நீக்கப்பட்ட தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

தங்களை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடத்துவதற்கு தடை நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

 

சபாநாயகர் வழங்கிய தகுதி நீக்க உத்தரவிற்குத் தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. .

 

அடுத்த விசாரணை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியல் இன்னும் சற்று நாட்களுக்கு அமைதியாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குண்டர் தடுப்பு சட்டம் ரத்து, திருமுருகன் காந்தி விடுதலை

செப்டம்பர் 21, 2017

திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, புழல் சிறையில் இருந்து அவர்கள் புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

சிறையை விட்டு வெளியே வந்த அவர்களுக்கு தமிழக பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த மே மாதம் 21 ம் தேதி சென்னை மெரினாவில் ஈழப்போரில் இறந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் மற்றும் டைசன் ஆகியோர் முயற்சி செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட அவர்கள் நால்வரும், குண்டர் தடுப்புச்சட்டத்தின் வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 

இது தொடர்பான வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நீதி விசாரணையின் முடிவில், அவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

“தமிழின உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம்” என்று சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், திருமுருகன் காந்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

குஜராத் வளர்ச்சியை கேள்வி கேட்க தொடங்கியுள்ள இளைஞர்கள்

செப்டம்பர் 21, 2017

இந்தியாவின் குஜராத்தில் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தலைவலியும் அதிகரித்து வருகிறது.

 

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மீம்சுகளை வெளியிட்டு சமூகவலைதளங்களில் இளைஞர்கள் செய்யும் பரப்புரைக்கு அதிக ஆதரவும் கிடைத்து வருகிறது.

 

குஜராத் வளர்ச்சியடைந்து விட்டது என்பதை சுட்டிக்காட்டி, அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்து வருகிறது.

 

அதனை மாதிரியாக காட்டியே, இந்திய அளவில், அக்கட்சி ஆட்சியை பிடிக்கவும் செய்துள்ளது.

 

குஜராத்தில் 2 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்கு நிலவும் அவலநிலைகளை சுட்டிக்காட்டி, அங்குள்ள இளைஞர்கள் வலைதளங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

 

“குஜராத்தின் வெறித்தனமான வளர்ச்சி” என்ற வாசகத்தில் ஹேஸ்டேக் உருவாக்கி கொண்டு அங்கு காணப்படும் கரடு முரடான சாலைகள், எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி பாதிப்பு, விவசாயம் பாதிப்பு என்று புகைப்படங்களையும், மீம்சுகளையும் வெளியிட்டு இளைஞர்கள் கேலி செய்து வருகின்றனர்.

 

“எண்ணியல் இந்தியா” என்று மேலோட்டமாக சொல்லிக்கொண்டு பண மதிப்பு இழப்பால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பை மூடி மறைக்கும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக நவீன தொழில்நுட்பத்திலும் எதிரான பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

பாரதிய ஜனதாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சலில். சிலர் இதனை செய்து வருவதாக, அக்கட்சி தெரிவித்திருக்கிறது.

32 ஆண்டுகளுக்கு பிறகு மெக்ஸிகோவில் கடும் நிலநடுக்கம்

செப்டம்பர் 21, 2017

மெக்ஸிவின்  பியூப்லா நகரில் 7.1 அளவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 200க்கு மேலானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

 

இந்த கடும் நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள், பழமையான தேவாலயங்கள் இடிந்து தரைமட்டமாகிய காணொளி காட்சிகள் அந்நகரமே சின்னாபின்னமாகியுள்ளதை காட்டுகிறது.

 

கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்க மீட்புதவிப்படையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

 

இதில் 226 பேர் பலியாகியுள்ளதாகவும், இன்னும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. .

 

மெக்சிகோவை ஒட்டியுள்ள நாடுகளின் சில மாகாணங்களில் 12க்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

 

1985 ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நிகழந்த கடும் நிலநடுக்கத்திற்கு பின்னர், தற்போது, கடும் நிலநடுக்கம் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய கட்டுரை
ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவிய ஜப்பான்
தகுதி நீக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை
குண்டர் தடுப்பு சட்டம் ரத்து, திருமுருகன் காந்தி விடுதலை
குஜராத் வளர்ச்சியை கேள்வி கேட்க தொடங்கியுள்ள இளைஞர்கள்
32 ஆண்டுகளுக்கு பிறகு மெக்ஸிகோவில் கடும் நிலநடுக்கம்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter