இலங்கை அரசு இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க திட்டம்! :ஐ.நாவில் குமுறல்

மார்ச் 24, 2017

இலங்கை விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் நடந்த உள்நாட்டுச் சண்டையில், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

கொத்துக் குண்டுகளை எறிந்து, தமிழினத்தைக் கூண்டோடு அழித்த இலங்கை இராணுவத்தின் 'மனித உரிமை மீறலை' சர்வதேச நாடுகள் கண்டித்தன.

2009-ல் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, இனப்படுகொலை குறித்த விசாரணை ஐ. நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.

அதில், 'சர்வதேச நீதிபதிகளைக்கொண்டு இலங்கையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்' என்று 2015-ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தை இதுவரை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.

அதுமட்டுமன்றி, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு ஆண்டுகளில் மறுவாழ்வு மற்றும் உரிமைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்' என்ற தீர்மானத்தின் கால அவகாசமும் இந்த மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 34-வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில், மறுவாழ்வு மற்றும் உரிமைகள் குறித்த தீர்மானத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கோரும் தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் கொண்டு வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை மனிதத்தை கொல்கிறது. அநீதிக்கு ஆதரவாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இது கண்டனத்துக்கு உரியது.

மனித குலம் மன்னிக்கவே முடியாத வேலைகளையும் ஐ.நா செய்து வருகிறது. என இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ் ஈழ ஆதரவாளர்  இயக்குநர் கௌதமன் தெரிவித்தார். 

புதிய அமெரிக்க சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு : ட்ரம்ப் அதிரடி

மார்ச் 24, 2017

அமரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் வெற்றி பெறத் தேவையான எண்ணிக்கை இருப்பதால் தான் வெற்றி அடைய முடியும் என நேற்று வியாழக்கிழமை வலியுறுத்திய ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இந்த ஒத்திவைப்பு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்ட சுகாதார சட்டத்தின் சில பகுதிகளுக்கு பதிலாக வேறு சில அம்சங்களை செயல்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க சுகாதார மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

ஒபாமா கேயார் என்றழைக்கப்பட்ட சுகாதார மசோதாவினை திரும்பப் பெறுவதும், அதில் மாற்றம் கொண்டு வருவதும் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மையாக உள்ள குடியரசுக் கட்சியின் தலைவரான கெவின் மெக்கார்த்தி இது குறித்து கூறுகையில், அவை வாக்கெடுப்பு நடத்த வெள்ளிக்கிழமை தான் திட்டமிடப்பட்டிருந்தாலும், குடியரசுக் கட்சியினர் வியாழக்கிழமை மாலை சந்திப்பர் என்று தெரிவித்திருந்தார். அதன்படி அதிபர் ட்ரம்ப் சார்பில் வெள்ளை மாளிகை நிர்வாகிகளும், பால் ரயனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை. வெள்ளிக் கிழமை அனைத்து குடியரசுக் கட்சியினரும் மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

வடகொரியா தயாரிக்கும் பேரழிவை தரும் வெடிகுண்டு : அதிர்ச்சியில் உலக நாடுகள்

மார்ச் 24, 2017

கிம் ஜாங் ஆளும் வட கொரியாவில் இந்த மாத இறுதிக்குள் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கர வெடிகுண்டுகள் தயாராகி விடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியாவை ஆளும் சர்வாதிகாரி கிம் ஜாங் கடந்த வருடம் மட்டும் நான்கு ஏவுகணைகளை உருவாக்கி அதை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் அணுவாயுத சோதனையை அவர் எந்த நேரத்திலும் தொடங்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை அமெரிக்காவும், தென் கொரியாவும் உற்று நோக்கி வருவது முக்கிய விடயமாகும்.

அணுவாயுதத்தை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஒரு நகரையே அழிக்ககூடிய ஹைட்ரஜன் வெடிகுண்டு கிம் ஜாங் உத்தரவின் பேரில் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மாத இறுதிக்குள் அது பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது. இந்த விடயம் உலக நாடுகளிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இலங்கை போர்க்குற்ற தீர்மானம் : இந்தியாவின் முடிவு

மார்ச் 24, 2017

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் அளித்துள்ளார்.

கடந்த 2015ல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்ற இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்பட உள்ளது.

இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் தமிழர் அமைப்புகள் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:

எங்களது நோக்கம் இலங்கை தமிழர்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பதாகும். இதை இருவழிகளில் சாதிக்க முடியும். நிர்பந்தப்படுத்தியோ அல்லது புரியவைத்தோ அதை சாதிக்கமுடியும்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பான உறுப்பினர்களின் மன வேதனை எனக்குப் புரிகிறது.

இலங்கை மீதான தீர்மானத்தில் பொதுக் கருத்து அடிப்படையில் செயல்பட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு வழக்கு: முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு

மார்ச் 24, 2017

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார்.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், கச்சத்தீவு தமிழகத்தின் ஒருப்பகுதி எனவும், அதனை மீட்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 1998-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது பல்வேறு கட்டங்களை கடந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மனு தொடர்ந்த ஜெயலலிதா காலமாகிவிட்டதால் இனிமேல் இந்த வழக்கை விசாரிக்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு முடிவு பெற்று விட்டதாக கூறி நீதிபதி செல்லமேஸ்வர் வழக்கினை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய கட்டுரை
இலங்கை அரசு இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க திட்டம்! :ஐ.நாவில் குமுறல்
புதிய அமெரிக்க சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு : ட்ரம்ப் அதிரடி
வடகொரியா தயாரிக்கும் பேரழிவை தரும் வெடிகுண்டு : அதிர்ச்சியில் உலக நாடுகள்
இலங்கை போர்க்குற்ற தீர்மானம் : இந்தியாவின் முடிவு
கச்சத்தீவு வழக்கு: முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
அருங்கொடைப் பாடல்கள்03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
புனித சிலுவை பாதை06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
சிலுவை பாதையில் நாம்09:00 - 10:00
மெல்லிசை பாடல்கள் 10:00 - 11:00
உலக மீட்பர் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
உலகின் பேரொளி13:00 - 14:00
அருங்கொடைப் பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
இரக்கத்தின் ஆண்டவர்- சிலுவை பாதை16:00 - 17:00
மெல்லிசை பாடல்கள் 17:00 - 18:00
புனித சிலுவை பாதை18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
சிலுவை பாதையில் நாம்21:00 - 22:00
பொது பக்திப் பாடல்கள் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter