இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (Annunciation of the Lord) 25-03-2017

மார்ச் 24, 2017

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (Annunciation of the Lord) 25-03-2017

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அல்லது மங்கள வார்த்தை அறிவிப்பு என்பது லூக்கா நற்செய்தி 1:26-38ல் உள்ளபடி கபிரியேல் தேவதூதர், கன்னி மரியாளுக்கு தோன்றி, அவர் தூய ஆவியினால் கருவுற்று ஒரு மகனைப் பெற்று இயேசுவின் தாயாவார் என்பதனை அறிவித்த நிகழ்வாகும். இந்த நிகழ்வின்போதே மரியாளிடம் கபிரியேல் தூதர் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, இயேசு என பெயரிடச்சொன்னார். மேலும், திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் மரியாளிடம் எடுத்தியம்பினார். மரியாளின் உறவினராகிய எலிசபெத்தும் தமது முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாளுக்கு அறிவித்தார்.

பல கிறிஸ்தவ பிரிவுகள் இந்நிகழ்வை மார்ச் 25ல் கொண்டாடுகின்றனர். இது இயேசு பிறப்புக்கு ஒன்பது மாதங்களுக்கு முன் என்பதுவும் இது இயேசுவின் பாடுகளின் காலத்தில் நிகழ்கின்றது என்பதும் குறிக்கத்தக்கது. இத்தேதியினை முதன் முதலில் இவ்விழாவுக்கென கொண்டவர் இரனேயு (காலம்.130-202) ஆவார்.

முக்காலத்தில் சம இரவு-பகல் நாளினை ஒட்டி இவ்விழா நிகழ்ந்ததால், இது புத்தாண்டாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையினரால் இந்நிகழ்வு முன்னறிவிப்பு பேராலயத்தில் நடந்ததாக நம்பப்படுகின்றது. ஆயினும் பிற கிறிஸ்தவ சபைகளிடையே இது குறித்த ஒத்த கருத்தில்லை.

கத்தோலிக்க திருச்சபையில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் முதல் மறைபொருள் ஆகும். நினைவுத் திருநாள்  மார்ச் 25.

புனிதர் கேத்தரின் (St. Catherine of Vadstena) 24-03-2017

மார்ச் 23, 2017

புனிதர் கேத்தரின் (St. Catherine of Vadstena) 24-03-2017

துறவி 

புனிதர் கேத்தரினின் தந்தை பெயர் 'உல்ஃப் குட்மர்ஸ்ஸன்' (Ulf Gudmarsson) மற்றும் அவரது தாய் பெயர் 'புனித பிர்ஜிட்டா' (St. Birgitta) ஆகும். இவர்  1331 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில்  பிறந்தார். 

கேத்தரின் தமது பனிரெண்டு அல்லது பதின்மூன்று வயதில் 'கைரேன் நகர பிரபு இக்கேர்ட்' (Lord Eggert van Kyren) என்ற உயர்குடியைச் சேர்ந்த ஜெர்மன் நாட்டு இளம் வேத பற்றுள்ள இளைஞனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கற்புடன் வாழ்வதாக ஒப்புக்கொண்டு இணக்கமாக வாழ்ந்தனர்.

1349ல், கேத்தரின் தமது தாய் பிரிஜெட்டுடன் உரோம் நகர் பயணப்பட்டார். ஆனால், அவர் உரோம் நகரை அடைந்தவுடன், தமது கணவர் இறந்து போனதாக செய்தியை அறிந்தார்.

இதனால், தமது தாயுடன் சேர்ந்து வாழ்ந்த கேத்தரின், தாயுடன் சேர்ந்து பல பயணங்கள் போனார். இப்படி, அவர் தம் தாயுடன் கிறிஸ்து பிறந்த புனித பூமிக்கும் சென்று வந்தார்.

தாய் பிரிஜெட் இறந்ததும், கேத்தரின் அவரது உடலுடன் ஸ்வீடன் திரும்பினார். 'வட்ஸ்டேனா' நகரின் பெரிய மடத்தில் (Great monastery of Vadstena) தாயின் உடலை அடக்கம் செய்தார்.

கேத்தரின், அவரது தாயாரால் நிறுவப்பட்ட 'வட்ஸ்டேனா' நகரின் மடத்திலுள்ள 'ப்ரிஜிடைன் பள்ளியின்' (Brigittine Convent) தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

சில வருடங்களின் பிறகு, அவர் தமது தாயின் புனிதர் பட்டம் சம்பந்தமான பணிகளுக்காக உரோம் நகர் சென்றார். அங்கே ஐந்து வருடங்கள் தங்கியிருந்த கேத்தரின், அங்கே 'புனித சியேன்னாவின் கேத்தரினுடன்' (Catherine of Siena) நெருங்கிய சிநேகிதமானார். இறுதியில் மார்ச் 24, 1381 ஆம் ஆண்டு வாட்ஸ்டேனா (Vadstena)வில் இறந்தார். இவருக்கு திருத்தந்தை எட்டாம் இன்னொசென்ட் (Pope Innocent VIII) அவர்கள் 1484 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கினார். இவருடைய நினைவுத் திருநாள்  மார்ச் 24 ஆகும்.

 

 புனிதர் டுரீபியஸ் ( St. Turibius of Mogrovejo ) 23-03-2017

மார்ச் 22, 2017

 புனிதர் டுரீபியஸ் ( St. Turibius of Mogrovejo ) 23-03-2017

பேராயர், மறைப்பணியாளர் (Archbishop, Missionary)

தென் அமெரிக்க நாடான பெரு'வில் இருபத்தாறு வருடங்களுக்கும் மேலாக புனிதர் "லிமா நகர ரோஸு'டன் (St. Rose of Lima) இணைந்து இறை பணியாற்றிய முதல் புனிதர் என்ற வகையில் புனிதர் டுரீபியஸ் அறியப்படுகின்றார்.

டுரீபியஸ், ஒரு ஸ்பேனிஷ் மறைப்பணியாளரும், 'லிமா' உயர் மறை மாவட்ட பேராயரும் (Archbishop of Lima.) ஆவார்.

ஸ்பெயின் நாட்டின் உயர் குடியில் 16 நவம்பர் 1538 ஆம் ஆண்டு  பிறந்த சிறந்த கல்விமானான டுரீபியஸ், புகழ் பெற்ற 'சலமான்கா' நகரின் பல்கலை கழகத்தின் (University of Salamanca) சட்ட பேராசிரியர் ஆனார்.

இவரது கல்வியறிவும் அறம்சார்ந்த புகழும் இவரை ஸ்பெயின் நாட்டின் பெரும் அதிகாரியாக, 'கிரனாடா' (Granada) நகர விசாரணை நீதி மன்றத்தில் இரண்டாம் பிலிப் மன்னரால் (King Philip II) பதவி பெற வைத்தது.

1578ல் கத்தோலிக்க குருவாக அருட்பொழிவு பெற்ற இவர், பெரு நகருக்கு அனுப்பப்பட்டார். மே 16, 1579ல் திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகொரியால் 'லிமா நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 1580ல் "செவில்" (Seville) உயர் மறைமாவட்ட பேராயர் "கிறிஸ்டோபல் ரோஜஸ் செண்டோவல்" (Cristóbal Rojas Sandoval, Archbishop of Seville) அவர்களால் பேராயராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

970 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிமா நகருக்கு நடை பயணமாக சென்றபடி தமது அருட் பணியை தொடங்கினார். எண்ணற்ற பூர்வீக குடியினருக்கு ஞானஸ்நானம் செய்வித்த டுரீபியஸ், அவர்களுக்கு கிறிஸ்தவ மறை போதனை செய்தார். "லிமா நகர புனித ரோஸ்" மற்றும் "புனித மார்ட்டின்" (St. Rose of Lima and St. Martin de Porres.) ஆகியோர் இவரால் திருமுழுக்கு பெற்று மறை போதனை பெற்றவர்களே.

இவர் சாலைகள், உறைவிட பள்ளிகள், பல பள்ளிகள், மருத்துவமனைகள், மற்றும் கிறிஸ்தவ தொழுகைக் கூடங்களைக் கட்டினார். 1591ல், மேற்கு துருவத்தில் (Western Hemisphere) முதல் குருத்துவ பள்ளியை (First Seminary) நிறுவினார். 2 ஃபெப்ரவரி 1604ல், 'மூன்றாம் லிமா பேராலயத்தின்' (Third Lima Cathedral) முதல் பகுதியை திறந்து வைத்தார்.

டுரீபியஸ், தமது பணி காலத்தில் பதின்மூன்று பேராய மாநாடுகளைக் (Diocesan Synods) கூட்டினார். மூன்றுமுறை மாகான சபைகளுக்கான (Provincial Councils) கூட்டங்களைக் கூட்டினார். இவரது காலத்தில், லிமா (Lima) மகத்தான உயர் மறைமாவட்டமாக (Immense Archdiocese) மாறியது.

பெரு நாட்டு ஆட்சியாளர்களுக்கெதிராக மக்களின் குடியுரிமைகளுக்காக போராடிய இவர், அம்மக்களால் தங்களது பரிந்து போராடும் தலைவராக பார்க்கப்பட்டார். அங்குள்ள பேச்சு வழக்கினைக் கற்றுக்கொண்ட இவர், எண்ணற்ற பூர்வீக குடிகளை கிறிஸ்தவர்களாக மாற்றினார்.

தாம் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னமே இவர் தமது இறப்பின் நாளையும் நேரத்தையும் கணித்தார். இருப்பினும், தமது இறை பணியை விடாது செய்து வந்தார். "பகஸ்மயோ" (Pacasmayo) என்ற இடத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், தமது பணியைத் தொடர்ந்தபடியே, மிகவும் மோசமான நிலையில் "ஸனா" (Sana) வந்தடைந்தார். தாம் கணித்தபடியே 23 மார்ச் 1606 அன்று மரணமடைந்தார்.

டுரீபியஸ், தமது பணி காலத்தில் எண்ணற்ற குருக்களுக்கும் ஆயர்களுக்கும் பேராயர்களுக்கும் அருட்பொழிவு செய்வித்தார். திருத்தந்தை பதினோராம் இன்னொசென்ட்
(Pope Innocent XI) அவர்கள் ஜூலை 2, 1679 ஆம் ஆண்டு இவருக்கு  முக்திபேறு பட்டம் அளித்தார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (Pope Benedict XIII) அவர்கள் 1726 ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். இவருடைய நினைவுத் திருநாள்  மார்ச் 23 ஆகும். 

புனித நிக்கோலஸ் ஓவென் (St. Nicholas Owen) 22-03-2017

மார்ச் 21, 2017

புனித நிக்கோலஸ் ஓவென் (St. Nicholas Owen) 22-03-2017

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் 
நாற்பது மறை சாட்சிகள்
(Forty Martyrs of England and Wales)

இங்கிலாந்து நாட்டின் முதலாம் எலிசெபெத் மகாராணி (Queen Elizabeth I) மற்றும் அரசன் முதலாம் ஜேம்ஸ் (James I ) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க துறவியர் ஒளிந்து கொள்ளும் இடங்களைக் (Priest Holes) கட்டியதாக அறியப்பட்ட புனித நிக்கோலஸ் ஓவென், ஒரு இயேசு சபை அருட்சகோதரர் (Jesuit Lay Brother) ஆவார்.

இவரது கடைசி கைதுக்குப் பின், இவர் இங்கிலாந்து நாட்டின் சிறைத்துறை அதிகாரிகளால் லண்டன் கோபுரத்தில் வைத்து சாகும்வரை துன்புறுத்தப்பட்டார்.

1562ல், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு (Oxford) நகரில் பக்தியுள்ள கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர் வளர்ந்த காலத்தில் 'குற்றவியல் நடைமுறை சட்டங்கள்' (Penal Laws) அமலில் இருந்தன. இவரது தந்தை "வால்ட்டர் ஓவென்" (Walter Owen) ஒரு தச்சுத் தொழிலாளி ஆவார்.

1577ல், தச்சுத் தொழிலில் தொழிற்பயிற்சி பெற்ற இவர், சுமார் பதினெட்டு வருடங்கள் கத்தோலிக்க துறவியர் ஒளிந்து கொள்ளும் இடங்களை கத்தோலிக்க குடும்பங்களில் கட்டினார். இவர் அடிக்கடி ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு "லிட்டில் ஜான்" ("Little John") என்ற பெயரில் பயணித்தார். மற்றும், "லிட்டில் மைக்கேல்", "ஆண்ட்ரூவெஸ்" "ட்ராப்பர்" ("Little Michael", "Andrewes", and "Draper") ஆகிய புனைப்பெயர்களையும் உபயோகித்தார். பகல் நேரங்களில் சந்தேகத்தின் திசை திருப்புவதற்காக, தாம் ஒரு பயணம் செய்து பணி புரியும் தச்சுத் தொழிலாளியாக தம்மைக் காட்டிக்கொண்டார்.

சற்றே குள்ளமான உருவம் கொண்ட நிக்கோலஸ், குடலிறக்க (Hernia) நோயால் அவதிப்பட்டார். இருப்பினும், அவருடைய பணிகள் பாதிக்கப்படவில்லை. அவர் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே, அதுவும் தனிமையிலேயே பணிபுரிந்தார். அவருடைய பணியின் நேர்த்தியானது, இன்றளவும் அவர் கட்டிய பல மறைவிடங்கள் கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளன.

1594ல், கைது செய்யப்பட்ட இவர், ஒரு கோழிப் பண்ணையில் வைத்து துன்புறுத்தப்பட்டார். ஆனாலும் இவரிடமிருந்து உண்மைகள் எதுவும் வெளிப்படவில்லை. ஒரு பணக்கார கத்தோலிக்க குடும்பத்தினர் இவருக்காக அபராதத் தொகையைக் கட்டி இவரை விடுவித்தனர். நிக்கோலஸ் மீண்டும் தமது பணியை தொடர்ந்தார்.

1597ல், அருட்தந்தை 'ஜான் ஜெரார்டு' (Father John Gerard, S.J) லண்டன் கோபுர சிறைச் சாலையிலிருந்து தப்பிக்க மூளையாக இருந்து செயல்பட்டவர் நிக்கோலஸ் என்று இன்றளவும் நம்பப்படுகிறது.

இறுதியாக, 1606ல் கைது செய்யப்பட்ட நிக்கோலஸ், தேம்ஸ் நதியின் தெற்குக் கரையோரம் (Southern Bank of the Thames) உள்ள 'மார்ஷல்சீ' (Marshalsea) சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், லண்டன் கோபுர சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டார். கொடிய துன்புறுத்தல்களின் பிறகும் அவர் கத்தோலிக்க துறவியரின் மறைவிடங்களைப் பற்றிய உண்மைகள் எதையும் வெளியிடவில்லை. பலவாறான சித்திரவதைகளின் பிறகு, அவர் 1606 மார்ச் மாதம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய நாட்களின் இடைப்பட்ட காலத்தில் உயிர் துறந்தார்.

நிக்கோலஸ் ஓவென் கத்தோலிக்க திருச்சபையின் புனிதராக 25 அக்டோபர் 1970 அன்று திருத்தந்தை ஆறாம் பால் அவர்களால் அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். இவருடைய நினைவுத் திருநாள்  22 மார்ச் ஆகும். 

அருளாளர் ஜான் (Blessed John of Parma) 21-03-2017

மார்ச் 21, 2017

அருளாளர் ஜான் (Blessed John of Parma) 21-03-2017

ஃபிரான்சிஸ்கன் சபையின் தலைவர் (Minister General of Franciscan Order)

அருளாளர் ஜான், ஒரு இத்தாலிய ஃபிரான்சிஸ்கன் துறவியும், (Italian Franciscan Friar) ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையின் ஏழாவது தலைமைப் பொறுப்பாளர் ஆவார் (Ministers General of the Order of Friars Minor). புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ் (Saint Francis of Assisi) மரித்ததன் பின்னர், ஃபிரான்சிஸ்கன் சபையின் (Franciscan Order) முன்னிருந்த எளிமையும் பணிவும் நிறைந்த நிலையினை திரும்ப கொண்டுவர அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைவரும் அறிந்ததே. அவர் வாழ்ந்த காலத்தின் குறிப்பிடத்தக்க இறையியலாளரும் (Theologian) ஆவார்.

சுமார் 1209ல், வடக்கு இத்தாலியின் பிராந்தியமான 'பார்மாவில்' (Parma) நகரில் பிறந்த ஜான், பார்மாவிலுள்ள புனித லாசரஸ் ஆலயத்தின் (Church of St. Lazarus at Parma) அருட்பணியாளரான தமது மாமனின் ஆதரவில் கல்வி கற்றார். கற்றலில் இவருக்கு இருந்த ஆர்வமும் வேகமும், இவர் விரைவிலேயே 'தத்துவ ஞான சாஸ்திர' (Philosophy) ஆசிரியராக உதவின.

இவர் ஒரு கத்தோலிக்க குருவாக குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்ட இவர், 'பொலொக்னா' மற்றும் நேப்ள்ஸ் ஆகிய (University of Bologna and the University of Naples) சர்வகலாசாலைகளில் 'தத்துவ ஞான சாஸ்திரம்' கற்பித்தார். இறுதியில், 'பாரிஸ் பல்கலைகழகத்தில்' (University of Paris) 'பீட்டர் லம்பார்ட்' அவர்களின் வார்த்தைப் பாடுகளை (Sentences of Peter Lombard) கற்பித்தார்.

1245ல், திருத்தந்தை "நான்காம் இன்னொசென்ட்" (Pope Innocent IV) ஃபிரான்ஸ் (France) நாட்டின் லியோன்ஸ் (Lyons) நகரில் போது மாநாடு ஒன்றினை கூட்டினார். அதில் பங்குபெற வேண்டிய, அப்போது தலைமைப் பொறுப்பிலிருந்த துறவி "க்ரெசென்ஷியஸ்" (Crescentius of Jesi) நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தால் செல்ல இயலவில்லை. அவரது பிரதிநிதியாக செல்ல ஜான் நியமிக்கப்பட்டார். அம்மாநாட்டில், அங்கு கூடியிருந்த திருச்சபையின் அனைத்து தலைவர்களிலும் இவர் ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தினார்.

இரண்டு வருடங்களின் பின்னர் ஃபிரான்சிஸ்கன் சபையின் தலைமைப் பொறுப்பிற்கு நடந்த தேர்தலில் தலைமை தாங்கிய அதே திருத்தந்தை "நான்காம் இன்னொசென்ட்" (Pope Innocent IV), இரண்டு வருடத்தின் முன்னர் நடந்த போது மாநாட்டின் நிகழ்வுகளை நினைவில் இருத்தி, துறவி ஜான் அந்த பதவிக்கும் பொறுப்பிற்கும் பொருத்தமானவர் என்று ஜானையே தேர்ந்தெடுத்தார்.

தலைமைப் பொறுப்பினை ஏற்ற ஜான், சபையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் நடை பயணமாகவே சென்றார். அவரது தாழ்ச்சி மற்றும் பணிவு காரணமாக பல மடங்களில் அவரை அங்குள்ள துறவியர் அடையாளம் காணவேயில்லை. ஓரிரு நாட்கள் அங்கே தங்கியிருந்து அங்குள்ள நடவடிக்கைகளை கண்காணிப்பார்.

ஜானுக்குப் பிறகு, புனிதர் "பொனவென்ச்சுரா" (Saint Bonaventure) சபையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். தமது இறுதி காலத்தில் குருத்துவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், க்ரேஸ்ஸியோ நகரில் (Greccio) உள்ள ஆசிரமத்தில் தமது ஜெப வாழ்வைத் தொடர்ந்தார். 1274ல், ஆர்த்தோடாக்ஸ் (Orthodox) கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ ஒற்றுமைக்கு எதிராக செயல்பட ஆரம்பித்த காரணத்தால், என்பது வயதான ஜான், தமது இறுதி சக்தி முழுவதையும் கிறிஸ்தவ ஒற்றுமைக்காக உழைக்க முடிவெடுத்தார். திருத்தந்தை "நான்காம் நிகோலஸ்" (Pope Nicolas IV) அவர்களின் அனுமதி பெற்று, கிரீஸ் (Greece) பயணமானார். ஆனால், அவரால் "கமேரினோ" (Camerino) வரை மட்டுமே பயணிக்க முடிந்தது. தீவிர நோய்வாய்ப்பட்ட அவர், அங்கேயுள்ள துறவிகள் மடத்தில், 19 மார்ச் 1289 அன்று மரணமடைந்தார்.

1777ல், ஜான் திருத்தந்தை ஆறாம் பயஸ் அவர்களால் அருளாளராக முக்திபேறு பட்டமளிக்கப்பட்டார். இவருடைய நினைவுத் திருவிழா  21 மார்ச் ஆகும்.

சமீபத்திய கட்டுரை
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (Annunciation of the Lord) 25-03-2017
புனிதர் கேத்தரின் (St. Catherine of Vadstena) 24-03-2017
 புனிதர் டுரீபியஸ் ( St. Turibius of Mogrovejo ) 23-03-2017
புனித நிக்கோலஸ் ஓவென் (St. Nicholas Owen) 22-03-2017
அருளாளர் ஜான் (Blessed John of Parma) 21-03-2017
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
அருங்கொடைப் பாடல்கள்03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
புனித சிலுவை பாதை06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
சிலுவை பாதையில் நாம்09:00 - 10:00
மெல்லிசை பாடல்கள் 10:00 - 11:00
உலக மீட்பர் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
உலகின் பேரொளி13:00 - 14:00
அருங்கொடைப் பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
இரக்கத்தின் ஆண்டவர்- சிலுவை பாதை16:00 - 17:00
மெல்லிசை பாடல்கள் 17:00 - 18:00
புனித சிலுவை பாதை18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
சிலுவை பாதையில் நாம்21:00 - 22:00
பொது பக்திப் பாடல்கள் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter