நியூயார்க்கில் உலகின் மிகப் பெரிய மினியேச்சர் உருவாக்கம்

ஏப்ரல் 05, 2017

 

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உலகின் மிகப் பெரிய மினியேச்சர் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த மினியேச்சரில் உலகத்தின் ஐந்து கண்டங்களின் மிக முக்கிய கட்டடங்கள் மற்றும் சுற்றுலா தளங்களும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த 49 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது என இதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். 


அமெரிக்காஸின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான குலிவேர்ஸ் கேட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மினியேச்சரில் இந்தியாவின் தாஜ் மஹால், பிரான்சின் ஈஃபில் டவர், லண்டனின் பக்கிங்காம் அரண்மனை, சிங்கப்பூரின் மெரினா பே உள்ளிட்ட 300 க்கும் அதிகமான கட்டடங்கள், சுற்றுலாத் தலங்களின் மாதிரிகள் மிக தத்ரூபமான வகையில் உருவாக்கப்பட்டு காட்சிபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 600 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதை உருவாக்கியுள்ளனர். உலகைப்போன்ற மினியேச்சரை உருவாக்குவார்தற்கு 260 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது இந்நிறுவனம். விரைவில் பொதுமக்களின் பார்வைக்கும் அனுமதி அளிக்கப்படும் எனவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் - உருவான கதை

மார்ச் 08, 2017

 

சர்வதேச மகளிர் தினம் - உருவான கதை

 

உலக பெண்கள்  தினமான மார்ச் 8 என்பது நம்மால் கொண்டதாக கூடியதாகவும், பெண்களை போற்றக் கூடிய நாளாகவும் இருக்கிறது. இந்த நாளின் பின்னணியில் உலக நாடுகளை சேர்ந்த பெண்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டங்களும், முயற்சிகளும் அஸ்தி வாரமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூயார்க் நகரில் பெண்கள் அமைப்பு ரீதியாக ஒன்று கூடி, அவர்களுக்கான உரிமைகளை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக 1910 ஆம் ஆண்டு டென்மார்க்கில் 'அனைத்துலக பெண்கள் நாள்' மாநாடு நடைப்பெற்று, அதில் 'சர்வதேச மகளிர் அமைப்பு' தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பாக 1911 ஆம்  ஆண்டு, மார்ச் 19 ஆம் நாளன்று ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து, மகளிர் பிரதிநிதிகள் ஒன்று கூடி முதல் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர். அப்போது மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1913 ஆம் ஆண்டிலிருந்து மார்ச், 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 

 

1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் 'செயின்ட் பீட்டர்ஸ்' நகரில் நடந்த பெண்கள் போராட்டத்தின்போது, உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அனுசரிப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு ஐ. நா சபையின் பெண்கள் அமைப்பு சார்பில் உலக மகளிர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதியை கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

 

நாய் காட்டிய நட்பின் மதிப்பு

அன்பு விசுவாசம் போன்ற பண்புகள் மனிதர்கள் மத்தியில் மறைந்து வரும் நிலையில், சில விலங்குகள் அந்தப் பண்புகளை வெளிப்படுத்தி வியக்க வைக்கின்றனர்.

 

உதாரணமாக, உக்ரைன் நாட்டில் நாய் ஒன்று இரண்டு நாட்களாக ரயில்வே தண்டவாளத்தில் போராடி, காயமடைந்த மற்றோரு நாயின் உயிரைக் காத்திருக்கிறது. உக்ரைனின் உஸ்கோ ரோட் கிராமத்தில் அச்சம்பவம் நடந்திருக்கிறது. அதை டெனிஸ் மலாபி யேவ் என்பவர் விடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ரயிலில் அடிப்பட்டு காயமடைந்த நாய் நகர முடியாமல் தண்டவாளத்தில் கிடக்கிறது. அதன் அருகே மற்றோரு நாய் தவிப்போடு வளைய வருகிறது.

 

திடீரென அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வருகிறது. ரயிலின் சத்தத்தை அறிந்த நாய், அடிப்பட்டுக் கிடக்கும் நாயின் தலையை தரையோடு தரையாக அழுத்திப் பிடிக்கிறது. இரண்டு நாய்களும் தண்டவாளத்தின் குறுக்கே கிடக்க, வேகமாக வரும் ரயில் நாய்களை பத்திரமாக கடந்து செல்கிறது.

 

இதுகுறித்து டெனிஸ், இரண்டு நாட்களாக அந்த நாய், அடிப்பட்டுக் கிடக்கும் நாயை ஒவ்வொரு முறை ரயில் கடக்கும்போதும் இவ்வாறு பாதுகாத்து வருவதாகவும், பனிப்பொழிவால் கடும் குளிர் நிலவியபோதும் அந்த நாய் அவ்விடத்தைவிட்டு அகலவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு பரபரப்பாக பரவ, அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து இரண்டு நாய்களையும் மீட்டு சிகிச்சை அளித்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிரபலங்களைப்பற்றி - அறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணாவின் 48 ஆவது நினைவு தினம் இன்று....

 

அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா  அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை அண்ணா அவர்கள் நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக  செப்டம்பர்  15, 1909-ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். ஒரு நடுத்தர வர்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்த  கா. ந. அண்ணாதுரை  அரசியலில் இறங்குவதுற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார். தமிழக முதல்வராக தன்னுடைய முதல்வர் பணியை சிறப்பாக செய்த அண்ணாவின் புகழ் சாதாரண  மக்களிடையே பெரும் புகழை தேடித் தந்தது.

 

ஆரம்ப வாழ்க்கை:

இவர் தனது பள்ளி படிப்பை சென்னையிலுள்ள பச்சையப்பா உயர்நிலைப்  பள்ளியில் தொடங்கினார். ஆனால் தன்னுடைய குடும்ப பொருளாதார  சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கிளர்க்காக வேலை புரிந்தார். பிறகு அவர்  தன்னுடைய பட்டப்  படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார்.

1930-ல் தனது 21வயதில்  ராணியை மணம் முடித்தார். பின்னர் 1934-ல் பி .ஏ (ஹானர்ஸ்) பட்டமும்,  பிறகு எம். ஏ (பொருளாதாரம் மற்றும் அரசியல்) முதுகலை  பட்டமும் பெற்றார். தன்னுடைய கல்லுரி வாழ்க்கைக்கு பிறகு ஆங்கில  ஆசிரியராக பச்சையப்பன் உயர்நிலைப்  பள்ளியில் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு பத்திரிக்கை மற்றும் அரசியலில் ஈடுபாடுகொண்ட அண்ணா தன்னை முழு அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

 

அண்ணாவின்  அரசியல் தொடக்கம் :

தனது கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் ஈடுபட மிகவும் ஆர்வம் கொண்ட அண்ணா  1934 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம் திருப்பூரில் நடந்த  ஒரு இளைஞர் மாநாட்டில் பெரியாருடனான முதல் சந்திப்பு ஏற்பட்டது. அவருடைய கொள்கைகள் மிகவும் அவரை ஈர்த்தது. அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார்.  பிறகு பெரியாருக்கும்  அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதி கட்சியிலிருந்து பிரிந்து  “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை 1949 ல் உருவாக்கினார்.

 

தமிழக முதல்வராக அண்ணா:

1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் தி.மு.க வெற்றிபெற்றது. மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். ஏப்ரல்-மே 1968 இல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற அமெரிக்க அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக  கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.

 

அண்ணாவின் இலக்கிய பங்களிப்பு:

அண்ணா  அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.  அவர் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும்  எழுதினார்.  அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா,  பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம்  இவரின் முக்கிய படைப்புகளாகும்.

 

இறப்பு:

1969 பிப்ரவரி 3 ஆம் தேதி  புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.  அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய கட்டுரை
அன்னை தெரேசாவும் மறைந்த முதலமைச்சர் ஜே ஜெயலலிதாவும் சந்தித்தபோது - காணொளி இணைப்பு
நியூயார்க்கில் உலகின் மிகப் பெரிய மினியேச்சர் உருவாக்கம்
சர்வதேச மகளிர் தினம் - உருவான கதை
நாய் காட்டிய நட்பின் மதிப்பு
பிரபலங்களைப்பற்றி - அறிஞர் அண்ணா
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter